Print this page
Friday, 26 June 2020 05:46

இட்லி

Written by Geetha Pandian
Rate this item
(0 votes)
இட்லி இட்லி சரண்யா, கல்பனா, சரளா
வயதான பாட்டி ஆடைகள் இல்லாமல்  போட்டோ எடுத்து ??
 
வயதான பாட்டிகளாக மூன்று பெண்கள் சரண்யா, கல்பனா, சரளா ஆகியோர்  நல்ல நட்பில் உள்ளனர். கல்பனாக்கு வியாதி இருப்பதால் மருமகளுடன் சண்டை, சிறு வயதிலிருந்து கல்யாணம் பண்ணிக்காமல் இப்போ 50 வயதில் காதலித்துக்கொண்டிருக்கும் சரளா கதாபாத்திரம். சரண்யா, பெற்றோரை இழந்த தன் பேத்திக்கு பாதுகாப்பாய் உள்ளார். அவள் கோவையில் விடுதியில் கல்லூரி படிக்கும் பெண். கையில் போனும் கையுமா யாருட்டையாவது பேசிக்கொண்டே இருப்பாள். 
 
இணையதளத்தை தவறாக பயன்படுத்தும் சிலரின் பழக்கம் ஏற்பட்டு ஆடைகள் இல்லாமல்  போட்டோ எடுத்து வைத்துக்கொண்டு தேவையான பணத்தை கேட்டு மிரட்டுவர். இந்த பிரச்சனையில் சிக்கிக்கொண்ட பேத்தி என் பாட்டியிடம் நாடகமாடுவாள்.
 
தனக்கு இருதய பிரச்சனை இருக்கு என்று தன் பாட்டியிடம் தன் தோழிட்டச்சொல்லச் சொல்லுவாள். உலகம் அறியாத பாட்டி அப்ரேஷனுக்கு பணம் கஷ்டப்பட்டு தேற்றி அதனை பேங்க் ல போடப்போகும்போது, அந்த பேங்கை கொல்லைகாரர்கள் கொல்லையடித்துச் செல்வர். பணத்தை தொலைத்த பாட்டிகள் மூவரும் சேர்த்து திட்டம் போட்டு பணத்தை கொல்லயடிக்கப்போவர். அங்கு என்ன நடந்தது என்பதே இட்லி கதை. 
 
காமெடி படமாக இருந்தாலும் நியாயத்தை தட்டிக்கேப்பர், கொல்லை, திவிரவாதம், வன்கொடுமை என்று படத்தின் கதை அங்குமுங்கும் ஆழ்பறிக்கும். போலீஸ் மற்றும் தீவிரவாத தடுப்புப்பிரிவினரின் நகைச்சுவையும், வாங்கும் மொக்கையும் மட்டுமே இருக்கும். சில கதாபாத்திரம் ஏன் இருக்கு என்றே தெரியவில்லை.
 
எதிர்பார்ப்பில் ஏமாற்றத்தை தந்தாலும் வயதான ஆண்கள் ஹீரோவாக நடிக்கும்போது படம் ஓடுகிறது. அவர்களுக்கு இவர்களும் சலைத்தவர்கள் இல்ல என்று மூன்று வயதான பெண்களை மையப்படுத்தி கதை எடுக்கப்பட்டிருப்பது நல்ல முயற்சி. எந்த டரேக்குல பயணிப்பது என்று தெரியாமல் எல்லா பக்கமும் சென்றிருக்கும் கதை.
 
படத்தின் இயக்குனர், படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தை எடுத்து நடித்துப்பார். மேலும் இந்த படத்தில் நடித்த மூவரில் கல்பனா படத்தின் பாதியில இறந்துவிட்டார் என்பதால் சில காட்சிகளில் அவரின் பங்கும் பேச்சும் இருக்காது. பல இடங்களில் அவர்க்கு பதில்  டூப் போட்டுயிருப்பதும் தெரியும். நல்லா நடிகையாக பல கதாபாத்திரத்தை ஏற்று ஆரோக்கியமான படத்தை தந்தவர். 
 
மூன்று பாட்டிகளின் கதை -இட்லி
 
-கீதாபாண்டியன்.
Read 509 times
Login to post comments