Print this page
Thursday, 21 November 2019 09:36

The Family Man -Season 1

Written by சுமா
Rate this item
(2 votes)

காலேஜ் முடிச்சிட்டு டெய்லி Mount Road வழியா தான் பயணிப்பேன். அப்போ தேவி தியேட்டருக்கு பக்கத்துல ஒரு 3,4 பில்டிங் தள்ளி இருந்த பில்டிங்மேல இருக்கிற ஒரு flex என் கண்ண உருத்திட்டே இருக்கும். அதுவேற எதுவும் இல்லைங்க அமேசானோட தி ஃபாமிலி மேன் சீரிஸோட flex தான்க. அதுமட்டுமில்லாம பஸ் ஸ்டாப்ல் கூட நிறைய பாத்துருக்கேன். சரி அப்டி இந்த சீரிஸ்ல என்ன தான் இருக்கு இவ்ளோ பில்டப் கொடுக்கிறாங்கனு இந்த சீரிஸ பாக்க ஆரம்பிச்சேன். தி ஃபாமிலி மேன்-னு பேர வெச்சி கண்டிப்பா குடும்ப சப்ஜக்டா இருக்கும்னு நினைச்சா பாக்க ஆரம்பிச்ச என்னைய பாத்த முதல் எபிசோடே மிரள வச்சிடுச்சி. அந்த அளவுக்கு அற்புதமான ஒரு Story line கொண்டதா இந்த சீரிஸ் இருக்கு. உளவுத்துறைல இருக்கிற ஒரு தனிப்பிரிவு தான் TASC. இவங்கத்தான் Bomb threads,terrorist attack, nation security thread போன்ற எல்லாவற்றையும் கண்டுபிடிச்சி CBI, Police போன்ற துறைக்குலாம் தகவல் தெரிவிப்பாங்க. TASC உடைய உயரதிகாரிகள்ல ஒருத்தர் தான் ஸ்ரீகாந்த திவாரி. இவரோட குடும்பம் ஒரு சாதாரண மிடில் கிளாஸ் குடும்பம்-ன்றதால, தான் இந்த TASCல field work பண்றத மறச்சி desk work பாக்குறதா தன்னோட குடும்பத்தை நம்பவச்சிக்கிட்டு வராரு. குடும்பம் மற்றும் வேலை இப்டி ரெண்டுத்துக்கும் நடுவுல மாட்டி நாட்டை வரப்போற ஆபத்துலர்ந்து எப்டி காப்பத்துறாருனு விறுவிறுப்பா கொண்டுப்போயிருக்கிற சீரிஸ் தான் இந்த ஃபாமிலி மேன்.

முதல் எபிசோடுல ஐஎஸ்ஐஎஸ் உளவாளிகளை விசாரணை பண்றதுக்காக திவாரி நியமிக்கப்ப்டுறாரு. அந்த உளவாளிகளை Custody எடுக்கப்போற சமயத்துல தன் பொன்னோட ஸ்கூலர்ந்து call வந்ததும் ஒரு தகப்பனா கிளம்பிப்போன திவாரிக்கு தலைமை ஆசியர்கிட்ட பேசிட்டு இருக்குறப்போ ஒரு msg வருது. அது என்னனா உளவாளிக்கும் போலீஸுக்கும் துப்பாக்கிச்சூடு நடக்குதுனு உடனே திவாரியை கிளம்பிவர சொல்லி msg வருது. இப்படியா தன் வாழ்க்கைய சமாளிக்கிற திவாரி கதாபாத்திரம் அழகாகவும் விறுவிறுப்பாகவும் அமைக்கப்பட்டு இருக்கு. ஒருநாள் திடீர்னு கால கோடா - ன்ற இடத்துல scooter bomb வெடிக்குது, அதபத்தி விசாரணை மேற்கொள்றப்போதான் திவாரிக்கு Operation Zulfiquar பத்தி தெரியவருது. Scooter bomb நிகழ்வுல சந்தேகிக்கப்பட்டவங்கா மும்பைல இருக்கிற விக்டோரியா காலேஜோட Drop box பத்தி சொல்றாங்க. மருத்தவமைல அட்மிட் ஆகிருக்குற கைதிகள்ல ஒருத்தன் இந்த operation zulfiqar ல சம்பந்தப்படிருக்கிறது தெரிய வருது. ஆனா அந்த கைதி நினைவில்லாம இருக்குறதால அவனோட நண்பனான மூசா-வை விசாரிக்கிறான். அதே நேரத்துல விக்டோரியா drop box-அ உபயோகிக்கிறது விக்டோரிய கல்லூரி மாணவனான கரீம்-னு தெரியவருது. இப்படி இரண்டு மற்றும் மூன்றுவாது எபிசோடு விறுவிறுப்பா போக, கரீம் தான் ஏதோ ஒரு பெரிய பிளான செயல்படுத்தப்போறானு நினைச்ச TASC உடைய யூகம் தப்பா போகுது. கடைசில கரீமோட சேர்த்து மூன்று அப்பாவிகள கொல்லவேண்டிய சூழ்நிலைக்கு திவாரி தள்ளப்படுறான். திவாரியுடைய boss குல்கர்னி திவாரிய தண்டிக்கிற மாதிரி எல்லாரையும் நம்பவச்சி Zulfiqar பத்தி விசாரிக்க காஷ்மீருக்கு transfer பண்றாரு. இதெல்லாம் ஒருபுறம் நடக்க, ISI ஏஜெண்டான சமீர்-ன்றவன் கால கோடா குண்டு வெடிப்புக்கு காரணமானவன காஷ்மீருக்கு zulfiqar-அ ஆரம்பிக்க அனுப்பி வைக்கிறான். காஷ்மீர்ல விசாரணை நடத்திவந்த திவாரிக்கு இவ்வளவு நாளா தான் ஒரு தப்பான ஆள சந்தேகப்பட்டிருகோம்னு தெரியவருது. Zulfiqar mission என்னனு கண்டுபிடிச்சி அத முறியடிச்சா திவாரிக்கிட்டர்ந்து எப்படியோ தப்பிச்சி வந்த சமீரோட ஆளு நேரா ஆஸ்பத்திரிலந்து தப்பிச்சி ஒழிஞ்சிட்டு இருக்குற மூசாவ பாக்கப்போறான். அங்க பிளான் B பத்தி ரெண்டு பேரும் பேசுறாங்க. பேசிக்கிட்ட மாதிரியே பிளானையும் execute பண்றாங்க. கடைசில Operation Zulfiqar இன்னும் முடியலனு தெரிஞ்சிக்கிட்ட திவாரியால அது என்னனு கண்டுப்ப்டிக்க முடியல. மும்பையே ஒரு மிகப்பெரிய அழிவ நோக்கி போகுதுன்ற காட்சிகளோட இந்த முதல் சீசன் முடியுது.

விறுவிறுப்பான கதைக்களத்தோட பயணிக்கிற இந்த சீரிஸ், ஒவ்வொரு எபிசோடுலயும் சீட் நுனிவரைக்கும் உக்கார வக்கிது. மிடில் கிளாஸ் ஆளுக்கே உள்ள ஆசைகளான ஆடம்பர வாழ்க்கைய நோக்கி பயணிகிது, டீனேஜ் வயசுல ஒரு பொன்னு, கணவன்-மனைவி புரிதலின்மை, தந்தைக்கும் மகளுக்கும் இருக்கிற கருத்துவேறுபாடு போன்ற பலவகை உணர்வுகளும் கலந்ததா இந்த சீரிஸ் இருக்கு.

Read 653 times Last modified on Thursday, 21 November 2019 09:49

Related items

Login to post comments