Log in

Register



Thursday, 05 December 2019 10:22

HATED IN THE NATION

பிரிட்டனில் துப்பறிவு பிரிவின் தலைமை ஆய்வாளராக (DCI) இருக்கும் கரின் பார்க் விசாரணைக்காக வரவழைக்கப்படுகிறார்.  பிரிட்டனையே உலுக்கிய ஒரு வழக்கை விசாரித்ததற்கான வாக்குமூலத்தை விசாரணை நீதிபதி கேட்டப்பொழுது ,”நான் இந்த வழக்கில் மட்டும் சம்பந்தப்படவில்லை அக்.,15 வழக்கிலும் சம்பந்தப்பட்டிருக்கிறேன்” என்று பார்க் சொல்கிறார்.

அக்.,15 பெண் ஊடகவியாளரான ஜோ பவர்ஸ் ஊனமுற்ற ஒரு சமூக ஆர்வலர் பற்றி அவதூறாக கருத்து வெளியிட்டதால் வெறுப்பின் இலக்காக சமூகவலைத்தளங்களில் #DeathToo JO POWERS என்ற ஹேஷ்டாக் டிரெண்டாகுகிறது. பலப்பேரு அவங்களுக்கு மெசேஜ் மற்றும் கால் மூலமாவும் மிரட்டல் விடுகிறார்கள். அதெல்லாம் பொருட்படுத்தாமல் தனக்கு வெறுப்பின் அன்பளிப்பாக வந்த Fucking Bitch என்ற எழுத்துக்கள் கொண்ட கேக்கை சாப்பிட்டு தன் வேலைய பார்க்கிறார் ஜோ. திடீரென்று அன்று மாலை ஜோ இறந்துவிட்டதாக தகவல் DCI கரின் பார்கிற்கு வருகிறது. உடனே சம்பவ இடத்திற்கு துப்பறிவு பயிற்சிக்காக வரும் ப்ளூ கோல்சனும் நிக் ஷெல்டன் என்பவரும் இந்த வழக்கில் பார்க்குடன் இணைகிறார்கள். ஜோ மரணம் அவருடைய கணவரால் நிகழ்ந்து இருக்கலாம் என்ற தோணியில் விசாரணை ஆரம்பமாகிறது. ஜோவின் கணவரை விசாரிக்கும் பொழுது ஜோ தன்னுடைய கழுத்தை ஒரு மதுபாட்டிலால் கிழித்துவிட்டதாகவும் அதை தடுக்கச் சென்ற இவருக்கு அடிப்பட்டதாகவும் தெரியவருகிறது. ஆனால், இவ்வளவு தைரியமான ஜோ எப்படி தற்கொலை செய்துக் கொண்டிருக்க முடியும்? என்ற கேள்வி பார்க்கை சுத்திக் கொண்டிருக்கிறது. அடுத்த நாள், ஒரு இளம் ரசிகரை அவமதித்ததற்காக ஆன்லைன் வெறுப்பின் இலக்காக மாறிய டஸ்க் என்ற ராப்பருக்கு(Rapper) மண்டை வெடித்து போகிற அளவிற்கு வலி ஏற்பட்டு மயக்கமடைகிறார். அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டப்போது  ஒரு எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுக்குப்படுகிறது. அந்த சமயத்தில் அவரது மூளையில் உள்ள ஒரு உலோகப் பொருள் அவரது தலையிலிருந்து காந்தசக்தியால்  வெளியே இழுக்கப்பட்டு  உடனடியாக அவரைக் கொன்றுவிடுகிறது. இந்த வழக்கில் தேசிய குற்ற முகமை (என்.சி.ஏ) அதிகாரியான ஷான் லி  நியமிக்கப்படுகிறார்.

டஸ்க் தலையிலிருந்த அந்த பொருள் மக்களின் காலனி சரிவு கோளாறுகளை எதிர்கொள்ள ’கிரானுலர்’ என்ற நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஒரு தன்னாட்சி ட்ரோன் பூச்சி அல்லது "ஏடிஐ" தேனீ (செயற்கை மாற்று தேனீக்கள்) என அடையாளம் காணப்படுகிறது. பார்க் மற்றும் ப்ளூ கிரானுலரின் தலைமையகத்திற்கு சென்றபோது அங்கு பிராஜக்டின் தலைவரான ராஸ்மஸ் ஸ்ஜோபெர்க் என்பவர்,  பவர்ஸ் கொல்லப்பட்ட இரவில் அவர் வீட்டிற்கு அருகில் ஒரு ஏடிஐ ஹேக் செய்யப்பட்டதைக் கண்டுபிடித்தார்.

டஸ்க் மற்றும் பவர்ஸ் இரண்டு பேரும் "#DeathToo" என்ற சமூக ஊடக ஹேஷ்டேக்குடன் குறிவைக்கப்பட்டனர் என்பதை ப்ளூ உணர்ந்தார். ஹேஷ்டேக்கை உருவாக்கும் ட்வீட்களில் "கேம் ஆஃப் கான்சிக்வென்சஸ்" (Game of Consequences) என்ற வீடியோ இணைக்கப்பட்டுள்ளது.  இது ஒவ்வொரு நாளும்,  அதிகமான "DeathToo” ட்வீட்டுகளுக்கு உட்பட்ட நபர் கொல்லப்படுவார் என்பதை விளக்குகிறது. அதன்பின்னர், ஒரு போர் நினைவுச்சின்னத்தில் சிறுநீர் கழிப்பதாக நடித்து ஒரு புகைப்படத்தை வெளியிட்ட கிளாரா மீட்ஸ் என்பவர் தற்போது அதிகமான "DeathToo”  ட்வீட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளார் என்பதை கண்டறிந்த பார்க், அவளை ஒரு பாதுகாப்பான வீட்டிற்கு அழைத்துச் செல்கிறது. என்னதான்  கீஹோல்கள், ஜன்னல்கள் மற்றும் பிற சிறிய இடைவெளிகளின் மூலம் பாதுகாப்பான வீட்டிற்கு சென்றாலும் ஏடிஐ-க்களின் கூட்டம் அவ்வீட்டை ஆக்கிரமிக்கிறது. பார்க் மற்றும் ப்ளூ கிளாராவை ஏடிஐ-களிடமிருந்து மறைக்க முயன்றும் ஒரு ஏடிஐ கிளாராவின் மூக்கின் வழியாக சென்று கொன்றுவிடுகிறது. கிளாராவை கொன்ற ஏடிஐகள் தன்னையும் பார்க்கையும் கொல்லாமல் இருந்த்தை கவனித்த ப்ளூ, ஏடிஐகள் முக அங்கீகார முறையை (Facial Recognition) கையாள்கின்றன என்பதை கண்டறிகிறார். ஏடிஐகள் அரசாங்க கண்காணிப்புக்காக பயன்படுத்தப்படுன்றன என்பதை லீ ஒத்துக்கொள்கிறார். #DeathToo பற்றி அனைத்து ஊடகங்களிலும் பரவ, Exchquer-ன் சான்சிலரான டாம் பிக்கிரிங் தான் #DeathToo வின் அடுத்த குறி என்பது தெரிய வருகிறது.

இதற்கிடையில், ஆன்லைன் வெறுப்பைப் பெற்ற பின்னர் தற்கொலைக்கு முயன்ற முன்னாள் கிரானுலர் ஊழியரான டெஸ் வாலண்டரை பார்க் சந்தித்து விசாரிக்கிறார். தான் தற்கொலை செய்துக் கொள்ளும்பொழுது அவரது பக்கத்து வீட்டுக்காரரான காரெட் ஷோல்ஸ் என்பவரால் காப்பாற்றப்பட்டதை வாலண்டர் விளக்குகிறார். அதேசமயத்தில் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட ஏடிஐயில் ஷோல்ஸின் அறிக்கைகள் உள்ளதை ப்ளூவும் லீயும் கண்டறிகின்றனர். அந்த அறிக்கையில் ஷோல்ஸின் செல்ஃபி உள்ளதையும் அது எந்த இடம் என்பதையும் ப்ளூ கண்டறிந்து காவல்துறையினர் அங்கு செல்கின்றனர்.     ஏடிஐ அமைப்பை செயலிழக்க டிரைவின்(Drive) தரவைப் பயன்படுத்த ஸ்ஜோபெர்க் தயாராகி வருவதால், டிரைவில் நூறாயிரக்கணக்கான ஐஎம்இஐ(IMEI) எண்களின் பட்டியலைக் கொண்டிருப்பதை ப்ளூ கண்டுபிடித்தார். அவை அரசாங்கத்தின் கண்காணிப்பு அமைப்பு வழியாக உரிமையாளர்களின் விவரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்த பட்டியலின் மூலம் #DeathToo ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தியவர்களை கொல்லப்போவதாக அவர்கள் உணர்கிறார்கள். மேலும் இந்த மக்களைக் கொல்ல ADI களைப் பயன்படுத்துவதே ஷோல்ஸின் உண்மையான திட்டம் என்று பார்க் கண்டைகிறார். இருப்பினும், லி இதை புறக்கணித்து ராஸ்மஸின் குறியீட்டை செயல்படுத்துகிறார்; கணினி ஒரு கணம் செயலிழக்கப்பட்டு பின்னர் ADI-க்கள் ஆன்லைனில் திரும்பி வந்து ஹேஷ்டேக்கைப் பயன்படுத்திய ஷெல்டனைக் குறிவைக்கின்றன. பட்டியலில் உள்ள அனைத்து 387,036 பேரும் ஏ.டி.ஐ.க்களால் கொல்லப்படுகிறார்கள்.

இதன் விசாரணையில், கோல்சன் காணாமல் போயுள்ளதாக தற்கொலை செய்து கொண்டதாக கருதப்படுகிறோம் என்று பார்க் விளக்குகிறார். விசாரணை முடிந்த பினர் ப்ளூ “நான் கண்டறிந்துவிட்டேன்” என்ற மெசேஜை பார்க்கிற்கு அனுப்புகிறாள். அதனை படித்து உடனே அதனை பார்க் அழித்துவிடுகிறாள். ஷோல்ஸ் வெளிநாடு தப்பி தனது தோற்றத்தை மாற்றிக்கொள்கிறான், ஆனால் ப்ளூ அவரைக் கண்டுபிடிக்க முடிந்தது. பெயரிடப்படாத வெளிநாட்டு நாட்டில் ஒரு சந்து வழியாக ஷோல்ஸைத் தொடர்ந்து ப்ளூ பின்தொடர்வதனை காண்பித்து அத்தியாயம் முடிகிறது.

ஒவ்வொரு அத்தியாயத்திலும், பருவத்திலும், பிரிவிலும் அல்லது குறும்படத்திலும் வித்தியாசமான கதையையும் வெவ்வேறு பாத்திரங்களைக் கொண்டு உருவாவதுதான் ஆந்தோலோஜி(Anthology) தொடர். அவ்வகையில் பிரிட்டிஷ்அறிவியல் புனைகதை ஆந்தோலோஜி தொடர்தான் ”பிளாக் மிரர்”. ச்சர்லி ப்ரூக்கரின் எழுத்துகள் கொண்டு ஜேம்ஸ் ஹாவேஸ் இயக்கிய இத்தொடர் 2016 ஆம் ஆண்டு நெட்ஃப்லிக்ஸ்(NetFlix)-ல் வெளியானது. “தி ஹேடட் இன் தி நேஷன்” பிளாக் மிரரின் மூன்றாவது சீசனின் கடைசி அத்தியாயமாகும்.  ’தி கில்லிங்’ மற்றும் ’போர்கென் தொடர்களுக்கு அடுத்து ’”நோர்டிக் நோய்ர்” (Nordic noir) என்ற Genre  கொண்டு உருவாகிய இந்த அத்தியாயம் போலீஸ் கண்ணோட்டத்திலிருந்து ஒரு குற்றத்தை பார்ப்பதாகும்.  தொழில் நுட்பவளர்ச்சி எப்படி நம்மை சீரழிக்கும், நம்மை எப்படி குற்றவாளிகளாக்கும், எப்போது நம்மை அழிக்கும் என்ற எந்தவித் உத்தராவாதமுமின்றி நாம் சமூகவலைத்தளங்களில் நமக்கு பிடித்த மற்றும் நாம் வெறுக்கும் பல விடயங்களை பற்றிப் பகிரும்பொழுது அவை நமக்கு எந்தமாதிரியான பிரச்சனைகளை உண்டாக்குகிறது என்பதை நாம்  மறப்பதே இதுபோன்ற பிரச்சனைகளுக்கு காரமாணமாக அமைகின்றன. 

 

Published in Suma Movie-Web

Calendar

« March 2024 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
        1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 31