Log in

Register



ஒரு நாவலை வாசித்தல் என்பது ஒரு வாழ்வை வாழ்ந்து பார்ப்பது. ஒரு வாழ்வு ஒரு அர்த்தத்தை மட்டும் தான் கொடுக்க வேண்டும் என எந்த அவசியமும் இல்லை. சிறந்த நாவல்கள் ஒரு கதையை தன்னியல்பில் சொல்லி செல்கின்றன. ஆனால், ஒரு வாசகன் அந்த எழுத்தாளன் சொல்லாத அர்த்தங்களையும் அவன் சொற்களில் விடும் இடைவெளி மூலம் புரிந்து கொள்வதால் அந்த நாவல்கள் சிறந்தவையாக திகழ்கின்றன. எனவே, நாம் யாராக இருந்து ஒரு இலக்கியப் பிரதியை வாசிக்கின்றோமோ அதன் பொருட்டே நம்மை இலக்கியம் வந்தடைகிறது.

இப்படியாக நான் பயணித்த நாவல்களில் என்னை இன்றும் ஆச்சரியப்படுத்தும் நாவல்களில் ஒன்று தான் டான் பிரவுன் எழுதிய 'தி டாவின்சி கோட்'. இந்த நாவலின் மூலம் தான் டான் ப்ரவுன் எனக்கு அறிமுகமானார் என்றே சொல்லலாம். 2003 ஆம் ஆண்டு வெளியான இந்த நாவல் இன்றளவும் பல ரசிகர்களை கொண்டுள்ளது. இயேசு நாதருக்கு துணைவியார்? கேட்கவே ஆர்வத்தை தூண்டும் வரிகளே இந்த நாவலின் முக்கியப் பிளாட். இந்த நாவலை கருப்பொருளாகக் கொண்டு இயேசு கிறிஸ்துவுக்கும் மகதலேனா மரியாள் என்ற மேரி மெக்டலினுக்கும் திருமணமாகி ஒரு குழந்தையும் உண்டு என்று 2006 ஆம் ஆண்டு இந்த நாவலின் பெயரிலேயே திரைப்படம் தயாரித்து வெளியிட்டனர். கிருத்துவக் கோட்பாட்டை தரைமட்டமாக்குகிறது என்று கூறி இந்தத் திரைப்படத்திற்கு உலகெங்கிலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

லாரஸ் அருங்காட்சியகத்தின் முன்னாள் பொறுப்பாளரான ஜாக்குவஸ் சாரணியர்(Jacques saurnierre) என்பவர் மர்ம மனிதரான சிலஸால்(Silas) கொல்லப்படும் காட்சியுடன் இப்படம் ஆரம்பமாகிறது. துறவியான சிலஸ், Saurniere-இடம் உள்ள ஒரு பொருளை விரும்பினான். ஆனால் Saurniere-ஒ அதை தர மறுத்துவிட்டார். இறப்பதற்கு முன் தன் ரத்தத்தால் Saurniere சில குறிப்புகளை விட்டுச் செல்கிறார். அந்த இரண்டில் ஒன்று 'எண்'குறியீடும் மற்றொன்று ராபர்ட் லாங்டன் குறிக்கும் போஸ்ட்ஸ்கிரிப்டாகவும் இருந்தது. ராபர்ட் ஒரு கலை மற்றும் சிம்பாலஜி அறிஞர் ஆவார். Saurniere கொலைசெய்யப்பட்ட இரவு, முதலில் சந்தேகத்துக்கு ஆளாக்கப்பட்டவர் ராபர்ட் தான். பிரான்ஸின் கிரிப்டோலஜி துறையின் சோபிநிவ்யு ( Saurniere-ன் பேத்தி) விசாரணைக்காக வராமல் இருந்திருந்தால் ராபர்ட் கைது செய்யப்பட்டு இருப்பார். Saurniere கொடுத்த குறிப்புகள் வைத்து. புதையல் தேடுதலை சோபியும் ராபர்ட்டும் தொடங்குகிறார்கள். ஆனால், இவர்கள் இரண்டு பேரும் கண்டுபிடிக்க வேண்டுமென்று Saurniere விரும்பியது என்ன? எதனால் ராபர்ட்டின் பெயரை Saurniere எழுதினார்? இந்த புனித பொக்கிஷம் ஏன் கிறிஸ்துவின் சந்ததியினரின் அனைத்து இரகசியங்களையும் உள்ளடக்கியதாக கூறப்படுகிறது? என்ற பல கேள்விகளை நோக்கி இப்படம் நகர்கிறது. மனித குலத்தின் மிகப்பெரிய கேள்விக்குறிகளில் ஒன்றான புனித பொக்கிஷத்தை கண்டுபிடித்து பாதுகாக்கும் மிக உயர்ந்த பணியை ராபர்ட் மற்றும் சோபி பெற்றிருந்தனர். Saurniere விட்டுச்சென்ற தடயங்கள் மூலம் சோபி மற்றும் ராபர்ட் ஒரு பேங்க் லாக்கருடைய சாவியை கண்டுபிடித்தார்கள். அந்த லாக்கரை திறந்த பொழுது கிரிப்டக்ஸ்(Cryptex)அடங்கிய ஒரு பெட்டி இருக்கிறது அந்த கிரிப்டக்ஸ் டாவின்சியால் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ரகசியங்கள் குறித்து மேலும் அறிந்துக்கொள்ள ராபர்ட் சோபியை அவருடைய நண்பரான லீ டீப்பிங்கிடம்(Leigh Teabing)- அழைத்துச் செல்கிறார். டீப்பிங்கும் லியானார்டோ டாவின்சி யுடைய ஓவியமான தி லாஸ்ட் சப்பர்-ஐ (கடைசி இரவு உணவு)காட்டி ஏசுவைப் பற்றிய பல ரகசியங்களை கூறுகிறார். இயேசுவின் சந்ததி, Sang-Real என்ற அரச வாரிசு மற்றும் புனித பொக்கிஷமான மேரி மேக்டலின் போன்ற பலவற்றை குறித்து அவர் கூறுவார். மேலும் இவர்கள் இருவரையும் போலீசிடம் இருந்து காப்பாற்றி தனி விமானத்தில் அழைத்து செல்வார். பல நிகழ்வுகளுக்கு அடுத்து லீ டீப்பிங் தான் தன்னுடைய தாத்தாவைக் கொல்ல ஆள் அனுப்பினார் என்ற உண்மை சோபிக்கு தெரியவருகிறது. இறுதியாக லீ கைதுசெய்யப்பட, அந்தக் Cryptex-ஐ ராபர்ட் பல குறிப்புகளுக்கு அடுத்து நியூட்டனின் கோட்பாட்டின் உதவியுடன் திறந்து விடுகிறார். அதில், "புனித பொக்கிஷம் ரோஸிற்கு கீழே காத்துக் கொண்டிருக்கின்றது. பிளேடும் சாலிஸும்(Blade and Chalice)அதன் வாசலில் காத்து நிற்கின்றன. கலைஞனின் கைவண்ணத்தில் அவள் வாழ்கின்றாள். நட்சத்திரங்களின் பார்வையில் அவள் துயில் கொண்டிருக்கின்றாள்" என்று எழுதப்பட்டு இருக்கும். அந்த தடயங்களை வைத்து பொக்கிஷம் இருக்கும் இடத்தைக் கண்டுப்பிடித்து, அதில் கூறப்பட்ட இடமான ரோஸ்லின் சாபிள்(Rosslyn Chapel)-க்கு ராபர்டும் சோபியும் செல்கிறார்கள். அந்த தேவாலயம்தான் புனித பொக்கிஷத்தை கொண்டது என்று நினைத்தால், அங்கு எந்த பொக்கிஷமும் இருக்காது. ஆனால்,Saurniere ஒழித்துவைத்திருந்த சோபியின் கடந்தகால ரகசியங்களை அவர்கள் கண்டறிகின்றனர். இறுதியில் சோபிதான் அந்த பொக்கிஷம் என்பதை ராபர்ட் கண்டறிகின்றான். அனைத்து பிரச்சனைகளும் முடிந்து சுமூகமாக சென்று கொண்டிருந்த தருணம் அது. ராபர்ட் தன் முகமயிரை எடுக்கும்பொழுது வெட்டிக் கொள்கிறான், அப்பொழுது அவனுக்கும் அந்த cryptex-ன் வரிகள் நியாபகத்திற்குவர அந்த பொக்கிஷம் இருக்கும் உண்மையான இடமான Saurnierre பணிபுரிந்த அருங்காட்சியகத்தை நோக்கி பயணித்தான்.மேரி மெடக்லினின் சமாதியை கண்டுப்பிடிப்பான். ஆனால், இந்த உண்மை உலகிற்கு தெரியவந்தால் பல பிரச்சனைகள் உண்டாகும் என்பதால் அதனை மறைத்துவிடுவான் ராபர்ட். இந்த படத்தின் மிக அற்புதமான காட்சி என்று சொன்னால் அது இந்தக் கடைசி காட்சிகள்தான். 

இத்திரைக்கதையின் மூலம் இவ்வுலகில் தோன்றிய மதங்கள் அனைத்தும் மனிதனால் கண்டுபிடிக்கப்பட்டவையே என்று சொல்லாமல் சொன்ன அதே வேளையில் தீயசக்திகள் என்று அழைக்கப்படும் சாத்தான்களை வணங்குதல், எகிப்த்திய பிரமிடுகளிலுள்ள சாத்தன்களின் சித்திரங்கள் மற்றும் இல்லுமனாட்டிகள் தங்கள் லூசிஃபர் கடவுளை சித்தரிப்பதற்காக வரைந்து தள்ளியுள்ள ஓவியங்கள் என்று அனைத்தையும் இப்படத்தில் பதிவுசெய்துள்ளனர். ஏசு என்பவர் புனிதமானவர், அவர் காதலை(அன்பு) மட்டுமே போதித்தார். அவர் ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்தார் என்று கூறுவதே கடவுளையும் மதத்தை இழிவுப்படுத்துவதற்கு சமம் என்று கிருத்துவர்கள் கருதினார்கள். இப்படி சர்ச்சைக்குரிய கருத்துகளை தன் புத்தகத்தில் கூறும் டான் பிரவுன் காமத்தில் ஈடுபடுவதே கடவுளைக் காணும்வழியாக அக்காலத்தில் கருதினார்கள் என்றும், டாவின்சி தன் ஓவியங்கள் மூலம் ஏசு பற்றிய சில உண்மைகளை கூறுகிறார் என்றும் அவற்றை ஆராயும்பொழுது எனக்கு கிடைத்த சில குறிப்புகளுடன் என் கற்பனையும் சேர்த்து எழுதினேன் என்றும் கூறினார். உலகம் பல விமர்சனத்தை தன்முன் வைத்தாலும் நான் ஏசுவை பற்றி கூறுவது என்னை பொருத்தவரை உண்மைதான் என்று கூறும் டான் பிரவுன் ஒரு இலக்கிய கிறுக்கன் என்றேன் சொல்லவேண்டும். இந்த நாவலை படிக்க ஆரம்பித்தவுடன் டான்பிரவுனின் கன்னிகளாக மாறிய பலரில் நானும் ஒருத்தி என்றே சொல்வேன்.

- Sumalekha (This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.)

Published in Suma Movie-Web

Calendar

« March 2024 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
        1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 31