Log in

Register



Saturday, 11 July 2020 11:08

நிழல்கள்

Written by GEETHA PANDIAN
Rate this item
(1 Vote)
NATURE NATURE நிழல்கள் 1980
இயற்கையின் ஆபத்து
 
நான் செய்வதை யாரும் செய்ய முடியாது தெரியுமா?.  நமக்கு பின்னால் வந்து நம்மோடு இணைந்து நம்மையும் கடந்துச்செல்வது தான் நிழல்கள். 
 
இயற்கை, இவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கைப்பாதையை எவ்வளவு நெலிவு சுளிவுகளுடன் வடிவமைக்கிறது என்று பார்க்கையில் நமக்கு ஆச்சிரியமும் அதிசியமும் தான் மிஞ்சுக்கிறது. 
 
இயற்கையை பிரதிபலிக்கிற நிழல்களும் அப்படிப்பட்ட ஒரு வடிவமைப்பை தான் நமக்கு பரிசலிக்கிறது. அந்த வகையில் இயக்குனர்  பாரதிராஜா "நிகழ்கள்" திரைப்படமும் விதி விளக்கல்ல. 
 
மூன்று விதமான ஆண்களின் நிழல்களை சுட்டிகாட்டியுள்ள இயற்கை காவியம். கல்லூரி வயதில் பாடப்புத்தகத்தை சுமபதில் ஸ்சுவார்சியம் இல்லாமல் கனவும் கற்பனையும் சுமர்ந்துக்கொண்டு  வாழ்க்கையை ரசிக்கும் மாணவன். கலையிலும் இசையிலும் ஆழம் தோண்டினால் அது ஒரு வித பைத்தியகார தனமான வாழ்க்கையின் மூடிச்சுகளை ஏற்படுத்தும் என்று சொல்லுக்கிற அளவுக்கு ஒருகலைஞனையும், சொத்து பத்து இருந்தாலும் படித்த படிப்புக்கு வேலை தேடும்போது சமுதாயத்தில் நடக்கும் அவலங்களை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிக்கும் ஒருவன். 
 
இந்த மாதிரி ஆண்களை மூன்று விதமாக காட்டி வடிவமைத்து கேவலம் இந்த வாழ்க்கையில் நமது நிழல்கள் கூட நம்மோடு துணையாக இருக்காது என்று சொல்லிருப்பார் இயக்குனர். 
 
பெண்கள் பல விதம்தான் ஒரு ஆணிடம் நட்புக்கொள்ள நினைக்கும் பெண், ஒருவரை கெட்டவன் என்று நினைத்து சந்தேகத்து பின்னர் உண்மையின் விளிம்பில் காதல் கொள்ளும் பெண். ஒருத்தர் யாருன்னனே தெரிந்துக்கொள்ளதாத பெண். மனதில் ஒருத்தரை நினைத்து விட்டால்  நம்மை அடைய துடிப்பது நண்பனாக இருந்தாலும் கொலைச்செய்யக் கூடா தயங்காதவள் என்று பல வகை பெண்களையும் ஒரே பெண் கதாபாத்திரம் பரதிபலித்திருக்கும். 
 
எதுவுமே அழகென நினைக்கும் ஒருவன். எதையுமே வெறிதனமாக ரசித்தால் இறுதியில் இரத்த வெள்ளத்தில்தான் இருக்க நேரிடும். 
மூன்று வேலை சோற்றுக்காக கலையும் இசையும் நமக்கு உதவாது ஆசை வெறியாக மாறினால் பைத்தியம்தான் ஆகனும் என்று ஒரு கலைஞனாக ஆசைப்படுவோருக்கு செவுலையே அடித்த மாதிரி நடக்கும்.
வேலை தேடுபவரை உண்மையாக நேர்மையாக இருப்பவரை உலகம் மதிக்காது. இல்லாதவனுக்கு எதுவமே கிடைப்பதில்லை இருப்பவனுக்கு கொடுக்கவும் மனசு இல்லை. இப்படிப்பட்ட உலக மனநிலையை ஏற்றுக்கொள்ள முடியவில்லை ஒரு நல்ல படித்த பட்டதாரிக்கு. 
 
பத்து நிமிட இடைவெளியில் படத்தின் இறுதியில் மூன்று கொலைகள். நல்லதே நினைக்கும் பிஞ்சு. வட்டிகடைகாரன், பெண்மையை வெறிதனமாக அபகரிக்க வந்தவனுக்கு நேர்ந்தவை என்று இந்த மூன்று சந்தர்பர்த்தையும் வராமல் தடுத்திருக்க "நிழல்கள் ரவி" கதாபாத்திரம் செய்திருக்க முடியும்.
 
ஒரு அளவு வசதியான அவரோட அப்பா அழைப்பிற்கு இணங்கி சென்றிருந்தால், நாட்டில் அவர் பார்த்த மூடர்களை போற் இல்லாமல் நல்லவராக நல்ல வேலைச்செய்திருப்பார். இல்லாதவருக்கு கொடுத்திருப்பார். அந்த பையனும் இறந்திருக்க மாட்டான். கலை நண்பனுக்கும் உதவியிருப்பார். வேலையுள்ள நம்ப ஊரு பையனுக்கு பெண்ணும் தடை இல்லாமல் கிடைத்திருக்கும். திருமணமான பின்னர் தனது மனதை மாற்றிக்கொண்டு போயிருப்பான் கல்லூரி இளைஞன்.  வட்டிக்கொடுப்பவனும் செத்திருக்க மாட்டான். 
 
இப்படி ஒருவருடைய வாழ்க்கையில் ஒருவர் எடுக்கும் முடிவில் பலருடைய வாழ்க்கையில சில தீர்வுகள் தீர்மானிக்கப்படுவது என்பது முடிச்சுகளாக உள்ளது. நல்ல உச்சக்கட்டத்தை காட்டக்கூடாது என்றால் மோசமான உச்சக்கட்டத்தை எதிர் மறையாக தான் வடிவமைக்கனும். சிறை, மரணம், பைத்தியம் என்று இறப்பவனுக்கும்,  சிறைவாசம் செல்பவனுக்கும், பைத்தியமாக ரோடுல சுத்துப்பவனுக்கு பின்னால ஒரு கதை இருக்குனு சொல்லற விதமாக இயற்கையின் அழகியலில் ஆரம்பம் இயற்கைக்கு எதிராக படத்தை முடித்திருக்கிறார் இயக்குனர். மணிவண்ணன் மற்றும் பாரதிராஜா இருவரும் இந்த படத்திற்கு திரைக்கதையை எழுதியுள்ளனர். 
 
இயற்கை ரொம்ப ஆபத்தானது-கீதாபாண்டியன்
Read 536 times
Login to post comments

Calendar

« March 2024 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
        1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 31