Log in

RegisterFriday, 07 August 2020 12:59

பத்தினி கேட்ட கூலி

Written by GEETHA PANDIAN
Rate this item
(1 Vote)
பத்தினி கேட்ட கூலி பத்தினி கேட்ட கூலி K BALACHANDER
இயக்குனர் பாலசந்தரின் இயக்கத்தில் வெளியான பத்தினி கேட்ட கூலி. பாலசந்தர் உடைய பாணியாக இத்தனை வருடம் நாம் பார்த்தவை, மிடில் கிளாஸ் வாழ்க்கையின் எளிமை, குடும்பத்தில் உள்ள சோகம், அதிலிருந்து அவர்கள் மீண்டு வரும் சூழல். 
 
அதே கதைகளம், பத்தினி கேட்ட கூலி. ஒரு பொன்ன பெத்து வளத்து படிக்க வைச்சு ஒரு கல்யாணம் காட்சிப் பண்ணி வைக்கறத்துக்குள்ள ஒரு மிடில் கிளாஸ் மக்கள் படற பாடு பெரும்பாடு. அதுலையும் தகப்பன் இல்லாம குழந்தைய வளர்த்து நிம்மதியா வாழ வைக்கறது அப்படியொரு கஷ்டம்னு இந்த தொடர்ல நம்மில் பலர் படும் கஷ்டங்களை  நமக்கு சுட்டிக்காட்டியுள்ளார் இயக்குனர் இமயம் பாலசந்தர்.
 
பாலசந்தருடைய தொடர்களில் மிக சில முக்கிய கதாபாத்திரம் மட்டுமே இருப்பர். அந்த பாத்திரங்களுக்கே உரிய தன்மை, கதையில் மிக முக்கிய பங்கு வகிக்குமாறு எழுதியிருப்பார்கள். 
 
மிடில் கிளாஸ் தாய் படும்பாட்டையையும், வலியையும் அற்புதமாக வெளிப்படுத்தியிருப்பர். தம்பி என்பவன் ஒரு அக்காவை கரை சேர்த்துவற்குள் உழைத்து ஓடாக தேய்வது மட்டுமில்லாமல் எதையும் அமைதியாக ஏற்கொள்ளும் பொறுமையுடையவன். தம்பிக்கு ஆறுதல் சொல்லும் காதலி, தேவையில்லாமல் மூக்கை நுழைக்கும் கதாபாத்திரங்கள்...
 
எந்த தப்பும் செய்யாமல் ஒரு மகளாக பிறந்த ஒரே காரணத்தினால் பிறந்த வீட்டிலுள்ள கடமையை செய்ய முடியாமல் இருப்பவர்களுக்கு பாரமாகவும், புகுந்த வீட்டில் உரிமையில்லாமல் அடிமையாக வாழும் கொடுமைக்குள் சிக்கர ஒருத்தி. 
 
பணம் தான் முக்கியம், அத விட உறவுகள் அனைத்தும் ஒன்னுமில்லனு நினைக்கற மருமகன். பணம் இருந்தால் பணத்தால எத வேணாலும் வாங்கிடலாம் என்பது ஒரு ரகம்னா, இருக்கற பணத்த செலவே பண்ணாம வைச்சிருந்தால் பணம் நம்ப கிட்டையே இருக்குமே நினைக்கறது இன்னொரு ரகம். பணத்தை முதலா போட்டு பணத்தை எடுக்கனும், தேவையில்லாத செலவு செய்து பணத்த வீண் செய்யக்கூடாதுனு நினைக்கற ஒருத்தன். 
 
இந்த கதையில் வரதட்சனை முக்கிய பங்கு வகிக்குது. மாப்பிள்ளை கேட்ட வரதட்சனையை தர முடியாத சூழ்நிலையில் குடும்பம். தன் வீட்டிலிருந்து மாசம் மாசம் வட்டியாக வரதட்சனை தந்து பின்னர், புகுந்த வீட்டில் சேவகம் செய்து அப்படி வாழ்வதை விட என் வீட்டில் வாழாவெட்டியாகவே காலத்தை போக்கிடுவேன் என்று நினைக்கும் மகள் குயிலி. தலையை வித்தாவது வரதட்சனை கொடுத்து மகளை வாழ வைக்க தினப்பொழுதும் போராடும் மகளைப்பெற்ற தாயும், தம்பியும். 
 
இதை விட கொடுமை, வரதட்சனைக்கு பதிலாக, சீறுநீரகத்தை வாங்கி வரதட்சனை கணக்கை கழித்த மருமகன். இதப் பற்றி தெரிந்துக்கொண்டு, பெண்ணாக பிறந்த பாவத்துக்காக பிறந்த வீட்டில் ஒவ்வொருவரும் படும்கஷ்டத்தை விட தன் மகள் வாழாமல் வீட்டில் இருக்கிறாள் என்பதே பெரும் பாரமாக இருக்கிறது என்பதை புரிந்துக்கொண்டும், புருஷன் கேட்ட வரதட்சனையை கழிக்க, தாய் கொடுத்த சீறுநீரகத்தை பதில் வைத்துக்கொண்டும்,
 
வீட்டுக்கு பெயிண்ட் அடிக்கும்போது, ஏணியிலிருந்து கீழே விழுந்து கால் உடைந்த ஆண் மகன், தன் புருஷனை பாதுக்கொள்ளவும், வயதான மாமியாரை பராமரிக்கவும், வீட்டுவேலைச் செய்யவும் தினங்கூலி கேட்டு வாங்கி பின்னர் தினசரி வேலையைச்செய்கிறாள் பத்தினி. 
 
அந்த கால சூழலுக்கு சரிய்ன பதிலடி பத்தினி கேட்ட கூலி சரிதானே ....
-பாலசந்தர்
 
-கீதாபாண்டியன் #geethapandian 
Read 25 times
Login to post comments

Calendar

« September 2020 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
  1 2 3 4 5 6
7 8 9 10 11 12 13
14 15 16 17 18 19 20
21 22 23 24 25 26 27
28 29 30