Log in

RegisterWednesday, 20 May 2020 09:28

முதியோர்க்கான வாழ்க்கையே-அடுத்த வீட்டு கவிதை

Written by GEETHA PANDIAN
Rate this item
(1 Vote)
S.P. பாலசுப்ரமணியம் லட்சுமி S.P. பாலசுப்ரமணியம் லட்சுமி அடுத்த வீட்டு கவிதை
முதியோருக்கும் மனசு இருக்கு-கே.பாலசந்தர்..
 
திரு. கே.பாலசந்தர் இயக்கி ஜன்னல் வெளியிட்ட அடுத்த வீட்டு கவிதை. 1990 களில் சன்டிவியில் ஒளிப்பரப்பாகியது. முதியோருக்கும் மனசு இருக்கு. அவங்களுக்கும் ஒரு வாழ்க்கையிருக்கு. நட்பு மட்டும் கொண்டு எந்த எதிர்பார்ப்புமும் இல்லாமல் ஒரு ஆண் பெண் வாழ முடியும் என்பதே கதை. சொந்த வீட்டிற்காக அவர்கள் எவ்வளவு செய்திருப்பர். 
 
ஒரு கட்டத்தில் தாய் தகப்பனை மதிக்கவே இல்லாமல் அவமதிக்கும் பிள்ளைகள். சொந்த வீட்டியினர் இடத்தில் அன்பு குறைந்தாலும் பிரச்சனை, அன்பு அதிகரித்தாலும் பிரச்சனை. முதியோருக்கு எதுவும் தேவையில்லை. பேச்சுத்துணைக்கு ஆள் இருந்தாலே போதும் என்பதைப்பற்றியும் மகளை தாய்தந்தை வளர்ப்பதற்கும் தந்தை மட்டும் வளர்ப்பதற்கும் உள்ள வித்தியாசம். மகனை தாய் மட்டும் வளர்ப்பதற்கும் இருவரும் சேர்த்து வளர்ப்பதற்கும் உள்ள வித்தியாசத்தைச் சொல்லக்கூடிய சீரியல்.
 
இதில் லட்சுமி மற்றும் S.P. பாலசுப்ரமணியம் மற்றும் பலர் நடித்துள்ளனர். திரைப்படங்களில் பாடல்கள் பாடிக்கொண்டு பிஸியாக இருந்த காலம் 1990 என்பது அப்போது அவளுக்கென தனி முத்திரையை சின்னத்திரையில் பதித்திருந்தார் SPB. இந்த சீரியலில் பெரும்பாலும் GK உடைய சூழ்நிலைகளைப் பாடல்களாகப் பாடியிருப்பார். லஷ்மி அந்த காலகட்டத்திலும் கதாநாயகியாகவும், ரஜினி போன்ற பெரும் நடிகய்களுக்கு அம்மாவாகவும் நடித்திருப்பார். அப்போது சின்னத்தியையிலும் காலை பதித்திருந்தார். பூவிலங்கு மோகன் ஒரு நல்ல வேடத்தில் தனிதன்மையிலும் நடித்திருப்பார். மேலும் கிருஷ்ணன், ரேவதிசங்கரன், T.S.ராகவேந்தர், ரவிசங்கர், ரஞ்சினி, பாரதி, பிரியாமகாலட்சுமி, ராஜசேகர், சோபனா, பீரதீபா, மீரா, ஜெனிபர் போன்றோர் நடித்திருப்பர்.
 
 இந்த சீரியலில் எடிட்டிங் சிறந்த ஒன்றாக எண்ணலாம். GK மற்றும் கல்யாணி தனி வீட்டில் வாழும்போதும் பிரியா மகேஷ்க்கு நல்லதுக்கெட்டது சொல்லி தரும்போதும் இடையில் நடக்கும் எதாவது ஒரு நிகழ்வு ஏற்கனவே அவர்வர் வீட்டில் நடந்திருக்கும் அதை தொடர்புப்படுத்தி  Flashback வரும். இரு குடும்பமும் மனம் திருந்தும் இடத்தில் நேரடி காட்சியாக இருக்கும்.
 
இடையில் வரும் Flash Back: தன் ஒரே மகனை வளர்த்து கல்யாணம் பண்ணி வைத்து விட்டு மருமகளையும் பேத்தியும் தங்கமாக பாத்துக்கொண்டு இருக்கும் உலக தெரியாத மாமியார். மகன் அமெரிக்காக்குப்போன பிறகு மருமகளுடைய பெற்றோருக்கும் தனக்கும் ஏற்பட்ட சண்டையில் வீட்டை விட்டு முதியோர் இல்லத்தை வந்து அடைகிறாள் கல்யாணி. 
 
முதியோர் இல்லத்தில் அனைவருக்கும் சமையல் செய்துப்போட்டு தங்கிக்கொண்டிருக்கையில் அங்குள்ள ஒரு கிழவனுக்கு கல்யாணி அம்மா மேல காதல் உணர்வு வருகிறது. அந்த தொல்லையை தாங்காமல் இருக்கும்போது, 
 
தன் ஒரே மகளை வளர்த்து ஆளாகினார்.  அவள் வாயிலிருந்து வரும் அர்த்தமற்ற சொல்லை தாங்க முடியாமல் நிம்மதி தேடி முதியோர் இல்லத்திற்கு வரும் முன்னால் Government employ  GK ஐயா. 
 
GK ஐயா, உலகத்தைப் பற்றி கல்யாணி அம்மாக்கு சொல்லிக்கொடுக்கிறார். இருவருக்குள்ளும் அன்பும் நட்பும் புரிதலும் வளர்கிறது. அவர் அவர் குடும்ப பிரச்சனைகளை பேசி பகிர்ந்து நிம்மதி அடைக்கின்றனர். ஆனால் முதியோர் இல்லத்திலுள்ள அனைவரும் இருவரையும் வைத்து தப்பாக பேசுக்கின்றனர். 
 
இது பத்தாது என்று GK உடைய மகளும் வந்து அசிங்கப்படுத்திட்டு போயி விடுகிறாள். சந்தோஷத்தை தொலைத்தவர்கள் தனியாக வீட்டுயெடுத்து தங்கினார்கள். இனி யார் பேச என்னவிருக்கு. 
 
நேரடி நிகழ்வுகள்: அப்போது, மிகவும் சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் வாழ்கின்றனர். அவர்கள் குடியிருக்கு வீட்டிற்கு மேல ஒரு புது தம்பதி கணவன் மனைவி வருகின்றனர். அவர்களுடன் ஒரு நல்ல நட்பு ஏற்படுகிறது. மேல் வீட்டுக்காரர்கள் சண்டை சர்ச்சையுடன் இருப்பதும்,  தனியாக சந்தோஷமாக இருப்பதற்காக கணவனை அவன் குடும்பத்திலிருந்து பிரித்து கூட்டிட்டு வந்திட்டாள் என்பதும் கீழே உள்ள  GK கல்யாணி பொறனி பேசுவதும் என்றும் போகிறது. 
 
அந்த தம்பதி பிரியா, மகேஷ் க்கு கீழே குடியிருப்பவர்கள் தம்பதி அல்ல. வெறும் நண்பர்கள் என்று தெரிய வருகிறது. 
" காதல் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்ட எங்களுக்கே எப்போ பார்த்தாலும் சண்டை வருகிறது. நீங்க எப்படி இவ்வளவு பூரிதலுடன் சண்டையில்லாமல் இருக்கேங்க" என்று ஆனால் அவர்வர் வாழ்க்கை அனுபவங்கள் பட்டயடிகள் தான் இருவரையும் நட்பாகியது என்று புரிந்துக்கொள்ள முடியவில்லை.
 
பிரிந்துப்போன பிரியா மகேஷ் சை சேர்த்து வைக்க GK கல்யாணி பல முயற்சிகளை எடுக்கின்றனர். இடையில் GK உடைய மகளுக்கு குழந்தை பெறும் பாக்கியம் இல்லாமல் போனதால்  அப்பா மீதி அன்பு பெருகியது. கல்யாணி உடைய மகனும் அமெரிக்காவிலிருந்து வந்ததால் தன் அம்மாவை தொரத்தி அடித்த விஷயம் கேள்விப்பட்டு வீட்டில் சண்டை ஆயிற்று. எப்படியோ பிரியாவையும் மகேஷ்யையும் சேர்த்து வைத்தனர். 
 
பின்னர் இரண்டு குடும்பங்களும் தனது தவறை உணர்ந்து ஒன்றாகி சேர்ந்தனர். பின்னர் தன் தாயை மகனும், தன் தகப்பனை மகளும் பிரித்து கூட்டிட்டு போகிறப்போது, எத்தனை நாள் நட்பும் அன்பும் இல்லாமல் பிரிந்துப்போக முடியாமல் கண்ணீருடன் சென்றனர். 
 
வீட்டுக்குப்போனால், அதிகப்படியான அன்பு வைப்பதாக நினைத்து, அப்பாக்கு எந்த நோய் இருந்தால் என்ன?  அவரு ஆசைப்பட்டதை சாப்பிடனும் என்று கட்டாயப்படுத்துவது, கல்யாணியை பத்திய ஞாபகங்களை பேசும்போது கோபம்படுவது,  அப்பா கல்யாணியோட போன் பேசாமல் இருக்க வோரை கட் பண்ணுவது, வெளியே போயி கல்யாணிய பார்க்காமல் இருக்க வீட்டை வெளியே பூட்டிருட்டுப்போவது என்றெல்லாம் செய்வது.
 
வீட்டுக்குப்போனால், அதிகப்படியான அன்பு வைப்பதாக நினைத்து, அம்மாவை எந்த வேலையும் செய்ய விடாமல் இருப்பது, பால் குடிங்க, அத சிப்பிடுங்க இத சாப்பிடுங்க, பெட்ல படுங்க,  எஸி போட்டுக்கோங்க. தனியா ஏன் பௌம்புறைங்க,  கோவிலுக்கு போகாதீங்க, தனியா போகறீங்க, அந்த ஆளு எதுக்கு போன் பண்ணறான். இத்தனை வயதுக்கு அப்பறம் உனக்கென்ன அப்படியொரு காதல் கேக்குது. அவரு இல்லாம உன்னால இருக்க முடியாதா என்று தப்பு தப்பா பேசுகிறான். 
 
கோபத்தில் ஏன்டா எனக்கொரு துணை வேணும்னா, 22 வயது உன்னை கொடுத்துட்டு செத்து போனாரே அப்போவே தேடிக்கத்தெரியாதா, பெத்த அம்மாவ இப்படி பேசறையே, எனக்கு உலகம்னா என்னனு சொல்லிக்கொடுத்தாருடா, இநீத அனாதைக்கு வீட்டுல தங்க வைச்சு மாசம் மாசம் சம்பளம் கொடுத்து சோறுப்போட்டாரு. குழந்தை மாதிரியான மனசுல அழுக்கே இல்லாத மனுஷனையும் என்னையும் தப்பா பேசறையே டா..அமெரிக்கா போயிட்டு வந்தையே நீ மட்டும் சுத்தமாதான் இருந்தேனு அடிச்சுச்சொல்லு. நாக்கு மிடுங்கற மாதிரி நாலு கேள்விக்கேட்டுட்டு வீட்டை விட்டு வந்திட்டாள் கல்யாணி.
 
GK வும் வீட்டை விட்டு வெளியேறினார். கல்யாணியும் பொளம்பிக்கொண்டு நடந்தாள். பின்னர் நட்பு ஒன்றுச்சேர்ந்தது. கடற்கரையில் தொடுவானம் போல் இருவரும் அன்பினை வெளிப்படுத்தினர். பின்னர் மீண்டும் ஏற்கனவே இருந்த வீட்டிற்கு குடிப்போனார்கள். அங்க மேல் மாட்டியில் புதுசா குடித்தனம் வந்தவர்களைப் பார்த்து பொறனி பேச ஆரம்பித்தனர். 
முதியோர்க்கான வாழ்க்கையே அடுத்த வீட்டு கவிதை. - கே. பாலசந்தர்
 
- கீதாபாண்டியன்
 
 
Read 42 times
Login to post comments