Log in

Register



Sunday, 17 May 2020 11:24

ரமணி Vs ரமணி Part-1

Written by GEETHA PANDIAN
Rate this item
(1 Vote)
ரமணி Vs ரமணி-PART -1 ரமணி Vs ரமணி-PART -1 பிருத்வீ ராஜ், வாசுகி
(Generation Gap marriage) 
வீட்டிலுள்ள பெற்றோர்கள் வரன் பார்த்து காதல் செய்து கல்யாணம் பண்ணி வைத்த புதுமண தம்பதிகள் உடைய காதல், காமம், அன்பு சண்டைச்சார்ந்த விஷயங்களை மிகவும் அழகாக காட்டியிடும் படைப்பு. ஒரு நல்ல படைப்பு என்பது எக்காலக்கட்டத்திற்கும் பொருந்தும் அளவில் பார்க்கும்போது தோன்னுவதில் உள்ளது. 
 
கணவன் மனைவி விட்டுக்கொடுப்பது, அழுது கணவனிடம் காரியத்தை சாதிப்பது, மனைவியை தாங்குவது, இருவருமே வேலைக்கு போவதாக இருந்தால் வீட்டு வேளையை பார்ப்பது யார் என்று சண்டைப்போடுவது, இருவரும் ஒன்னு சேர்த்து வந்து கதவை திறப்பது, சமைக்க தெரியாமல் கஷ்டப்படுவது, மாமனார் மாமியாருக்கு மரியாதை கொடுப்பது, புதுசா கல்யாணமானவங்க குழந்தை தனமா சில விஷயங்களைச் செய்துப்பார்ப்பது என்று எக்காலத்துக்கு பொருந்தும் வண்ணம் கன்டன்ட் எழுதப்பட்டிருந்தது. அதற்கு பிருத்வீ ராஜ், வாசுகி நல்ல அழமான நடிப்பில் உயிர் கொடுயிருக்காங்க. 
 
இந்த காலகட்டத்துல கூட இவ்வளவு விமர்சையாக கணவன் மனைவிக்காட்சிகளும் சின்ன குட்டிதனமான சண்டையையும் எந்த சீரியலிலும் வருவதில்லை. அப்படியே வந்தாலும் நூறு எபிசோடுக்கு ஒரு முறைதான் வரும். 
 
ரமணி Vs ரமணி என்பது ஒரு டேரேடுமார்க் தலைப்பாகி விட்டது. இயக்குனர் நாகா இயக்கி கே.பாலசந்தர் வழங்கும் சீரியல் பார்ப்பதற்கு சலிப்பு தட்டாத நகைச்சுவையான சீரியல். 1998 ஒளிப்பரப்பாகியதாக இருந்தாலும் எக்காலக்கட்டத்திற்கு பார்த்து வியக்கும் வண்ணம் அமைந்திருக்கிறது. இன்றுப் பார்க்கும் மக்களுக்கு இன்னும் எபிசோடுகள் இருந்திருக்கலாம் என்று தோன்னுகிறது. புதுசா திருமணமானவர்கள் தங்களை இந்த சீரியலோடு ரீலேட் பண்ணிப்பாங்க. காதலர்கள் ரீலேட் பண்ணிக்கொண்டால் ஆச்சிரியப்படுவதற்கில்லை. 
 
இறுதி எபிசோட்டில் முன்னால் பரம்பரைக்கும் இக்கால பரம்பரைக்கும் உள்ள வித்தியாசம் (Generation Gap) பண்ணி வருமாறு காட்சி உண்மை தன்மையில் நல்ல கருத்துனை கொண்டதாக இருந்தது.  அதையும் தாண்டி காலத்தால் அழியாத சீரியல். 
 
-கீதாபாண்டியன்
 
 
Read 82 times
Login to post comments