Log in

Register



தேவையான கம்மசியல் எலிமெண்ட் இல்லாமல் தான், படம்  அதிகம் பேசபடலையோ...
 
நடுநிசி நாய்கள் என்ற படத்தை திரு. கௌதம் வாசுதேவன் மேனன் அவர்கள் இயக்கத்தில் 2011 ல் வீரா மற்றும் சமீரா ரெட்டி நடித்த சைகோ திர்ளர். கதை அமைப்பிலும், வீட்டு அமைப்பிலும் நுணுக்கமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. எடிட்டிங் மற்றும் கேம்ரா வேலைப்பாடுகள் மற்றும் பின்னனி இசை அனைத்தும் நல்ல கவனம் செலுத்தி எடுத்திருப்பர். கார்க்குள் எடுக்கப்படம் காட்சி தெளிவாக எடுக்கப்பட்டிருக்கும்.
 
ஒருவன் தனது சிறு வயதிலிருந்து ஒரு மாதிரியான தனிமையில் வன்கொடுமை சார்ந்த வாசனை நெருக்கடியில் வாழ்ந்து வருகிறான். அது அவனின் முதல் பாதிப்பு. மேலும் அவனை காப்பாற்றி அடைகளம் தரும் பெண், வயதில் பெரியவரானலும் அவளுடைய பாதுக்காப்பையும், வளர்ந்த பருவத்தில் அவனுக்கு அவனை வளர்க்கும் பெண்ணின் வாசனையும் அறிந்துக்கொள்கிறான். 
 
அதிலிருந்து மீள முடியாமல் நடக்கக்கூடிய எதார்த்த நிகழ்வுகளை அழிக்கறான். அந்த அடைக்களம் தந்த பெண்ணையும் கொன்று விடுகிறான்.  பெண்களை கை வசம் கொண்டு வந்து அவர்களைக் கொல்வதில் அவனுடைய சைகோ தனம் பிறிகிறது. 
 
மேலும், ஒரு நாள் இரவு வீட்டிற்கு தெரியாமல் காதலர்கள் படம் பார்க்கச்செல்கின்றனர். வீராவின் அடுத்த டார்கெட், சமீரா.  சமீராவை கொலை முயற்சிச்செய்து கடத்திக்கொண்டுப்போயி சித்திரவாதை செய்வதே படத்தின் வெகுநேர கதை. 
தன்னை கொல்ல வருபவர்களையும், தான் கொல்ல நினைப்பவர்களையும் கொல்லும் முறை என்று திரைக்கதை தெளிவாக இருந்தது. 
 
அந்த பையனின் கடந்த கால வாழ்க்கை பெரிதும் திரையில் விவரிக்க படவில்லை. ஒரு குழந்தை எப்படி எதைப்பார்த்து  வளர்கிறதோ அவ்வாறுதான் அது வளர்ந்த பின் நடந்துக்கொள்ளும் என்பதும், நம்மையும் தாண்டிச்செல்லும்  விஞ்ஞானம் இணையதளம் நல்ல வழியை விட கெட்ட வழிக்கு எளிமையில் கொண்டுச்சேர்கிறது என்பதும் படத்தின் இரு வரிகள்.
 
தேவையான கம்மசியல் எலிமெண்ட் இல்லாமல் தான், படம்  அதிகம் பேசபடலையோ...
 
-கீதாபாண்டியன்
 
 
 
Published in Classic Movies
Saturday, 25 April 2020 12:05

Aaranya Kaandam

பேராசை பெரு நஷ்டம் என்பதே மையக்கரு. -
 
தியாகராஜா குமாராஜா உடைய இரண்டு படங்களுமே நான்கு பாகங்களாக இருக்கும். அதில் ஆரண்யகாண்டம் படத்தில் பணம் மற்றும் அடியாளு செல்வாக்கு என்ற போர்வையில் இருக்கும் பெரியவர். சின்ன பையன் அவனுக்கு என்ன தெரியும் என்று ஒடுக்கப்படும் ஒருவன், அவன் செய்கிற காரியம் எப்படி இருக்கு. தன்னை ஏமாறியவர்களுக்கு நடுவில் "எதிரிக்கு எதிரி நண்பன்" என்று சொல்லிக்கொண்டு  எதிர்களுக்குள்ளே சண்டை ஏற்படுத்தி தன் மனைவியை மீட்கும் ஒருவன். ஒரு காலத்துல சொகுசா வாழ்ந்திருந்தாலும் கடன் தொல்லையால சேவல் சண்டை போட்டு வாழ்க்கையில் போராட்டும் எதார்த்தமானவர்கள் ஒரு பக்கம். இப்படி நான்கு பிரிவுகளும் பல இடங்களில் சந்திக்கும் திருப்பங்களே படம். 
ஆரண்யகாண்டம் 
 
பணம் மற்றும் அடியாள் செல்வாக்கு இருப்பவனுக்கு ஒரு பொழுதுப்போக்கு சேவல் சண்டை, 70 வயது கிழவன் 20 வயசு பொன்ன சின்ன வீட்டுமாதிரி வந்திருப்பான். அவனுடைய அடியாள்களுள் ஒருவன் தன் இடத்தையே பிடிக்க நினைக்கறான் என்று போட்டு தள்ள முயற்சிக்கறான். 
 
சப்ப ஈன்று சொல்லக்கூடியவன் பெரியவருடைய சின்ன வீட்டு தன் காதலியாகி கொண்டு பணத்தை எடுத்திட்டு பம்பாய் போக திட்டம் திட்டுக்கிறான். 
 
சேவல் சண்டைச்செய்து விட்டு தன்னுடைய தற்பெருமையால் சேவலை பறிக்கொடுத்து விட்டு கஞ்சாவை உரியவரிடம் தந்து பணம் பெற முயலும் ஏழ்மைவாதிகள். 
 
கேட்ட 50 லட்சம் கடனுக்காக கடத்திய தன் மனைவியை மீட்க ஓடுகிறவன் நடுவில் ரவுடிகளுக்கூம் எதிரிகளும் சண்டை ஏற்படுத்தி பண மற்றும் ஆள் செல்வாக்கு
பெற்று தன் மனைவியை மீட்பவன். 
 
இதன் இடையில் பலவித திருப்பங்கள். நான்கு கதைகளிலும் பணம் என்பது மிக்கிய பங்கு வகிக்குது. அளவு அதிகமாக பணம் வைத்திருந்து எப்படி வேணாலும் வாழலாம் என்று நினைக்கும் ஒருவன். பணம் இருந்திருந்தால் தலைவனாகலாம் என்ற எண்ணம் உடையவன். பணத்த அழித்திட்டு அதே பணத்துக்காக கேக்கநாதி இல்லாம தெருக்களில் சுற்றும் ஒருவன். பணம் மட்டும் இருந்தால் வாழ்க்கையில் ஜெய்க்கலாம் என்று அடுத்தவன் குறுக்கூ வழியில சம்பாதித்த பணத்த புருஷனையும் கொன்னுட்டு காதலித்தவனையும் கொன்னுட்டு பணத்த தூக்கிட்டு ஓடியவள் என்று பணத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் ஆராயகாண்டம். 
 
படம் முழுவதும் ஒரு கதாபாத்திரம் ஓடிக்கொண்டே இருக்கும். அதிகாலையில் ஆரம்பித்து இரவுக்கு முன்னாடியே முடியும் படம் ஒரு நாள் கூத்து. இப்ப யாருக்கு எது கிடைக்ககூடாதுனு ஓட விட்ட ஆளு, ஒரு கொல்லைக்கூட்டத்து தலைவர் என்று யோசித்துப்பார்த்தால் அந்த ஒரு கதாபாத்திரத்திற்குதான் இத்தனை பிரிவுகள் மாதிரி இருக்கும். படம் முழுவதும் மாநிறம் படிந்த நிலையில் காணப்படும்.
 
பேராசை பெரு நஷ்டம் என்பதே மையக்கரு. 
 
GEETHA PANDIAN
Published in Classic Movies

Calendar

« April 2024 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30