Log in

Register



Items filtered by date: Saturday, 03 October 2020
MovieWud OTTயில் வித்தையடி நானுக்கு ரிலீஸ்!
 
தமிழ் திரையுலகம் மிகத்துரிதமாக மாற்றங்களுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. MovieWud என்பது ஒரு மாற்றத்தின் அடையாளம். நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் போன்ற ஓடிடி. செயலிகள் தமிழ் சினிமாவிற்கான கதவைத் திறந்துவிட்டிருக்கின்றன. ஆனால் அவற்றில் பெரும்பாலும் மற்ற மொழிப்படங்கள், பெரிய நட்சத்திங்கள் இல்லாத தமிழ் படங்களுக்கு குறைவான வாய்ப்பு என்கிற குறைகள் உள்ளன.
 
இதுபோன்ற சூழல்கள்தான் மூவிவுட் போன்ற புதிய ஓடிடி செயலிகளுக்கு தூண்டுதல். தூர்தர்ஷன் கதவை இறுக்கமாக மூடியிருந்தபோது, சாமானியனும் தன் முகத்தை டிவியில் பார்க்க முடியும் என்கிற சூழலை சன்டிவி உண்டாக்கியது. அதன் மூலம் வேகமாக மக்களைச் சென்றடைந்தது. பின்னாளில் ஸ்டார் டிவி வந்தாலும் அதில் தமிழ் நிகழ்ச்சிகள் இல்லாத காரணத்தால் சன் டிவியின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியவில்லை.
 
கிட்டத்தட்ட இதே போன்ற ஒரு சூழல் ஓடிடி உலகில் உண்டாக்கியிருக்கிறது. நெட்ஃபிளிக்ஸ், அமேசான் போன்ற தளங்கள் இன்னும் எல்லோருக்குமானதாக மாறவில்லை. அவை மாறுவதற்குள் அந்த மாற்றத்தை மனதில் வைத்து எல்லோருக்குமான ஓடிடியாக MovieWud வந்துள்ளது. இதற்கும் போட்டியாக இன்னும் பல ஓடிடிகள் வரும்.
மாறிவரும் இந்தச் சூழலில் எங்கள் ஐ.எஸ்.ஆர் வென்சர்ஸ் நிறுவனமும் புதிதாக ஓடிடியை உருவாக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறது. ஆனால் அதன் வடிவமும், உத்திகளும் முடிவாக இன்னும் சில காலம் பிடிக்கலாம். ஆனால் எந்த வடிவத்தில் வந்தாலும் அதற்கு படத் தயாரிப்பு நிறுவனங்களும், ஓடிடி நிறுவனங்களும் கைகோர்த்தால் மட்டுமே வெற்றி பெற முடியும்.
எனவே புதிய ஓடிடி தளங்களுடன் கை கோர்க்க முடிவெடுத்திருக்கிறோம். அடுத்த படம் ”யாதெனக் கேட்டேன்” நிறைவடையும் நிலையில் உள்ளது. இந்தச் சூழலில் அதுவும் ஓடிடியில் வௌியாகத்தான் அதிக வாய்ப்புகள் உள்ளது. எனவே அதற்கு முன் முதல் முயற்சியாக எங்களின் முதல் திரைப்படம் ”வித்தையடி நானுனக்கு” MovieWud OTTயில் வெளியாகியிருக்கிறது.
இரண்டே இரண்டு பேர் நடித்துள்ள அந்தப் படத்தை ராமநாதன் கே.பகவதி இயக்கியுள்ளார். வெளியானபோது நல்ல தியேட்டர்கள் கிடைப்பதில் சிரமமிருந்தது. அதனால் அதிக இரசிகர்களை சென்றடையவில்லை. இப்போது மூவிவுட் ஓடிடியில் மிக எளிதாக வெளியாகியுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
படத்தை பார்த்துவிட்டு படத்தைப் பற்றியும் MovieWud OTTயும் எப்படி இருக்கின்றன என்பதை பதிவு செய்யுங்கள்.
 
This is the download link for MovieWud App.
 
நன்றி!
ஐ.எஸ்.ஆர் செல்வகுமார்
ஐ.எஸ்.ஆர் வென்சர்ஸ்
Published in ISR Selva speaking

ஒளிப்பதிவு இயக்குநர் பொன்.காசி ராஜனின் பிறந்தநாளை அவரது நண்பர்கள் வீடியோ கான்ஃபரன்ஸ் மீட்டிங் மற்றும் வாட்சப்பில் வித்தியாசமாகக் கொண்டாடினார்கள்.

ஐ.எஸ்.ஆர் வென்சர்ஸ் தனக்கென ஒரு வீடியோ கான்ஃபரன்ஸ் அறையை உருவாக்கியுள்ளது. அதற்கு ISR Tick Talk என்று பெயர். இந்த லாக்டவுன் காலத்தில் 100 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து அந்த வீடியோ அறையில் சந்தித்து வருகிறார்கள். அது சாதாரண சந்திப்பாக மட்டுமில்லாமல் ஒரு கதை விவாதக் குழுவாகவும் உருவாகியுள்ளது. இந்நிலையில் யாதெனக் கேட்டேன் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ள பொன். காசிராஜனின் பிறந்த நாளை ஐ.எஸ்.ஆர் டிக்டாக் நண்பர்கள் வித்தியாசமாக வீடியோ உருவாக்கி கொண்டாடினார்கள்.

மாஸ்டர் படத்தின் குட்டிக் கதை பாடலை வைத்து உருவாக்கப்பட்டுள்ள அந்த வீடியோவை இங்கு பார்க்கலாம்.

 

Published in Cine bytes
சிவாஜியின் குரலை சென்னை வானொலி நிலையம் நிராகரித்ததா?
சிவாஜி 'பராசக்தி'யில் நடித்து, இன்னும் வேறு சில படங்களிலும் நடித்து அப்போது பிரபலமாகியிருந்தார். வானொலி நாடகங்களுக்கு அப்போதெல்லாம் நல்ல வரவேற்பு. அதில் நடிக்க விரும்பிய சிவாஜி அதற்காக விண்ணப்பித்தார். ஒரு நாடகத்தில் நடிப்பதற்கு அவருக்குக் குரல் தேர்வு நடந்தபோது அதில் அவர் சித்தியடையவில்லை, அவரை நிராகரித்துவிட்டார்கள். சிவாஜியால் அந்த அவமானத்தைத் தாங்க முடியவில்லை. கோபத்துடன் அன்று ஒரு சபதம் எடுத்தார். 'இனிமேல் என் வாழ்க்கையில் அகில இந்திய வானொலிக்கும் எனக்கும் ஒருவித சம்பந்தமும் கிடையாது. அகில இந்திய வானொலி சென்னை நிலையத்தின் வாசல்படியை என்றென்றும் மிதிக்கமாட்டேன்.'
 
இந்தச் சம்பாசணை எனக்கும் சிவராமகிருஷ்ணனுக்கும் இடையில் நடந்தது. சிவராமகிருஷ்ணன் லண்டன் பிபிசி தமிழோசையில் பலவருடங்கள் ஒலிபரப்பாளராகப் பணியாற்றுகிறார். பணி நிமித்தமாகப் பலரைச் சந்தித்துப் பேட்டிகள் எடுத்திருக்கிறார்.
 
தினமலர் (ஏப்ரல் 16, 2016) இதழில் சிவாஜியின் குரல் என்ற கட்டுரையில் அ.முத்துலிங்கம் என்பவர் எழுதியுள்ளதை அப்படியே கொடுத்திருக்கிறேன். (முழுக் கட்டுரையை இந்தச் சுட்டியில் வாசிக்கலாம்) இந்தத் தகவலை நான் இப்போதுதான் கேள்விப்படுகிறேன். இந்தத் தகவல் உண்மையா?
 
Published in ISR Selva speaking

ISR Ventures தயாரித்துள்ள முதல் படம் ”வித்தையடி நானுனக்கு”

இந்தப் படத்தில் இரண்டே இரண்டு பேர் மட்டும் நடித்துள்ளார்கள்.

இது ஒரு த்ரில்லர் படம். இப்படத்தை ராமநாதன் கே.பி இயக்கியிருக்கிறார். 

இவர் சூர்யா நடித்த ஸ்ரீ படத்தின் இசையமைப்பாளர். வித்தையடி நானுனக்கு படத்தின் மூலமாக அவர் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார்.

இப்படம் தற்போது மூவிவுட் - MovieWud என்கிற புதிய ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

இந்த வரியை க்ளிக் செய்து நீங்கள் மூவிவுட் ஓடிடி யை டவுன்லோடு செய்து வித்தையடி நானுனக்கு படத்தை பார்க்கலாம்.

 

 

 

Published in Cine bytes