Log in

Register



Thursday, 14 May 2020 07:13

அம்மாக்கு இரண்டுல ராகு---கே. பாலசந்தர்

Written by Geetha Pandian
Rate this item
(1 Vote)
அம்மாக்கு இரண்டுல ராகு அம்மாக்கு இரண்டுல ராகு கே. பாலசந்தர்
தாயின் எதிர்ப்பார்ப்பின் படி மகன் நடந்திடாத போது அம்மாவின் மனநிலை
 
மறைந்த திரு. கே. பாலசந்தர் இயக்கி சுகன்யா, அனுஹாசன், சீமா, குயிலி  போன்ற பலர் நடித்த சீரியல் அம்மாக்கு இரண்டுல ராகு. இது கடந்த 2000 ம் ஆண்டு ஒளிப்பரப்பாகியது.  ஒரு வீட்டுக்கு எவ்வளவு வித்தியாசமான ஆங்கில் வைத்து காட்ட முடியுமா அவ்வளவு டெக்னிக்ஸை கையாண்டு உள்ளார்கள். கண்ணாடியின் ஒரு பக்கத்தில் மகனும் மறுபக்கத்தில் அம்மாவும் இருப்பது போன்ற ஆங்கில். பிராப்பர்டியாக இருக்கும் பூந் தொட்டியில் பூக்களுக்கு நடுவில் சுகன்யா, அனு முகங்கள் மலர்வது போல் பேசும் ஆங்கில் என்று கேமரா பல இடங்களில் விளையாடும். மேலும் கதாபாத்திரங்களுக்கென்று தனி தன்மை கவனம் செலுத்துவது சின்னதிரையில் பாலசந்தர் ஆரம்பித்த ஒன்றே.
 
இந்த நாடகத்தை பொருத்தவரை அப்போது பாலசந்தர் காஸ்ட்டிங் வெள்ளித்திரையிலும் பிஸியாக இருந்த சுகன்யா மற்றும் அனு நடித்திருந்தனர்.
இப்போது, சின்னத்திரை பெரிய ரோல் பண்ணறவங்க வெள்ளித்திரை சின்ன ரோல் பண்ணுவாங்க. சின்னத்திரை ஷீரோ ஷீரோயினாக ஒரு பார்ஜிட் முடித்து விட்டு வெள்ளித்திரை முக்கிய வேடத்தில் நடிப்பார்கள். 
கே. பாலசந்தருக்கு என்று தனி அடையாளங்கள் கொண்டதாக அவருடைய சீரியல்கள் இருந்தது. ஒரு சில கேரக்டர்ஸ் தான் இருக்கும். பெரும்பாலும் அரைக்குள்ளே சூட்டிங் எடுக்கப்பட்டிருக்கும். 
 
தன் ஒரே மகனை கஷ்டப்பட்டு வளர்க்கும் ஒரு தாயின் எதிர்ப்பார்ப்பின் படி மகன் நடந்திடாத போது அம்மாவின் மனநிலையையும், மாமியார் மருமகள் சண்டையை  நகைச்சுவையாக மகன் வேளைச் செய்யும் இடத்தில் உயர்ந்த பதவியில் இருக்கும் குருஜி எவ்வாறு உதவி சமாளிக்கிறாள் என்பதே கதை. இதுவே அம்மாக்கு இரண்டுல ராகு.
 
ஆனால் இப்போது இந்த மாதியியான நகைச்சுவை கலந்த மாமியார் மருமகள் சண்டை வருவதுப் போன்ற சீரியல்கள் பெரும்பாலும் வருவதில்லை. மருமகளை கொலை செய்யற அளவுக்கு போகிற மாமியார் அல்லது மருமகள் அனைவருடமும் பாசமாக இருப்பாள். உறவுக்காரர் அண்ணி, அக்கா, கணவனுடன் பிறந்தவர்கள் என்று அவர்கள் மூலமாக மருமகளுக்கு பிரச்சனை அளிக்கப்படும். இவ்வாறே வருகிறது. மேலும் இந்த கால கட்டத்தில் ஆங்கில் என்று பெரியாதாக எந்த முயற்சி எடுப்பதில்லை. அதிகபட்சம் லாங் சாட், கோஸ்அப் சாட் மட்டுமே இருக்கும். பெரிய அளவில் கதாபாத்திரங்களின் தனி தன்மை இருக்காது. நிறைய கேரக்டர்ஸ் நிறைந்திருக்கும். அவுட் டோர் சூட்டிங் அதிகமாக இருக்கும். இது அனைத்தும் அம்மாக்கு இரண்டுல ராகு விட வேறப்பட்ட முயற்சி. 
 
 
 
-GEETHA PANDIAN
Read 71 times
Login to post comments