Log in

Register



Saturday, 16 November 2019 10:21

Sacred Games - தெறிக்க விடும் வெப் சீரிஸ்

Written by Sumalekha
Rate this item
(0 votes)
Sacred Games Web series Sacred Games Web series Review by Sumalekha
5வது semester exams முடிஞ்சதும் நண்பர்கள்-லாம் சேர்ந்து இந்த லீவ்-ல என்ன பண்ணலாம்னு பேசிகிட்டு இருந்தோம்.அப்போ என் தோழி ஒருத்தி Netflix-ல சீரிஸ் பாருடி நல்லா இருக்கும்னு சொன்னா. சரி முதமுறையா பாக்குறேன் நல்ல சீரிஸா சொல்லுடினு கேட்டதுக்கு அவ வதவதனு Stranger things, Delhi crime, Sacred Games, 13 reasons why –னு ஒரு பெரிய லிஸ்டும் அதோட டைரடரஸ்  பத்தியும் சொன்னா. அப்போ அனுராக் கஷ்யப், விக்ரமாதித்ய மோத்வானி மற்றும் நீரஜ் காயான் இணைந்து இயக்கிய sacred games-ன் பிளாட் என்னைய ரொம்ப ஈர்த்துச்சு.  லீவும் ஸ்டார்ட் ஆச்சி, சீரிஸும் ஸ்டார்ட் ஆச்சி, சாக்ரட் கேம்ஸும் பரிட்சையமாச்சு.
 
சர்தாஜ் சிங்(சயிஃப் அலி கான்), தன்னுடைய போலீஸ் வேலைய காப்பாத்திக்கவும், உயர்அதிகாரியான DCP Parulkar(Neeraj) பண்ண தவறான என்கவுண்டர் பத்தி யார்க்கிட்டயும் சொல்லமுடியாம போராடிட்டு இருக்குறாரு. எந்த சாதனையும் இல்லாம நேர்மையாக மட்டும் இருக்கும் ஒரு சாதாரண போலீஸ் அதிகாரிகளுள் ஒருவரா பல பிரச்சனைகளிலிருந்து வெளிவர திணறிக்கிட்டு இருக்குற சமயத்துல சர்தாஜுக்கு ஒரு unknown நம்பர்-லர்ந்து போன் வருது.அதுல பேசுனவன் மும்பையை காப்பாத்த இன்னும் 25 நாட்கள் மட்டும்தான் இருக்கு, திரிவேதி மட்டும் பாதுகாப்பாக இருப்பான், தன்னுடைய மூன்றாவது தந்தை எல்லாரையும் அழிச்சிடுவானு சொல்லி மிரட்டுறான். இதபத்தி விசாரணை மேற்கொள்றப்போதான், மிரட்டல் விடுத்தவன் கணேஷ் காயிடொண்டே( Nawazuddin Siddiqui) அப்படினும், ஒரு சில வருசத்துக்கு முன்னாடி மும்பை நகரத்தோட அழிக்கமுடியாத மோசமான குற்றவாளியா இருந்து சில வருசங்கள் தலைமறைவாகி இப்ப வெளியில வந்துருக்கானும் சர்தாஜ் கண்டுபிடிக்கிறான். சர்தாஜும் காயிடொண்டேவும் பேசிகிட்டு இருத்ததை RAW ஏஜெண்டான அஞ்சலி மாதுர்(ராதிகா ஆப்தே) கேட்டாலும், Datas எல்லாம் அழிந்துபோக அஞ்சலியால் எந்த விஷயங்களையும் கண்டுபிடிக்க முடியாமல் போகுது.
காயிடொண்டே தன்னுடைய வாழ்க்கை பத்தி சர்தாஜ்-கிட்ட சொல்ல ஆரம்பிக்கிறான். காயிடொண்டேவுடைய அம்மா வேசி-ன்றதால அவனுடைய அப்பா அவளை கொலை செய்ததற்காக கைது செய்யப்படுறாரு. பின்னர், தாய் தந்தை இல்லாம மும்பைக்கு வந்து ஒரு இந்து ஹோட்டல்-ல வேலை பாக்குறான். அந்த ஹோட்டல்தான் காயிடொண்டேவுடைய அரசியல் வாழ்க்கைக்கு அடித்தளம் போட்டுச்சினே சொல்லலாம். அங்க தான் அவன் மதத்தை ஆயுதமா பயன்படுத்தி சமூகத்துக்கு மத்தியில ஒரு சலசலப்பையும் வெறுப்பையும் உண்டாக்க கத்துக்கிறான். அதுக்கடுத்து போதை பொருட்கள் தொழிலில் ஈடுப்பட்டு, தன்னோட இரண்டாவது தந்தையை(சலீம் காகா) சந்திக்கிறான். 1980-களில் ஆரம்பத்துலேயே சலீமை கொன்னு, அவனுடைய தொழிலை தன் கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்துடுறான் காயிடொண்டே. இப்படியே காயிடொண்டேவுடைய ஆரம்பக்கால வாழ்க்கையை அவனே விவரிக்கிறான். சர்தாஜியோ காயிடொண்டே கூட பேச்சுக்கொடுத்துட்டே காயிடொண்டே மறைஞ்சிருக்கும் இடத்தை கண்டுபிடிச்சி உள்ளே போறப்போ ஜோஜோ-ன்ற ஒரு பெண்ணோட சடலத்தை பாக்குறான். இப்படியா அஷ்வதாமா-ன்ற முதல் எபிசோடு எல்லாரையும் அறிமுகம்படுத்த, உடனே 1,2,3,4,5-னு அடுத்த எபிசோடான ஹலாஹலா காயிடொண்டேவின் தற்கொலையோட ஆரம்பிக்கிது. இந்த மரணம் போலீஸுக்கு எச்சரிக்கைவிடுத்தது மட்டுமில்லாம மும்பையோட விவிஐபிகளையும் நடுங்க வச்சிதுனே சொல்லலாம். Crime Spot- ல இருந்த சர்தாஜ் சஸ்பெண்ட் ஆக, RAW ஏஜெண்டான அஞ்சலிக்கூட சேர்ந்து காயிடொண்டே வழக்க விசாரிக்க ஆரம்பிக்கிறாரு. அப்போ Bunker-ல பாத்த ஒரு பெண்ணோட உதவியோட காயிடொண்டேவுடைய கூட்டாளியான Bunty இருக்குற இடத்தைக் கண்டுப்பிடிக்கிறான். நிகழ்கால கதை ஒருபுறம் நடக்க இன்னொருபுறம் தன்  எதிரியான Suleiman Isa கிட்டர்ந்து ஒரு பெண்ணை கவர்ந்துட்டு வந்துடுறான் காயிடொண்டே. அவ அவனுடைய அதிர்ஷட தேவதையா வாழுறது Atapi Vatapi-ன்ற மூன்றாவது எபிசோடோட பிளாட்டா வரியுது.
 
நான்காவது மற்றும் ஐந்தாவது எபிசோடுகளான Brahmahatya ம்ற்றும் Sarama, டிவி சீரியல் நடிகையான நயனிகா மூலம் Bunty இருக்குற இடத்துக்கு போறப்போ நயனிகா மற்றும் சர்தாஜ் இரண்டு பேரும் கையும் களவுமா Bunty-கிட்ட மாட்டிக்கிறாங்க. சர்தாஜை Bunty விடுவிக்க, தன்னை நம்பி உதவி செய்யவந்த நயனிகா-வை காப்பாத்த நினைச்சு  RAW ஆபிரேஷனை நடுவுல புகுந்து கெடுத்துடுறான் சர்தாஜ். இது ஒருபுறம் இருக்க, காயிடொண்டே வாழ்க்கைய இந்து-இஸ்லாம் அரசியல், அதிர்ஷ்ட காதல் தேவதையின் மரணம் போன்றவை மாத்தி அமைச்சிடுது. இப்படியாக காதல், காமம், பிரிவு, வலி,துரோகம்,பகை,நன்றி,அரசியல் என பல உணர்வுகளோடும் இந்த இரண்டு எபிசோடுகளும் பயணிக்கின்றன. இதுவரைக்கும் சர்தாஜ், காயிடொண்டே போன்றவர்களை முன்னிலைப்ப்டுத்தி வந்த எபிசோடுகளுக்கு மத்தியில சர்தாஜின் Constable-லான கடேகர் பத்தியும், சர்தாஜ் நடத்திய விசாரணையில கடேகரின் பங்களிப்பு பத்தியும், கடைசில அவர் கொலை செய்யப்படுறதையும் விரிவா காட்டுது ஆறாவது எபிசோடான Pretakalpa.
 
பாதுக்காக்கப்படுவானு காயிடொண்டே சொன்ன திரிவேதி மற்றும் காயிடொண்டேவின் மூன்றாவது தந்தையான குருஜி பத்தின ஒரு சின்ன அறிமுகத்தோட Rudra எபிசோடு ஆரம்பிக்கிது. இதுல காயிடொண்டே தன்னோட ஆசை மனைவிய இழக்குறான், தன் குடும்பத்தை அழிச்சவனை கொன்னு ஜெயிலுக்குப் போறான். இப்படியா காயிடோண்டேவுடைய வாழ்க்கையின் அடுத்தக்கட்டதை இந்த எபிசோடு விவரிக்க, உயர் அதிகாரிகளோட அழுத்தங்கள்லாம் தாண்டி சர்தாஜின் உதவியோட விசாரணை நடத்திவந்த அஞ்சலி கொலை செய்யப்படுறாங்க. அந்த கொலையாளி சர்தாஜையும் கடத்தி சித்ரவதை செய்றான். பின்னர், அந்த கொலையாளியும் போலீஸாரால் சுட்டுக்கொல்லப்பட Hospital-ல அட்மிட்டாகுற சர்தாஜ் அடுத்து என்ன செய்றதுனு யோசிக்கிறான். ஒருநாள் குருஜியோட ஒரு நிகழ்ச்சிய டிவி பாக்குறப்போ குருஜியின் வார்த்தைகள் காயிடொண்டேவுடைய விஷயங்களோட ஒத்துப்போறர்த சர்தாஜ் கவனிக்கிறான். உடனே காயிடொண்டே இறந்துக் கிடந்த இடத்துக்குப்போய் மறுபடியும் ஆராய்ந்துப் பாக்குறான் சர்தாஜ். அங்க அவன் கண்டுபிடிக்கிறது திரிவேதிய. அதேசமயத்துல காயிடொண்டே ஜெயிலர்ந்து தப்பிச்சி எங்க போறான், குருஜி எப்படி காயிடொண்டேவுடைய மூன்றாவது தந்தையா மாறுறாரு, உண்மையான Sacred Game விளையாடுறது யாரு, 25வது நாள் நடக்கப் போறர்து என்ன போன்ற பல கேளிவிகளை எழுப்பி Yayati -னற எபிசோடோட சீசன்-1 முடியுது. 
 
பலபல திருப்பங்கள், ஒரு எபிசோடுக்கும் இன்னொரு எபிசோடுக்குமான இணைப்பு அருமையா கொடுக்கப்படிருக்கும். கடந்த காலம் மற்றும் நிகழ்காலம் என பிரிக்கப்பட்டு காட்டப்பட்ட  இந்த டிவி சீரிஸ் தற்போதைய இந்துதுவ அரசியலின் கருப்புப் பக்கத்தை வெளிப்படுத்தும் ஒரு ஆயுதமாகவே இருக்குதுனே சொல்லலாம். Netflix- ஆனது உலகத்துல இருக்குற எல்லா மதத்தையும் ஈர்க்க வெளிநாடுகள்-ல தொடங்கி இந்தியா வரைக்கும் மதம் சார்ந்த டிவி சீரிஸை எடுத்துகிட்டு வந்துட்டு இருக்கிறாங்க. அந்தவகைல இந்தியாவுல எடுத்த டிவி சீரிஸில் அதிகமான மக்களை ஈர்த்து வெற்றிப்பெற்ற டிவி சீரிஸ் லிஸ்டில் முதல் இடத்தில் இருப்பதுதான் இந்த Sacred Games.
Read 575 times Last modified on Monday, 18 November 2019 04:20
Login to post comments

Calendar

« April 2024 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30