Log in

Register



 திரைக்கதையில் திக்கும் கதை--பெண்குயின்
 
பெண்குயின் சொன்ன உடனே நான் நினைச்சது இந்த படம் பெண்குயின் சார்ந்து வருக்கிற படமோ அல்லது அதுதான் இந்த படத்தோட முக்கியமான களம்னு நினைச்சேன். படம் பார்த்த பின்னாடிதான் தெரியுது. பெண்குயினுக்கும் படத்துக்கும் சமந்தமே இல்லனு. குயின் என்றால் ராணி என்று. கீர்த்தி சுரேஷ் தான் அந்த ராணி. 
 
படத்தின் ஒரு வரி என்னனு பார்த்தால் "தாய்மை" தாயின் குணத்தை பிரதிபலிக்கற கதையே பெண்குயின். "Mother is not a Role. It s Attitude".  
 
***இந்த படத்தின் திரைக்கதையே சற்று விமர்சனத்துக்குரியது***
 
நிறை மாத கர்பிணியாக காட்டப்படும் பெண் கீர்த்தி சுரேஷ். தன் 4 வயது குழந்தை காணாம போன பிறகு பைத்தியகாரி மாதிரி ஆயிட்டாள். தினம் தினம் வேதனை அழுகை மேலும் அவளின் செயல்கள் கணவனுக்கு வலியை ஏற்படுத்தியது. அப்படி இருந்ததால் கணவன் விட்டுட்டு போயிட்டான். தற்போது குழந்தையும் இல்லாமல் கணவனும் இல்லாமல் தனிமரமானவள். அந்த வலியிலிருந்து வெளியே வந்து இரண்டாவது கல்யாணம் செய்து தாம்பத்தியமும் செய்து இடையே தன் தொலைந்துப்போன குழந்தையும் நினைச்சிட்டு இருக்கிறாளாம். இரண்டாவது புருஷனிடம் இருந்த அன்பை முதல் புருஷனிடம் வைத்திருந்தால் அவன் விட்டுட்டு போயிருப்பானா? 
 
யார் அந்த கிட்னாப்பர் என்று தெரியாமல் குழம்பிப்போன கீர்த்தி சுரேஷ்க்கு தினமும் ஒரு மாதிரியான கனவு வருகிறது. அதில் ஒரு உருவமும் வருகிறது. ஏன்னென்றால் குழந்தை காணாமப்போன விஷயம் அவளுக்குத் தெரிவதற்கு முன்னாடி ஒரு பெண் குழந்தை மூலம் கடைசியா அவள் கேள்விப்பட்ட விவரம் அது. அதனால அவளது கனவில் அந்த உருவம் வருகிறது என்று வைத்துக்கொள்ளலாம். அந்த உருவத்தையே தொலைந்துப்போன குழந்தை கிடைத்தற்குப்பின் வரைகிறான். ஆனால் ஒரு காட்சியில் "என்னோட கனவுல வந்த உருவத்தை அவனும் வரைகிறானு" கீர்த்தி சுரேஷ் சொல்லுவாள். கேள்விப்பட்டது கனவாக வருகிறது. கடத்திட்டுப்போன உருவத்தை அந்த பையன் வரைகிறான். கடத்திட்டுப்போன உருவத்தைதான் கீர்த்தி சுரேஷ் கேள்விப்படுகிறாள். எனவே திரைக்கதையில்  வசனங்களை எழுதும்போது இதனை கவனிக்கவில்லை. 
 
படம் ஆரம்பத்தவுடன் சில நிமிடங்களின் அமைதி படத்தை பார்ப்பதற்கு சலிப்பை ஏற்படுத்தும் விதத்தில் உள்ளது. கதாபாத்திரங்களுக்கு அறிமுகம் இல்லாமலே படம் ஆரம்பிக்கிறது. 
 
அஜீ மாதிரி இன்னொரு குழந்தை தொலைந்துப்போக கூடும். அஜீ கிடைத்த பின்னர் ஒரு காட்சியில் நாய் மோப்பம் பிடித்துக்கொண்டு ஒரு வீட்டிற்கு செல்லும், அந்த டாக்டர் மீது சந்தேகத்தை உண்டுப்பண்ணும் சில காட்சிகள் வரும். உதாரணத்திற்கு டாக்டரை வீட்டு வாசலில் பார்த்தவுடன் அஜீ பயந்து அம்மாவின் பின்னாடி போவான்.  கீர்த்திக்கு அந்த கிட்னாப்பர் யார் என்று தெரியும் வரை அந்த டாக்டரின் பங்கு இருந்தது. அதனை தெரியப்படுத்தனும் என்பதற்காக அந்த கதாப்பாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது பச்சையா தெரியுது. இவைகள் மக்களை திசை திருப்ப எடுக்கப்பட்ட காட்சிகள் என்றே சொல்லலாம். டாக்டர் மற்றும் கீர்த்தி சுரேஷ் கேள்வி பதில்கள் காட்சி நன்றாக வடிவமைக்கப்பட்டுள்ள உழைப்பு திரையில் தெரிகிறது. 
 
அந்த கிட்னாப்பர் கீர்த்தி சுரேஷ் வீட்டுக்கு வரும் காட்சியில் அது ஒரு ஆண் உருவம் என்பது போல தெரியும். இறுதி காட்சியில் பெண் உருவத்தில் வரும்போது உடம்பு அந்த அளவுக்கு ஸ்ட்ப்பாக இருக்காது. 
 
அஜீ தப்பிக்கும்போது, அந்த பெண்ணுடைய முகத்தை பார்ப்பதுப்போல் இறுதியில் flash back சொல்லப்படும். ஆனால் தன் அம்மாவின் தோழியாக பல முறை பார்த்த போதும் அந்த பையனுக்கு பயம் வருவதுப்போல ஒரு காட்சி கூட இருக்காது. 
 
ஒரு குழந்தையை தொலைத்த அம்மாவின் அன்பும், தவிப்பும், தனியாக படும் போராட்டமும் காட்டப்படும். ஆனால் உச்சக்கட்டத்தில் குழந்தை ஏன் காணாம போனது என்ற காரணம் கதையில் எதிர்ப்பாக்க முடியாத ஒன்றாக இருக்கும்.
 
அந்த காலத்தில் ஒரே குடும்பத்தில் 10,12 குழந்தைகள் இருந்தது. அவர்களுள் ஒருவரை ஒருவர் ஒப்பிட்டு பேசும் பழக்கம் பெற்றோர்களுக்கு இருந்தது. அதனை குழந்தைகளும் பெரிசாக எடுத்துக்க மாட்டாங்க. ஆனால் காலம் போக போக, வீட்டுக்கு ஒரு குழந்தை என்று ஆனது. அப்போது குழந்தை நல்லா படிக்கல என்றாலும் வேறன்ன காரணமென்றாலும் நம் வீட்டு குழந்தையை வேற வீட்டுக்குழந்தையுடன் ஒப்பிட்டு பேச ஆரம்பித்தோம். அந்த ஒப்பிட்டுப்பேசுவதே ஒரு குற்றம் என்று சொல்வதை அதன் விளைவு சில குழந்தைகளின் எண்ணங்களை சைகோ தனமாக மாற்றுகிறது என்பதை ஒரு கருவாக எடுத்து ஒருவருடைய பலவீணத்தை பலமாக மாற்றிக்கொள்ளும் சைகோ பெண் விரித்த வளையிலிருந்து தப்பிக்கும் பெண்குயின் தன் குழந்தைகளை தற்காத்துக்கொள்ளும் கதையே இது.
 
கேம்ரா ஆங்கிள்  Long Shot யாகவும்  closeup shot அதிலே சற்று வித்தியாசமானதாக இருக்கும்.  எடுக்கப்பட்டிருக்கும். மலைகளைக் காட்டும் ஆங்கிள் பசுமையான ஒளிப்பதிவை தந்தது. மொத்ததில் நல்ல முயற்சி. 
 
-கீதாபாண்டியன்
 
 
 
Published in Movies this week

Calendar

« April 2024 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30