Log in

Register



Friday, 03 July 2020 07:59

JULY-1

இவருக்கென ஒரு தனி பாணி தான். யாரைக்கொண்டும் இவரை ஒப்பிடமுடியாது.
 
இயக்குனர் விசு இறந்தபின் வரும் முதல் பிறந்தநாள் இன்று. 1945 ம் ஆண்டு ஜீலை-1 அன்று பிறந்தார். வாழ்க்கையில் நீண்ட காலம் கிடைத்த வேலையைச் செய்துக் கொண்டிருந்து விட்டு பின்னர் நாடக உலகத்திற்கும் சினிமா உலகத்திற்கும் தன் காலை பதித்தவர். கே.பாலசந்தரின் உதவி இயக்குனராக இருந்தவர். 
 
எழுத்தாளராகவும் நடிகராகவும் இயக்குனராகவும் பல வேறு அவதாரங்களை எடுத்தார். இவரது பெரும்வாரியான படங்கள் குடும்பம் சார்ந்த பிரச்சனைகளையும் கலகலப்பையும் சொல்லக்கூடியவை. ஒரு 40 வருடம் வாழ்ந்தவர்கள் இவரது படத்தினைப்பார்த்தால் அவரவர் குடும்பத்தையும் குடும்ப பிரச்சனையும் நினைவு கூற முடியும். இவரே நடித்து இயக்கும் படங்களில் படத்திற்கு இடையில் ஒரு மீளா முடியாத முடிச்சினை போட்டு அதனை இறுதி கட்டத்தில் வந்து அவிழ்ப்பார். அவரது படங்களைப் பார்க்கும் நாம் தான் அந்த கதையின் முக்கிய கதாபாத்திரமாக இருப்போம். அந்த அளவுக்கு ஒரு இணக்கம் ஏற்படும். 
 
கிட்டத்தட்ட 80 படங்களில் இவரது பங்கு எழுத்தாளராகவும், இயக்குனராகவும் நடிகராகவும் இருக்கும். மேடை, சினிமா, தொலைக்காட்சி என்று ஒரு சுற்றுப்பயணத்தையே மேற்கொண்டிருப்பார்.  ஆனால் இவர் அன்றே இவரது தகுதிக்கு ஏற்ற விருதுக்களை பெற்றுள்ளார். இருப்பினும் இன்று பல விருதுக்கள் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இவரை அங்கீகரீக்க பல தொலைக்காட்சிகள் நிறுவனங்கள் மறந்து விடுகிறது என்பது முற்றிலும் ஒரு உண்மை. 
 
இவரது கடைசி படம் மணல் கயிறு -2. இவருக்கு என்று ஒரு நடிகர்கள் பட்டாளம் வைத்துக்கொண்டார். பல புதுமுகங்களுக்கே வாய்ப்பு தந்ததார். ஒரே கதையே நாடகத்திற்காகவும் சினிமாகாகவும் மாற்றி அமைத்து எடுப்பார். இவர் மேல் நம்பிக்கையற்றவர்களை நம்ப வைத்தார். இன்று இவரை மறந்தவர்கள் திரையிலும் தரையிலும் ஏராளம். மார்ச்-22 அன்று இயற்கை ஏந்தினார். 
 
இவருக்கென ஒரு தனி பாணி தான். யாரைக்கொண்டும் இவரை ஒப்பிடமுடியாது. 
 
இவரைப் பற்றி பதிவிட ISR Ventures பெருமைபடுகிறது.
Published in Actors
 
யார் என்றால் அது நடிகர் மோகன்தான்.. 
 
இன்னும் ஒரு சுவாரஸ்யம்... கமல் படத்தில் சின்ன சின்ன வேடங்களில் அறிமுகமானவர்கள் பிற்காலத்தில் அவருக்கு ரெண்டு பேர் ஃடப் பைட் கொடுத்தார் ஒருவர் ரஜினி மற்றவர் மோகன் என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா-?
 
ஆம் ரஜினி கமலுக்கு இணையான சில்வர் ஜூப்ளி நாயகன் மோகன் என்றால் நம்புங்கள்.
 
1980 ஆம் ஆண்டில் இருந்து 1990 வரை ரஜினி கமலின் தூக்கத்தை கெடுத்ததில் மோகனுக்கு முக்கிய பங்குண்டு....
 
1977 ஆம் ஆண்டு கமல் நடித்த கோகிலா மூலம்..... பாலுமகேந்திராவால் அறிமுகம் செய்யப்பட்டார்.. அதன் பின் 1980 ஆம் வெளிவந்த மூடுபனி..மற்றும் மகேந்திரனின் நெஞ்சத்தை கிள்ளாதே... அவருக்கு ஸ்டார் அந்தஸ்தினை பெற்றுக்கொடுத்தது எனலாம்.
 
அதன் பின் வெற்றியோ வெற்றிதான்... 
 
திரும்பி பார்க்க முடியாத , நினைத்து பார்க்க முடியாத, கனவிலும் நினைத்து பார்க்க முடியாத வெற்றி விழா படங்களில் நடித்தவர் மோகன்...
 
பயணங்கள் முடிவதில்லை... மற்றும் கிளிஞ்சல்கள் படங்களில் மோகனை தமிழ் ரசிகர்கள் தலைக்கு மேல் தூக்கி வைத்து கொண்டாடினைர்கள்..
 
25 நாள்  ஓடினால் இப்போது எல்லாம் பெரிய வெற்றி... 
 
மோகன் நடித்த பயணங்கள் முடிவதில்லை...500 நாட்கள் ஓடி சாதனை புரிந்த படம் என்றால் நம்புங்கள்...
 
1978 இல் இருந்து 1988 ஆம் ஆண்டு வரை இருந்த காலம் இருக்கின்றதே... தமிழ் சினிமாவுக்கு நடிகர் மோகனுக்கு அது பொற்காலம் என்றே சொல்லலாம்..
 
ஒரே நாளில் மூன்று படங்கள் ரிலிஸ் செய்த ஒரே தமிழ் நடிகர் மோன்தான்..
 
மூன்றில் ஒன்று பிளாப் ஆக வேண்டும் என்று அக்கலாத்தில் நிறைய பேர் வேண்டிக்கொண்டனர்.. 
 
மூன்று படங்களும் சில்வர் ஜூப்ளி திரைப்படங்கள்.
 
உதாரணத்துக்கு 1984 ஆம் ஆண்டு மட்டும் ஒரே வருடத்தில் மோகன் நடித்த வெளியான திரைப்படங்களின் எண்ணிக்கை எத்தனை தெரியுமா...?? 
 
மொத்தம் 19 திரைப்படங்கள்... எனக்கு தெரிந்து தமிழ் திரையுலகில் இந்த சாதனையை வேறு எந்த நடிகரும் முறியடிக்கவில்லை என்றே நினைக்கின்றேன்.
 
 ஒரே நாளில் மூன்று படங்கள் ரிலிஸ் ஆகி மூன்று மே வெள்ளிவிழா படங்கள் என்ற சாதனையையும் இதுவரை எவரும் வெல்லவில்லை.....
 
ஹீரோவாக அறிமுகமாகி முதல் மூன்று வருடங்களிலும் 300 நாட்கள் ஓடி சாதனை படைத்த மூன்று படங்களைக் கொடுத்த ஒரே ஹீரோ மோகன் மட்டுமே..பயணங்கள் முடிவதில்லை.நெஞ்சத்தைகிள்ளாதே, கிளிஞ்சல்கள் என்ற படங்கள் 
 
ஆர் சுந்தர்ராஜன் இசைஞானி மோகன் இணைந்த படம் என்றாலே அது மாபெரும் வெற்றிபடம் என பேசிய காலங்கள்... 
 
ரஜினி கமலுக்கே சவால் விட்ட மோகன் வெற்றி படங்களும், ஓடிய நாட்களும் இயக்குநர்களும்..
 
200 நாட்கள்- மணிவண்ணன் இயக்கத்தில் கோபுரங்கள் சாய்வதில்லை
 
365 நாட்கள்- மகேந்திரன் இயக்கத்தில் நெஞ்சத்தை கிள்ளாதே
 
300 நாட்கள்- ஆர்.சுந்தர்ராஜன்-பயணங்கள் முடிவதில்லை
 
200 நாட்கள்- மணிவண்ணன்-இளமை காலங்கள்
 
300 நாட்கள்- துரை.கிளிஞ்சல்கள்
 
200 நாட்கள்- மணிவண்ணன். நூறாவது நாள்
 
200 நாட்கள்-சுந்தர்ராஜன்.நான் பாடும் பாடல்
 
175 நாட்கள்- கே.பாலாஜி. ஓசை
 
200 நாட்கள்-ரங்கராஜன். உதயகீதம்
 
175 நாட்கள்-சுந்தர்ராஜன். சரணாலயம்
 
250 நாட்கள்- ஸ்ரீதர். தென்றலே என்னை தொடு
 
175 நாட்கள்-சுந்தர்ராஜன்.  குங்குமச்சிமிழ்
 
200 நாட்கள்-மணிரத்னம். இதய கோவில்
 
175 நாட்கள்- பூபதி.டிசம்பர் பூக்கள்
 
175 நாட்கள்- ரங்கராஜன். உயிரே உனக்காக
 
250 நாட்கள்- மணிரத்னம். மௌன ராகம்
 
175 நாட்கள்- தீர்த்தக் கரையினிலே, 500 நாட்கள்- விதி, 175 நாட்கள்- மனைவி சொல்லே மந்திரம், 175 நாட்கள்- ரெட்டைவால் குருவி, 200 நாட்கள்- மெல்ல திறந்த கதவு, 175 நாட்கள்- சகாதேவன் மகாதேவன் 
 
இதெல்லாம் இப்போதைய அல்ல இனி எப்போதும் கற்பனை கூட பண்ண முடியாது..
 
இப்படியாக 10 வருடங்கள் பட்டைய கிளப்பிய சில்வர் ஜூப்ளி நாயகன் நடிகர் மோகன் இன்று எந்த படத்திலும் நடிக்க வில்லை... 1990க்கு பிறகு படம் இல்லாமல் தவித்தார்... ஆனால் ஏன் மோகனை அதன் பிறகு குணச்சித்திர , வில்லன் , காமெடியன் படங்களில் அவருக்கு ஏன் வாய்ப்பு தமிழ் சினிமா வழங்வில்லை என்பது பெரிய  கேள்விதான்..
 
யோசித்து பாருங்கள் மோகனின் பார்வையில் பத்து வருடம் தூங்க கூட நேரம் இல்லாமல் நடித்தவர்... ஷார்ட் ரெடி, ஆக்ஷன், கட் போன்ற எந்த சத்தமும்  கடந்த பல வருடங்களாக  கேட்காமல் இருப்பது எவ்வளவு கொடுமை.. 
 
சினிமா உலகம் அப்படியானதுதான்.
Published in Actors
பீயர் அடிச்சிட்டு செக்ஸ் பண்ணுவதன் விளைவு கேப்மாரி தனம்(18+)         
 
                                          கேப்மாரி 
 
திரு. எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்களது இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகிய படம் கேப்மாரி. படித்து ஒரு நல்ல வேலையில் இருக்கற ஒருவன் குடியின் காரணமாக எப்படி கேப்மாரி ஆகறான் என்பதே கதை. 
 
நடிகர் விஜய் உடைய சாயல் இருக்கும் பகவதி விஜயின் தம்பி "ஜெய்" நடிப்புல வெளிவந்த படம். 
 
படம் சில இடங்களில்  நடிகர் இளையதளபதி விஜயின் மேடை  வசனங்கள் மற்றும் சினிமா வசனங்களை ஒன்று திரட்டிய பாடல் அமைந்திருக்கும். 
 
எஸ்.ஏ.சந்திரசேகரின் படம் (A) certificate படமா என்று திகைக்க வைத்தது. சும்மா ஓடும் ரயிலில் ஒரே கம்பார்ட்மென்ட்டில்  சந்தித்த இருவரும் குடிக்கின்றனர். பின்னர் செக்ஸ் ஆகி விடுகிறது. இரண்டு முறை மட்டும் சந்தித்தவர்கள் கல்யாணம் செய்யலாம் என்று முடிவெடுக்கின்றனர். பாதி படம் முழுவதும் செக்ஸ் காதல் மட்டுமே காதல் வகித்திருக்கும். இருவருக்கும் இடையில் அளவுக்கு அதிகமான அன்பு நிறைந்திருக்கும். 
 
குழந்தைகள் நம்மிடையே உள்ள சந்தோஷத்தை கெடுத்து விடும் என்று எண்ணி தள்ளிப்போட்டால் நாம் நினைக்காத அளவுக்கு அதிகமான விளைவுகள் ஆகும் என்று படம் சொல்லுகிறது. கூடவே மாடன் கல்சர் மற்றும் மிடில் கல்சர் வித்தியாசமுமீ சொல்லப்படும். 
 
குடி மனுஷன எந்த அளவுக்கு Weak person யாக வைத்திருக்கு தெரியுமா? நாலு ரவுண்டு பீயர் அடித்து அதன் உச்சக்கட்டத்தில் செக்ஸ் கேக்கும் அளவுக்கு உண்டான பழக்கங்கள் மிகவும் ஆபத்து ஆனவை என்பது படத்தின் மையக்கருத்து.
 
ஒரே வீட்டில் இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆண் இருக்கும் நிலை இன்றளவும் கௌவர குறைச்சல்தான்.  மேலும்
இந்த காலகட்டத்தில் (2019) காதலுக்குள் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் கணவன் மனைவியை காட்டிட்டு உச்சக்கட்டத்தில் சின்ன வீடு பெரியவீடு என்று இரண்டு மனைவிமார்களுடனும் குழந்தை உடனும் இருப்பதுப்போல இருக்கும் காட்சி (1980) களை அதாவது அந்த வருடங்களில் வந்த சில படங்களை ஞாபகப்படுத்தும் விதமாக இருந்தது. 
 
மேலும் இந்த மாதிரி கேப்மாரி தனம் உடையவனை பற்றிய கதைதான் இது. 
 
கீதாபாண்டியன்
Published in Movies this week
முன்னணி நடிகர்களைக் கொண்டு வெளிவந்து நம்மை ஏமாற்றிய படம் தம்பி...
 
தன் மகள் செய்த ஒரு தவறை மறைக்க திரும்ப திரும்ப தப்புச்செய்கின்ற குடும்பத்துடன் தப்பு தப்பா செய்தவன் உள்ளே நுழைந்து நல்லவனாய் மாறுகிறான். 
 
காணாம போன தம்பி யார் அவனுக்கு என்ன ஆச்சு என்பதே கதை. தேவையில்லாம திரைக்கதை நீண்டுக்கொண்டு இருக்கிறது. டிரைலர்காக படம் எடுத்தமாறி இருந்தது. ஒரு குடும்பமே நடிக்குது. 
 
படத்தின் கடைசி நிமிடம் வரை உண்மையான சரவணன் யார் என்று விறுவிறுப்பைக் கொடுக்கிறது. ஜோதிகாவை மையமாக வைத்து படம் நகர்கிறது இருப்பினும் ஜோதிகாவின் பங்கு குறைவுதான். ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் நடிக்கும் படத்தின் எதிர்ப்பார்ப்பை உடைகிறது. 
 
பாதி வில்லனாக சத்யராஜ் தன்னுடைய பழைய முகத்தைக்காட்டிள்ளார். ஆரம்பத்துல இருந்து வில்லனா இருக்கறவன்  முடிவு மொக்கையாகுகிறது. 
 
கூடவே இருக்கறவன் கெட்டவனாகவும்,  பொறுக்கியை ஹீரோவாகவும் கதாபாத்திரம் சித்தரித்துள்ளனர். 
 
பழங்குடியினர் நல்வாழ்வு என்ற ஒரு விஷயத்தை (TOOL)  உதவியாக எடுத்து கதை அடுத்த அடுத்த கட்டத்திற்கு கதை நகருக்கிறது. ஆனால் அதனால் பழங்குடியினருக்கு என்ன உபயோகம் இருக்குனு படத்துல பார்த்தா தெரியும்.
 
குழந்தைகளை வளர்க்கும்போதே கண்காணித்து நல்லது கெட்டது சொல்லிக்கொடுத்து வளர்க்கனும். அம்மா, பாட்டி, அக்கா, அப்பானு எல்லாரும் இருக்கறவன் தப்புப்பண்ணறான் அப்படினா அது யாரு மேல தப்பு. 
 
இப்படி கதைய போற போக்குல விட்டுட்டு பின்னாடி Flashback சொல்லி கதைய இழுத்துப்பிடிக்கறாங்க. 
 
இறுதியில் தவறை உணர்ந்தவர்கள் உண்மையான பாசத்துடன் ஒரே குடும்பமாக வாழப்போகிறார்கள் என்பதே முடிவு.
-கீதாபாண்டியன்
 
 
Published in Movies this week
காவல்துறை உங்கள் நண்பன்
 
ஒரு காமன் பிப்பிள்ளுனு சொல்லக்கூடிய பொது மக்களுடன் காவல்துறை எந்த அளவில் உறவு வைத்துள்ளது. தப்பு பண்ணறவன் விட்டுட்டு அப்பாவியை தண்டிக்கற காவல்துறையுடைய ஆதிக்கத்தையும் எதார்த்தமான பொது ஜெனங்களுடைய அழுகையும் சொல்லும் படம். பொது மக்களுடைய பயம்தான் போலீஸ்காரர்களுடைய ஆயுதம் என்று சொல்லக்கூடிய வகையில் அழுத்தமான காட்சிகளை உள்ளடக்கியிருக்கு கதை களம். தெரிஞ்சோ தெரியாமலோ மாட்டிக்கிட்டு முழிக்கும் கதாநாயகன். மக்களுக்காகதான் காவல்துறை. காவல்துறைக்காக மக்கள் இல்ல என்றுச்சொல்லும் வகையில் ஆழமான கருத்தை உள்ளடக்கியிருக்கு டிரைலர். 
 
கீதாபாண்டியன்
 
 
 
Published in Movies this week
Friday, 28 February 2020 04:45

மாஸ்டர்

மாஸ்டரால் களைகட்டும் தியேட்டர்கள் :
 
தளபதி விஜய் நடிப்பில், மாஸ்டர் படம் தயாராகி வருகிறது. இப்படமானது, வரும் ஏப்ரல் 9 அன்று ரிலீஸ் ஆக உள்ளது. படம் ரிலீஸ் ஆக இன்னம் அதிக நாட்கள் இருக்கும் பட்சத்தில், இப்போதே, சில தியேட்டர்களில் மாஸ்டர் பட போஸ்டர்கள் களைகட்ட ஆரம்பித்து விட்டது.
Published in Cine bytes

நாகேஷ் கிருஷ்ணமூர்த்தி!
நாகேசுக்கு டப்பிங் கொடுத்தவர்.

எத்தனையோ படங்களில் இவரை பார்த்திருப்பீர்கள். மீண்டும் கோகிலா படத்தில் ஸ்ரீதேவியுடன் நடித்திருப்பாரே என்றால்... ஓ அவரா என்பீர்கள்.

எங்கள் தந்தை ஐ.எஸ்.ஆரின் நெருங்கிய நண்பர். அவருடன் கனிமுத்துப்பா, காசியாத்திரை போன்ற படங்களில் நடித்துள்ளார். கஸ்டம்சில் பணிபுரிந்தபடியே திரைப்படங்களில் நடித்தார். மிகக் கெடுபிடியான ஆபிசர் என்பார்கள்.

நாகேஷ் பிஸியாக இருந்தபோது, பல படங்களில் நாகேஷிக்காக டப்பிங் குரல் கொடுத்தார். அதனால்தான் அவருக்கு அந்தப் பெயர் வந்தது.

தகவல் : https://antrukandamugam.wordpress.com/2016/05/05/krishnamoorthy-nagesh-krishnamoorthy/

Published in Actors
"MSD மொரட்டு சிங்கிள் தேவா", -web series  இவரு இன்னொரு தனுஷ்..
யூடூப் வாடிக்கையாளர்களின் மனம் கவர்ந்த அடுத்த தனுஷ் பறார் பறார்..
 
வருங்கால தனுஷ் யாக வலம் வர காத்துக்கொண்டிருக்கிறார் Sri Ram. யூடூபில் பலரின் கனவு நாயகனாக இருக்கக்கூடிய இவர். சின்ன சின்ன காமெடி கான்செப்ட் பண்ணி அசத்துவார். இவருடைய அடுத்த அவதாரம் வெப் சீரிஸ் நாயகன். 
 
2000 ம் ஆண்டுகளின் திரைப்பட கதாநாயகன்கள் உடைய முதல் அறிமுக காட்சிப்போல அமைந்திருக்கு MSD ல் Sri Ram அறிமுக காட்சி. சீரிஸ்   ஆரம்பத்துல வரக்கூடிய இரண்டு நிமிட காதல் பற்றி விளக்கும் வசனம் பார்ப்பதற்கு VIP தனுஷ் போலவே தோன்றுகிறது.
 
காதலர்களை கழட்டி விடுதல், சேர்த்து வைத்தல் என்று அந்த வேலையை மட்டும் வெட்கமே இல்லாம பார்க்கும் மொரட்டு சிங்கிள். 
 
சும்மா, நானும் படிக்கிறேன் என்று மொக்கை வாங்கும் இளைஞன். ஆங்கிலத்தில் ஸ்பெலிங் தெரியல என்று ஒத்துக்கொள்ளும் தற்பெருமை உடைவன். 
 
இந்த காலத்துல அப்பா அம்மா, பிள்ளைங்களுக்கு பீரிடம் கொடுக்கறாங்க. ஆனால் அத சரியா பயன்படுத்திக்காம 90ஸ்  கிட்ஸ் கெட்டுப்போறாங்க. அப்படினு MSD சொல்லுது. 
 
மனதிற்கு விருப்பம் உள்ள பெண்ணிடம் Hai  சொல்லவே தயங்கிய காலம் போயி Coffee என்று ஒரு வார்த்தையில் ஒரு பிணைப்பையும் புரித்தலையும் தெளிவாச்சொல்லி  மொரட்டு சிங்கிள் புதுமையை படைக்கிறது.
 
மேலும் ஸ்டெல், காமெடி, நடனம்,பாடல், நட்பு, பாசம், புரிதல், வசனம் எல்லாத்தையும் சரியா எங்கையெல்லாம் போடனுமோ அங்கையெல்லாம் போட்டு நல்ல முயற்சியை MSD குழுவினர்கள் எடுத்துள்ளனர். இந்த ஆரம்பத்தையும் மனமார வாழ்த்துக்கிறது  ISR Ventures.
 
 
 
 
 
Published in Web series

Calendar

« March 2024 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
        1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 31