Log in

Register



போலீஸ் மகன் சமூக விரோதி தந்தையை கொல்லும் கதை. இயக்குனர் பாக்கியராஜ் கதை வசனம் எழுதி எடுக்கப்பட்ட கதை. கதாபாத்திரத்தின் வடிவமைப்பைப் பொறுத்தவரை அதித அல்லது திணிக்கப்பட்டவையாக இருந்தது. தந்தை கமலுடைய கதாபாத்திரம் ஆங்கிலம் தெரியாதனாலே வெகுளியாக காட்டப்பட்டார். கண்மூடிதனமாக ஒரு கட்சியின் தொண்டராக இருக்கிறார். 
 
அநியாயத்திற்கு  ராதாவை கற்பழிக்கும் காட்சியில் அரசியலின் ஆளுமையை வெளிப்படையாக காட்டியிருப்பர். கணவன் கமலுடைய பரிதாபகரமான நிலையை பார்ப்பர்கள் மனதில் ஆணி அடிச்சமாதிரி காட்சியை வடிவமைத்திருப்பர். கமல் நம்பும் போலீஸ் அவனை ஏமாற்றி, கண் முன்னாடியே அதாரத்தை கலத்திருப்பான். அரசியல் வாதிக்கு டாக்டர் உடந்தை என்பது கைதியின் டைரி படத்தின் இந்த காட்சியில் வந்த சம்பவங்கள் (இன்றளவு பேசப்படும் சாத்தான்குளம் பிரச்சனையை கண் முன்னே காட்டியவாறு தோன்னியது. அடித்து உதைத்த போலீஸ்காரர்கள், போலி சான்றிதழ் தந்த மருத்துவர்கள், மேலும் உள்ளார்ந்த அரசியல்வாதிகள் மற்றும் பலருடைய அராஜகத்தை கண் கூட பார்த்த மாதிரி இருந்தது) 
 
ரேவதி கதாபாத்திரம் விளையாட்டாகவும் எளிமையாக ஏமாற்றி விடலாம் என்ற வகையிலும் காட்டப்பட்டது. இயல்பான விளையாட்டுப்பொன்னுடைய காதல், கோபம், அன்பு இவர் வந்த இடங்கள் ஸ்டெலாகவும் அழகாகவும் இருந்தது. தந்தை கமல் மற்றும் மகன் கமல் என்று இருவருடமும் இவர் நடிக்கும்போது வித்தியாசம் காட்டியிருப்பார். ரேவதிக்கு தனிதன்மை இருந்தாலும் துணையாக ஒரு கதாபாத்திரம் வரனுமே என்று வைத்தது மாதிரி இருந்தது. மகன் கமலின் வளர்ப்பு தந்தையுடன் 20 வருடம் வளர்த்திய பாசத்தை இன்னும் வெளிப்படுத்திருக்கலாம். 
 
ஜெயிலிலிருந்து வந்தவருக்கு துப்பாக்கி மற்றும் கொலை செய்வதற்கு தேவையான உபகரங்கள் எவ்வாறு கிடைத்தது என்ற விளக்கத்தை படத்தில் காட்டவே இல்லை. 
 
எனது தாய் கற்பழித்தார்கள் அதனாலே தற்கொலை செய்துக்கொண்டாள். தந்தை ஜெயிலுக்கு சென்று வந்த கைதி என்ற எமோஸ்னல் மகன் கமலிடம் இல்லாதது போற் இன்றைய பார்வையாளருக்கு தெரிகிறது. ஆங்கிலம் பேச தெரிந்த தைரியசாலியாக தந்தை கமலை படத்தின் இறுதியில் காட்டியிருப்பர். இந்த ஆங்கிலத்தை வைத்து கதாபாத்திர வடிவமைப்பின் வித்தியாசம் வர்க்கப்பிரிவினை போற் தெரிகிறது. மேலும் தந்தை கமலின் இளமை மற்றும் முழுமை, மகன் கமலின் போலீஸ் தனம் அனைத்தும் தலைமுடி, மீசையில் வித்தியாசத்தைக்காட்டிருப்பர். 
 
கடைசி ஐந்து நிமிடம் யார் யாரை கொல்லுவார் என்ற பதட்டத்தையும் எதிர்ப்பார்ப்பையும் உண்டு பண்ணியிருப்பர். எனவே மொத்தத்தில் கைதியின் டைரியில் சில எழுத்து பிழையுடன் இருந்தது என்று தெரிகிறது. 
 
-கீதாபாண்டியன்
Published in Classic Movies
ஒற்றுமையும், வேற்றுமையும்
 
இத்தனை வருட தமிழ் சினிமாவில் கல்லூரி வாழ்க்கையை மையப்படுத்தியோ, அதனை ஒரு காரணப்படுத்தியோ எடுக்கப்பட்ட காட்சிகள் இல்லாத படமே கிடையாது. அதில் பெரும்வாரியாக மக்களை சென்று அடைந்த கல்லூரி கதைகளில் நம்மவர் என்ற கமலின் படமும், அடுத்த சாட்டை என்ற சமுத்திரகனி படமும் கண்டிப்பாக 90 ஸ் கிட்ஸ் மற்றும் 2K கிட்ஸ் மனதில் நீங்காத இடம் பிடித்தவை. 
 
ஒரே மாதிரியான எண்ணங்கள் பலருக்கு வரலாம் அதனை எவ்வாறு திரையில் பரதிபலிக்கரோம் என்பதே முக்கியமான ஒன்றாகும். அதுலையே நமது திறமை ஒழிந்துள்ளது. மேலும் அவ்வாறு தயாராகிய இரு படங்கள் தான் இவைகள்.
 
இந்த இரண்டு படத்திற்கும் ஒரு சில ஒற்றுமையும், வேற்றுமையும் உள்ளது. அவைகளைப் பார்ப்போம். ஆசிரியராக பொறுப்பேற்று வரும் கதாபாத்திரம் கமல் மற்றும் சமுத்திரகனி இருவருமே சிறு வயதில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களாக அலிச்சாட்டியம் பண்ணியவர்கள் என்று சொல்லப்படும். ஆனால் காட்சிகள் காட்டப்படாது.
 
நம்மவர் கதையிலும் அடுத்த சாட்டை கதையிலும் மாணவர்களுக்கு பிடித்த ஒரு ஆசிரியராக காலப்போக்கில் மாறியிடுவர்.  மேலும் இந்த இரண்டு கதையிலும் கல்லூரி வளாகத்தை சுத்தம் செய்யுற பணியில் ஒரு பாடல் மூலம் ஈடுபட்டுயிபர்..
 
இரண்டிலும் வில்லனாக ஒரு மாணவன் தான் இருப்பான். ஆனால் நம்மவர் வில்லன் மது, மாது, கஞ்சாவென்று பலவைகளை பயன்படுத்துபவன். ஆனால் அடுத்த சாட்டை வில்லனுக்கு நிதானம் இல்லாத காதல் மட்டுமே அவனை வில்லனாக காட்டும். 
 
அடுத்த சாட்டை கனி அவர்களுக்கு குடும்பம், கல்யாணம் போன்ற காட்சிகள் இருக்கும். நம்மவர் கமல் அவர்களுக்கு தொற்றுநோய், லிவ்விங் டூ கேதரில் இருப்பர். மேலும் மிக பெரிய ஒற்றுமையாக இரண்டு கதையிலும் கூட வேலைச்செய்யற ஆசிரியரையே காதல் திருமணம் செய்வர்.
 
மேலும் ஒரு கல்லூரி படம் என்றாலே பெரும்பாலும் இது மாதிரியான காட்சிகள் தான் அமைகிறது. இதுவே அடுத்த சாட்டையில் நம்மவர். நம்மவர் கமல் முக பாவனையில் அடுத்து மாஸ்டர் விஜய் ஸ்டெல் இருப்பதாக தெரிகிறது.  அதுவும் கல்லூரி படம் என்பது நாம் அறிந்ததே. இருப்பினும் மாஸ்டரின் புதுமையை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
-கீதாபாண்டியன்
Published in Classic Movies
Thursday, 02 April 2020 10:05

மீண்டும் கோகிலா

கமல் ஒரு சபல புத்திக்காரர்
 
கமலின் சபல நடிப்பில் வெளியான நகைச்சுவை திரைப்படம்.  வீட்டுல சுறுசுறுப்பாக காலை எழுந்து யோகா செய்து விட்டு பொண்டாட்டி கையால தலைக்கு எண்ணெய் தேய்ச்சு குளிச்சு பொண்டாட்டி அயன் பண்ணி வைச்ச துணியப்போட்டுட்டு, பொண்டாட்டி கையால் சாப்பிட்டு சூவ் போட்டுட்டு டிப் டாபா கிளம்பி ஆபிஸ் போயி ஈ ஓட்டிட்டு வேலையே செய்யாம அசதியில தூங்கற வக்கீல் தான் மீண்டும் கோகிலா ஹீரோ.
 
நம் ஐயர் ஆளவா மணிக்கு ஒரேயொரு மனைவியும் ஒரு பொன்னும் இருக்காங்க. ஆத்துக்காரிக்கு புருஷன் மேல அப்படியொரு பாசம் நம்பிக்க. ஆனால் சார்வால் பொண்டாட்டிய பொது இடத்துக்கு கூட்டிட்டு போகறதே கௌரவ குறைச்சல். நெட்டுல மட்டும் கௌரவம் காணாம போயிடும். அது மட்டுமா இன்னொரு பொன்னு மேல அப்படியொரு நெருக்கமாவில்ல இருக்கான். 
இவன் வக்கீள் மணியா? இல்ல வழியற மணியா?
 
கேஸ் சே கிடைக்காம இருந்து, நண்பர் ஒருத்தரால ஒரு நடிகையோட சவகாசம் கிடைக்குது. அவளோட கேஸ் இந்த மணி எடுத்து நடத்துனா நல்லாயிருக்கும் னு அந்த மேனாமினிக்கி ஆசைப்பட்டாள்...
மணிக்கும் கோகிலாக்கும் கேஸ் கிடைச்சுதுல அப்படியொரு சந்தோஷம். ஆனால் மணி வக்கீலா மட்டுமா இருந்தாரு. பொண்டாட்டிட்ட பொயிச்சொல்லிட்டு அந்த நடிகையிட்ட வழிஞ்சுட்டுதானே இருந்தாரு. வெளியுர் போறது என்ன? பாட்டுப்படறது என்ன, சைக்கிள் ஓட்டறது என்ன? கதை பேசறது என்ன? சபலத்தோட பாக்கறது என்ன?...
 
ஒரு வழியா, அந்த நடிகையோட கேஸ் ல ஜெயிச்சுக்கொடுத்திட்டாரு. நாளாக நாளாக கோகிலாக்கு பயம் வந்திருச்சு. எங்க தான் புருஷன் தன்னை விட்டுட்டு போயிடுவானோனு பயந்து நேரா அந்த மேனாமினிட்டப்போயி பேசி ஒரு வாங்கு வாங்கிட்டு வந்திட்டாள்.
கடைசியா அந்த நடிகையே கண்டப்படி பேசி மணிய அவமானம் படுத்திட்டாளே..
 
சுகத்துக்காகவும் என்னோட பணத்துக்காவும் என்னோட பேசுனவங்க மத்தியில நீங்க என்னை சிரிக்க வைச்சிங்க. உங்க கிட்ட நல்ல நட்புதான் எதிர்ப்பாத்தேன். ஆனால் நீங்க தப்பான எண்ணத்தோட பழகியிருக்கேங்களே 
ஐ சே யு கெட்அவுட் னு சூட்டிங் ல எல்லாத்து முன்னாடியும் கத்திட்டாள். 
 
 பெத்த பிள்ளை உயிருக்கு போராடிட்டு கிடக்கு. அந்த நேரத்துல அந்த நடிகைதான் வந்துக்காப்பாத்துனாள். மணி, தன்னோட தவற புரிச்சுட்டு மீண்டும் கோகிலாட்டையே வந்துட்டான். 
 
கையில வெண்ணெய் வைச்சிட்டு நெயிக்கு அழச்சாங்கற கதை தான் மணியுது.
 
-கீதாபாண்டியன்
Published in Classic Movies
இறந்த காலத்திற்கும் நிகழ் காலத்திற்கு உள்ள படைப்பு ஒற்றுமை
 
ராஜ பார்வையில் அம்மா இல்லாம சித்திக்கொடுமையில் வளர்ந்த மகன். ஒரு அதிர்ச்சியின் மூலம் வந்த நோயால் கண் பார்வையற்று பார்வையற்றோர் விடுதியில தங்கியிருந்து பின்னர் அங்கிலிருந்து வெளியே வந்து ஒரு எளிய வீட்டில் தங்கியிருப்பார் கமல். படம் முழுக்க ஒரே நண்பர்.
 
சைகோவில் அம்மா அப்பா கனடாவில் இருப்பதாக கூறி விட்டு ஒரு நல்ல வீட்டில் தனிமை கலந்து ஒரு நண்பருடன் தங்கியிருப்பார் உதயநிதி. 
 
ராஜ பார்வையில் அழகான ஒரு பெண் லிப்பிட்டில் கமலை தப்பாக நினைச்சி குச்சியை கீழே தள்ளி விடுவாள். பின்னர் கமலுக்கு பார்வையில்லை என்று புரிந்துக்கொள்வாள். பின்னர் ஒரு இசை நிகழ்ச்சிகளுக்கு போயி பார்த்து விட்டு கமலிடம் மனிப்புக்கேப்பாள்.
 
சைகோவில் பிரபல வானொலியில் ஆர்.ஜே வாக இருக்கும் தாகினிக்குரல் வளையில் விழுந்து பின் தொடர்ந்து காதலை வெளிப்படுத்த முயற்சிப்பண்ணுவான். அப்போ, பார்வையற்ற உதையை கீழே தள்ளி விடுவாள். பின்னர் பாடலை கேட்டு விட்டு மன்னிப்புக்கேப்பாள்.
 
இரண்டுப் படத்துலையும் வீட்டில் நடக்கும்போது குச்சியை பயன்படுத்தாமல் நடப்பர். எங்கையாவது தெரியாத இடத்தில் குச்சியின் உதவியோடு நடப்பர்.
 
பார்வையில்லாதவர்களின் மனநிலையை அடிப்படையே இரண்டு படமும் பிரதிபலிக்கும். தொடுதல் உணர்வை வைத்து ஒரு கண்டுப்பிடிப்பதும் காதல் செய்வதும் செய்வர். 
 
இரண்டு படங்களிலும் கதாநாயகனுக்கு தானொரு "குருடன் என்பதும் தன்னால் என்ன முடியும்" என்ற தாழ்வு மனப்பான்மையும் இருக்கும்.
 
இரண்டுப்படத்திலும் இசையை மையப்படுத்திய படத்தின் முக்கியமான காட்சிகள் பிரதிபலிக்கும். 
 
வயலின் இசை கலைஞராக "அந்திமழை பொழிகிறது" என்பதில் காதல் உருவாகியது ராஜ பார்வையில். கிட்டார் ஆர்ட்டிஸ்டாக நடிக்க வைத்து "உன்ன நினைச்சு உருகிப்போனேன்" என்று பாடி கதாநாயகின் மனதை மாறும்.
 
சமையல் போன்ற விஷயங்களை கதாநாயகி சொல்ல சொல்ல செய்யும் முயற்சியை பார்வையற்ற கமல் செய்வார். நண்பரும் தோழியும் சொல்ல சொல்ல கார் ஓட்டும் முயற்சியை பார்வை தெரியாத உதயநிதி செய்திருப்பார். 
 
இசையோட இளையராஜாவின் பிம்பம் கலந்த படம் ராஜ பார்வை மற்றும் சைகோ.
 
ராஜ பார்வையில் படத்தின் ஒரு இடையில் கமலை கதாநாயகி ஒரு இடத்திற்கு வரச்சொல்வாள். அப்போது கதாநாயகியை பார்க்க முடியாது. கமல் நண்பனை ஹேட்டலுக்கு வரச்சொல்லிட்டு போக மறந்திடுவான்.
 
 அதே போல சைகோவில் தாகினி உதயநிதியை ஒரு இடத்தைக் கண்டுப்பிடித்து வரச்சொல்லிருப்பாள். அங்கதான் கதாநாயகி தொலைந்துப்போவாள். கதைகளம் சூடுப்பிடிக்கும். 
 
கமலை சில இடங்களில் பார்க்கும்போது பார்வையாளருக்கு பரிதாபம் வரும். உதயநிதியின் பரிதாபம் வருமாறு காட்சிகள் அமையாது. கமலின் இயல்பும் உதயநிதிக்கு கட்டுபாடும் நடிப்பில் தெரிஞ்சுயிருக்கும். 
 
இவ்வாறு இரண்டு படங்களுக்கும் இடையில் ஒற்றுமை இருக்கிறது. இதுவே  சைகோவில் ராஜபார்வை.
 
இரண்டுப்படத்தின் இறுதி கட்டம் சிறு மாறுபாடுகள் ஆனாலும் கதாநாயகனுக்குதான் கதாநாயகி என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை.
 
-கீதாபாண்டியன்
Published in Classic Movies
 
 
அந்திமழை பொழிகிறது. ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது. என் காதலிலே நான் உன்னைப் பற்றியே நினைத்துக்கொண்டிருப்பதால் பொழிகிற மழை துளியில் கூட உன் முகம் தெரிகிறது. நீ எப்பேர்ப்பட்டவள் தெரியுமா, உயிரோடு இருக்கும்போது நாம் காணாத அந்த இந்திரத்தோட்டத்தில் விளைகிற விலை உயர்ந்த முந்திரி மாதிரி உன் குணமானவள். 
மன்மத நாட்டிற்கு மந்திரியே. அந்த இறைவனுக்கு நீ நெருக்கமானவள் போல,  உன்னை மட்டும் பாத்து பாத்து செதுக்கிருக்கான். 
 
காதலி காதலனைப் பார்த்து, தேன் போன்ற நீ தனிமையென்ற வண்டுக்கடியில் சிக்கிருப்பதை பார்த்து உன்னை மீட்டுயெடுக்க வந்த பெண்தான் நான். உன் நெஞ்சுக்குள் எரிகிற தீயைப்போன்ற சோகத்தை மோகம் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறாய். தனிமை எனும் தாக்கத்தில் இருந்தாய் அதிலிருந்து உன்னை வெளியே கூட்டிக்கொண்டு வரப்
போகிறேன். 
 
காதலன் மனமோ! உன் கரம் பிடித்த நானோ,  இளமையில் எத்தனை நாள் தனிமையில் வாழ்வது. எனக்கு எதைப்பார்த்தாலும் உன் நினைவாகவே உள்ளது. உடல் முழுவதும் மோகம் எனும் தாக்கத்தில் இருக்கிறேன். அந்த தாகத்தை தீர்க்க உன்னால தான் முடியும். இப்போது எனது கண்களில் முட்களாக இருக்கிறது. தண்ணிக்குள்ள இருக்கும்போது கூட வியர்வை சொட்டுகிறது. 
 
காதலி! கொஞ்சம் பொறு அதற்கும் காலம் வரும். உன் தனிமையில் காயத்திற்கு மருந்தாகவும் உன் மோகத்திற்கு தீர்வாகவும் வருகிறேன். உன் மன்மத அம்பிற்கு சந்தனத்தை புசி ஆறுதல் அளிக்கிறேன். என்று காதலி காதலனுடைய ஆர்வ வார்த்தைக்கு பதில் அளிகிறாள். 
 
இந்த பாடலில் பார்வையற்ற காதலன், காதலி மேல் இருக்கும் காதலில் எப்படி வர்ணித்து தனது மன நெருக்கடியை வெளிப்படுத்துகிறான். அதற்கு காதலி கண் தெரியாத காதலுக்கு கண்ணுக்கு கண்ணாக வாழ ஆசைப்பட்டு எப்படி பதில் அளிக்கிறாள் எனும் உணர்வே இந்த பாடல். இதை நீங்க உணர்கிறேங்களா? 
 
-GEETHA PANDIAN
Published in Classic Movies

சில படங்களைப் பார்க்கும்போது இறுதிக் காட்சி முடிவதற்குள்ளாகவே பார்வையாளர்கள் எழுந்து கிளம்பத் தொடங்குவர். இனி அடுத்து எல்லாம் ஒன்றாகச் சேர்வார்கள், யாவும் நலமாக முடியும் என்பது அவர்களுக்குத் தெரியும். அம்முடிவும் அவ்வாறுதான் இருக்கும். இரண்டரை மணிநேரத்திற்கு அமைதியாக அமர்ந்திருந்தவர்கள் கடைசி இரண்டு மணித்துளிகளைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் எழுந்து ஓடுவார்கள். வேறு சில படங்களில் இதற்கு நேர்மாறாகவும் நடக்கும். இறுதிக் காட்சி முடிந்து, படமும் முடிந்து திரையணைந்தால்கூட எழுந்து செல்லும் ஊக்கமில்லாமல் அப்படியே அமர்ந்திருப்பார்கள். படம் அவர்களை அவ்வளவுக்குப் பாதித்திருக்கும். பெரும் சோகம் அவர்களை எழ முடியாதபடி அழுத்திப் பிடிக்கும். துக்க வீட்டிலிருந்து படக்கென்று எழுந்து போக முடியாத இறுக்கம்போன்ற ஒன்று அவர்களைச் சூழ்ந்துவிடும். நானும் அப்படிச் சில படங்களில் எழுந்து போக மனமின்றி உட்கார்ந்திருக்கிறேன். அரங்கமே வெளியேறிய பிறகு கடைசியாளாய் எழுந்து போயிருக்கிறேன். அப்படி என்னைத் துயரில் மூழ்கடித்த படங்களின் ஒன்று 'மூன்றாம் பிறை.'

மூன்றாம் பிறையில் பாலு மகேந்திரா முன்வைத்த ஆண் பெண் உறவு, காதல் என்ற வளையத்துக்குள்ளேயே வராது. அன்பின் வழியே ஓர் உறவு நிலை இயல்பாகக் கனிந்து தொடர்ந்து செல்லும். அதைக் காதல் என்ற வழக்கமான சட்டகத்துக்குள் அடக்குவது தவறுதான். விஜிக்கும் சீனுக்கும் உள்ள இயல்பை மீறிய பாசப்பிணைப்பு மேலும் என்னாகிறது என்ற புள்ளியில் பிரிவே இறுதித் தீர்ப்பாகிறது. ஏனென்றால் சீனுக்கு விஜியின்மீது இருந்தது காதலே என்றாலும் விஜிக்குச் சீனு மீது இருந்தது முதிராச் சிறுமியின் மனத்தில் பெருகும் பேரன்புதான்.

உதகையைப் பற்றி எத்தகைய திரைப்படங்கள் வந்தாலும் மூன்றாம் பிறை உருவாக்கிய துயரத்தை அவற்றால் கடக்க முடியவில்லை. பெருந்துக்கத்தைத் திரையில் தீட்டுவதற்குரிய மலைநிலமாக வெவ்வேறு இயக்குநர்கள் உதகையைப் பயன்படுத்திக்கொண்டனர். பிற்பாடு வந்த 'இதயத்தைத் திருடாதே'விலும் அதேதான் நிகழ்ந்தது. இராபர்ட்-இராஜசேகரன் எடுத்து 'மனசுக்குள் மத்தாப்பு' திரைப்படத்திலும் அவ்வாசனையை முகரலாம். தனிப்பட்ட முறையில் பாலுமகேந்திராவின் விருப்பத்திற்குரிய வெளிப்புறப் படப்பிடிப்புத் தளமும் உதகைதான். படங்களில் பார்த்த உதகையின் பசுமை நேரில் செல்கையில் இல்லாமற் போவதும் உண்டு. பல்வேறு வண்ண அழுத்தங்களைக் கொடுத்து உதகையின் இயற்கையழகை மீறிய காட்சிகளாக அவற்றைக் காட்டுகிறார்கள். பாலுமகேந்திரவின் ஒளிப்பதிவில் இயற்கையழகு மட்டுமே படம்பிடிக்கப்பட்டிருக்கும். சூரியனுக்கும் ஒளிப்பதிவாளர்க்குமான நேரடி வினை அது.

மூன்றாம் பிறையைப் போன்ற இன்னொரு படத்தையோ, அல்லது அதற்கு நிகரான மற்றொரு படத்தையோ பாலுமகேந்திராவினால்கூட பிற்காலத்தில் ஆக்க முடியவில்லை. அதுதான் மூன்றாம் பிறையின் சிறப்பு.
- இ.என்.பாபு

Published in Classic Movies

இந்தியன் படப்பிடிப்பு ஆரம்பிக்கும் முன் வயதான சேனாதிபதி வேடத்திற்கான மேக்கப் டெஸ்டிற்கு கமல் தயாராகிக்கொண்டிருந்தார் ,தயாரானபின் படக்குழு முன் வந்து நின்ற கமலை அனைவரும் வியந்து பார்த்தனர் . கதாப்பாத்திரத்தின் வடிவத்திற்கு ஏற்ப அவரது லுக் கனகச்சிதமாக இருந்தது என ஷங்கர் உட்பட அனைவரும் பாராட்டினார் ஆனால் கமல் திடீரென மீசையை மறந்துட்டேன் ஓட்டிட்டு வந்துடுறேன் எனக்கூற, இதுவே அற்புதமாக இருக்கின்றது மீசை தேவையில்லை என எல்லோரும் கூறினார் ,சங்கருக்கும் பிடித்துப்போக படப்பிடிப்பை ஆரம்பித்தனர்.

ஆனால் ஷங்கர் கதாபாத்திரத்தை வடிவமைக்கும்போது வயதான கமலுக்கு மீசை இருக்கும்படிதான் வைத்திருந்தார் ,ஆனாலும் மீசை இல்லாத ளுக்கும் அவருக்கு பிடித்துபோகவே படப்பிடிப்பை ஆரம்பித்தார் .ஷங்கருக்கோ வயதான கமலை மீசையுடன் காட்டவேண்டும் என்ற எண்ணம் இருந்துகொண்டுதான் இருந்தது .
படத்தில் நாட்டுக்காக சேனாதிபதி தனது பிள்ளையான சந்துருவை கொள்ளவேண்டிய சூழல் ஏற்படும் .அப்போது சேனாதிபதி தான் தவமிருந்து பெற்ற பிள்ளையை தன் கையாலேயே கொள்ளும்போது எவ்வளவு வலி நிறைந்திருக்கும் என்பதை உணர்த்துவதற்காக ஒரு வசனம் பேசவேண்டும் .அந்த வசனத்தை யோசித்துக்கொண்டிருக்கும்போது ஷங்கருக்கு அந்த மீசை கதை ஞாபகத்திற்கு வந்தது ,எனவேதான் " எங்களுக்கு கல்யாணம் ஆகி பத்து வருஷம் கழிச்சி பொறந்தவன் சந்துரு ,சின்னவயசுல தூக்கி கொஞ்சும்போது மீசை முடி குத்துதுன்னு அழுவான் ,அன்னிக்கு அவனுக்காக மீசையை இழந்த இந்த சேனாதிபதி இன்னிக்கு நாட்டுக்காக அவனையே இழக்க முடிவு பண்ணிட்டேன்னு” சொல்லி சந்துருவை கொன்றபின் கிளைமாக்ஸில் சேனாதிபதி கதாபாத்திரத்திற்கு மீசை இருக்கும்படி செய்து இந்த இந்தியனுக்கு சாவே கிடையாதுன்னு முடித்திருப்பார்

இவ்வாறு தான் யோசித்த ஒரு விஷயத்தை முதலில் கதையில் செலுத்தமுடியாவிட்டாலும் ,பின்பு மிகவும் நேர்த்தியாக கதையின் போக்கை மாற்றாமல் அமைப்பதில் வல்லவராய் இருப்பதால் தான் அவர் இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் இயக்குனரில் ஒருவராக திகழ்கிறார்.

 - வினோத் குமார்

Published in Classic Movies
Saturday, 15 February 2020 15:12

மகராசன் - 27

நற்பணி மன்ற தலைவன் என்ற பெயரில் அரசியல் லூட்டி அடிக்கிறார் நடிகர் கமல் 
 
மகராசன்
 
ஒரு முழு நீள காமெடி திரைப்படம். என்னதான் வருத்தம், சோகம், துக்கம், காதல், அழுகை போன்ற ஜெனர்கள் இருந்தாலும், திரைக்காட்சிகளில 
காமெடி  மட்டும்தான் எல்லாத்தையும் தூக்கிச்சாப்பிட்டுவிடும். அந்த மாதிரி வெகு சில படங்களுல, "மகராசன்" படமும் நடிகர் கமல் உடைய திரைப்பயணத்துல முக்கியமான ஒன்னுதான். 
 
ஒருத்தருக்கு கிடைக்காத விஷயத்தையோ அல்லது கிடைக்க கால தாமதமாகற விஷயத்தையோ, நமக்கே தெரியாமல் தீடிரென கடவுள் மாதிரி ஒரு மனுஷன் கொண்டுவந்து சேர்க்கற போது பயன் அடைந்தவர்கள், வாயாற "மகராசன்" மாதிரி இருக்கனும் என்று வாழ்த்துவது தான் இதன் பெயர்காரணம்.
 
1993 ம் ஆண்டு இயக்குநர் ரங்கராஜன் இயக்கிய மகராசன்,  இந்த காலத்துல மாபெரும் பிரபலமாகவும் வரும் தலைமுறையினருக்கு உதாரணமாக இருக்கக்கூடிய பலரை உள்ளடக்கிய படம். ("பாடகர்கள், எழுத்தாளர்கள், நகைச்சுவை நடிகர்கள், நடிகர்கள், இசை அமைப்பாளர்" )
 
ஜோசியம் பார்த்து மூடநம்பிக்கையில மக்கள் சிலர் செய்யற அபத்தமங்களினால் விளையுறத நகைச்சுவையா சொல்லிருக்காங்க.
 
படத்துல, கல்யாணமான இரண்டுப்பேரு, அவங்களுக்கென ஒரு குடும்பம். பொதுவாக ஒரு குடும்பத்துல குழப்பம் வந்தால், என்னன்ன பிரச்சனைகள் வரும்னு அப்படி ஒரு டிராக். சேரிக்கார மக்களா, அதுலையும் அந்த சேரிக்குள்ள ஒரு "நற்பணி மன்றம்" வைச்சு நடத்திட்டு வம்பு இழுக்கற பொறுப்புள்ள தலைவன் மற்றும் அவனுடைய சொந்த வாழ்க்கையில கொஞ்சம் அப்படி இப்படினு இருக்கறவன் ஒருத்தருடைய டிராக் ஒரு பக்கம் நகருது.
 
இந்த இரண்டு டிராக்கும், பல இடங்களுல ஒன்னா சந்திக்கும் ஆனால் ஒரே டிராகாக படத்துல தீடிரென டூஸ்ட் அடிச்சு பல கேள்விகள் எழுப்பி படத்தின் முன்கதை வைச்சு உச்சக்கட்டத்தை தொடுகிறது. 
 
கணவனுக்கு பயந்து சில உண்மையை சொல்லாமல் வாழும் மனைவி,  ஒரு கட்டத்தில் விபத்துக்கு உள்ளாகி கோமாவிற்கு செல்லுவதும்,
கணவனுடைய சந்தேக புத்தியும்,
 
 possessiveness சொல்லக்கூடியதை நகைச்சுவையாக உள் வைத்து காதல் செய்வதும், சின்ன வயசுல இருந்துப்பார்த்து வளரங்க சொல்லிக்கொள்ளாமல் மனசுல வளர காதலும்,
 
நற்பணி மன்ற தலைவன் என்ற பெயரில் நக்கலாக காட்சிகள் செல்வதும், 
ஒரே வீட்டிலோ அல்லது நிறுவனத்திலோ வேலைச்செய்பவர்கள் சண்டையும் சச்சரவுமாக இருப்பதும், 
 
குடும்பத்தில் வயசான பெருசுங்கள சொத்துக்காக "காக்கா பிடிக்கும் மகன்கள்" மேலும் பெத்த அப்பாவிற்கு தண்ணீர் கூட தராத மகன்கள்,  மாமியாரை பார்த்துக்காவே சண்டைப்போடும் மருமகள்கள், 
 
ஊர் மக்கள் பிரச்சனைகள் மற்றும் தேவைகள் மேலும் அரசியல் சாயங்கள் கலந்த காட்சிகள் வருவதும், இதுப்போன்ற பல நகைச்சுவை தருணங்கள் கதையில் இணையும். மேலும்,  உச்சக்கட்ட உண்மை தெரிய வரும்போது ஏற்படும் குழப்பத்திலிருந்து காப்பாற்றும் கதாநாயகனே "மகராசன்". 
 
வசனங்கள் அவரவர் வாழ்க்கை நடையில் அமைந்திருக்கும். தொழில்களில் வித்தியாசம் காட்டப்பட்டிருக்கும், மேலும் திரும்ப திரும்ப பயன்படுத்தும் ஸ்டைல், 
 
அதை காட்டினும் "பிற உறவுகளை விட, பெண்  குழந்தை இருந்தால்தான் வாழ்வில் பெற்றோருக்கு தண்ணி தரவாது ஆளிருக்கும்" அப்படிப்பட்ட பெண் குழந்தையை ஜோசியத்தை காரணம் காட்டியோ, இல்ல காசு பணம் இல்லையென்று காரணத்தை காட்டியோ கொல்வதும், அதாதை ஆஸ்ரமத்தில் விடுவதும், தந்துக்கொடுப்பதும் போன்ற ஏதேனும் செய்தால் அது ஒரு பாவம். மேலும்,  அந்த பாவம் உங்க மகன், மருமகள் வடிவிலேயே பிரதிபலிக்கும்" என்பதை உள் கருத்தாக கதையில் கூறியுள்ளனர்.
 
-கீதாபாண்டியன்
Published in Classic Movies

Calendar

« March 2024 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
        1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 31