Log in

Register



விஜய்! சிவப்பு காரில் கறுப்பு மாஸ்க்! என நேற்று சன் டி.வி. குதூகலித்தது. அதை ஒரு கூட்டம் கொண்டாடிக் கொண்டிருந்தது.
இது எல்லோருக்கும் தெரியும்.
 
அதே சமயத்தில் விஜய் அந்தக் காருக்கும் இன்னமும் வரி கட்டல என்று இன்னொரு கூட்டம் விஜய்யை கிண்டலடித்துக் கொண்டிருந்தது.
பதிலுக்கு அவர் வரி கட்டிவிட்டார் என்று மக்கள் தொடர்பாளர் ரியாஸ், ஒரு டாகுமெண்டை வெளியிட்டுள்ளார்.
 
ஸ்ஸ்ஸ்ஸ்... யப்பா... விஜய்யாக இருப்பதும், அரசியல் ஆசை வைத்திருப்பதும்தான் எவ்வளவு பெரிய இம்சை.
 
சென்ற தேர்தலின் சைக்கிள் கதை ஏற்கனவே முடிந்தது. இந்தத் தேர்தலின் கார் கதை இன்றுடன் முடிவடைந்துவிடும் என்றுதான் நினைக்கிறோம். நாளை இன்னொரு கதை பிறக்கும், விஜய் அரசியலில் இறங்கப்போவதில்லை என்று அறிவிக்கிற வரைக்கும்..
Published in Cine bytes
ஒரு சூட்டிங் னா சும்மா இல்ல. எவ்வளவு பேரோட உழைப்பு. எவ்வளவு பேரோட உருவாக்கம். சிவாஜி மாபெரும் நடிகர் ஆனால் கேம்ராவோட சேர்த்து மற்றவர்கள் மற்றும் பிற துறைகளைச் சார்ந்தவர்கள் இல்லையென்றால் சிவாஜி மட்டும் இல்லை எந்த நடிகராக இருந்தாலும் அவர்கள்.......? 
 
பொதுவாகவே சில நேயர்கள் எதாவது சூட்டிங்க நேரில் பார்ப்பவர்கள் சொல்வார்கள். "சூட்டிங் நேருல பாக்க நல்லாவே இருக்காது. ரொம்ப சத்தமா கையாமொய்யேனு கையாமொய்யேனு இருக்குமென்று" ஆனால் ஒரு வகுப்பில் குறைந்தது 45 பேர ஒரு லீடர் அமைதிப்படுத்துவதை காட்டினும் பெரிய வேலை இத்தனை துறைகளையும் ஒன்று திரட்டி சூட்டிங் எடுத்து அதற்கு பின்னாடி பல வேலைகள் செய்து படத்த வெளியிடறது. 
 
ஆனால் சினிமா என்னதான் இத்தனை துறைச்சார்ந்தவர்கள் இருந்தால்தான் இயங்கும் என்றாலும் இதில் பலர் சினிமாவை கனவு லட்சியமாகவும் சிலர் இதுவும் ஒரு வேலை என்று அலட்சியமாகவும் எடுத்துட்டு செயல்படுகின்றனர். அது உண்மைதானே...
 
சினிமா தோன்றிய காலத்தில் இருந்து இவ்வாறு அமர்களமாகதான் திரைப்படம் சூட்டிங் எடுத்துட்டு இருந்தனர். காலப்போக்கில் ஐந்து நடிகரும் மூன்று தொழிற்நுட்ப கலைஞரும் இருந்தால் போதும்னு குறும்படம் என்று ஒன்று வர ஆரம்பத்தது. அது இளைஞர்களின் திறமையை மற்றவர்களுக்கு புரிய வைக்கும்படி அமைந்தது. இப்போ #லாக்டவுன் நேரத்துல சினிமால சாதித்தவர்கள் அங்க அங்க அவங்க வீட்டுல இருந்தே ஒருங்கிணைத்து நடித்து குறும்படமா போடறாங்க. ஏற்கனவே எடுக்கப்பட்ட திரைப்படம் எல்லாம் OTT  வெளியாகி Middle  மற்றும் High தரப்பினருக்கும் சினிமாவை நேசிப்பவர்களுக்கும் சுவாசிப்பவர்களுக்கும் மட்டும் சென்று சேர்கிறது. மற்ற மக்களுக்கு அதை பற்றிய விழிப்புணர்வே இல்லை. என்பதும் உண்மைதானே....
 
சூட்டிங் உடைய தன்மையே மாறிக்கொண்டு வருகிறது இது சினிமாவின் புதிய அத்தியாயம்மா?  இல்ல அழிவா?
 
-கீதாபாண்டியன்
Published in Reviews
ஒற்றுமையும், வேற்றுமையும்
 
இத்தனை வருட தமிழ் சினிமாவில் கல்லூரி வாழ்க்கையை மையப்படுத்தியோ, அதனை ஒரு காரணப்படுத்தியோ எடுக்கப்பட்ட காட்சிகள் இல்லாத படமே கிடையாது. அதில் பெரும்வாரியாக மக்களை சென்று அடைந்த கல்லூரி கதைகளில் நம்மவர் என்ற கமலின் படமும், அடுத்த சாட்டை என்ற சமுத்திரகனி படமும் கண்டிப்பாக 90 ஸ் கிட்ஸ் மற்றும் 2K கிட்ஸ் மனதில் நீங்காத இடம் பிடித்தவை. 
 
ஒரே மாதிரியான எண்ணங்கள் பலருக்கு வரலாம் அதனை எவ்வாறு திரையில் பரதிபலிக்கரோம் என்பதே முக்கியமான ஒன்றாகும். அதுலையே நமது திறமை ஒழிந்துள்ளது. மேலும் அவ்வாறு தயாராகிய இரு படங்கள் தான் இவைகள்.
 
இந்த இரண்டு படத்திற்கும் ஒரு சில ஒற்றுமையும், வேற்றுமையும் உள்ளது. அவைகளைப் பார்ப்போம். ஆசிரியராக பொறுப்பேற்று வரும் கதாபாத்திரம் கமல் மற்றும் சமுத்திரகனி இருவருமே சிறு வயதில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களாக அலிச்சாட்டியம் பண்ணியவர்கள் என்று சொல்லப்படும். ஆனால் காட்சிகள் காட்டப்படாது.
 
நம்மவர் கதையிலும் அடுத்த சாட்டை கதையிலும் மாணவர்களுக்கு பிடித்த ஒரு ஆசிரியராக காலப்போக்கில் மாறியிடுவர்.  மேலும் இந்த இரண்டு கதையிலும் கல்லூரி வளாகத்தை சுத்தம் செய்யுற பணியில் ஒரு பாடல் மூலம் ஈடுபட்டுயிபர்..
 
இரண்டிலும் வில்லனாக ஒரு மாணவன் தான் இருப்பான். ஆனால் நம்மவர் வில்லன் மது, மாது, கஞ்சாவென்று பலவைகளை பயன்படுத்துபவன். ஆனால் அடுத்த சாட்டை வில்லனுக்கு நிதானம் இல்லாத காதல் மட்டுமே அவனை வில்லனாக காட்டும். 
 
அடுத்த சாட்டை கனி அவர்களுக்கு குடும்பம், கல்யாணம் போன்ற காட்சிகள் இருக்கும். நம்மவர் கமல் அவர்களுக்கு தொற்றுநோய், லிவ்விங் டூ கேதரில் இருப்பர். மேலும் மிக பெரிய ஒற்றுமையாக இரண்டு கதையிலும் கூட வேலைச்செய்யற ஆசிரியரையே காதல் திருமணம் செய்வர்.
 
மேலும் ஒரு கல்லூரி படம் என்றாலே பெரும்பாலும் இது மாதிரியான காட்சிகள் தான் அமைகிறது. இதுவே அடுத்த சாட்டையில் நம்மவர். நம்மவர் கமல் முக பாவனையில் அடுத்து மாஸ்டர் விஜய் ஸ்டெல் இருப்பதாக தெரிகிறது.  அதுவும் கல்லூரி படம் என்பது நாம் அறிந்ததே. இருப்பினும் மாஸ்டரின் புதுமையை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
-கீதாபாண்டியன்
Published in Classic Movies
பீயர் அடிச்சிட்டு செக்ஸ் பண்ணுவதன் விளைவு கேப்மாரி தனம்(18+)         
 
                                          கேப்மாரி 
 
திரு. எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்களது இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகிய படம் கேப்மாரி. படித்து ஒரு நல்ல வேலையில் இருக்கற ஒருவன் குடியின் காரணமாக எப்படி கேப்மாரி ஆகறான் என்பதே கதை. 
 
நடிகர் விஜய் உடைய சாயல் இருக்கும் பகவதி விஜயின் தம்பி "ஜெய்" நடிப்புல வெளிவந்த படம். 
 
படம் சில இடங்களில்  நடிகர் இளையதளபதி விஜயின் மேடை  வசனங்கள் மற்றும் சினிமா வசனங்களை ஒன்று திரட்டிய பாடல் அமைந்திருக்கும். 
 
எஸ்.ஏ.சந்திரசேகரின் படம் (A) certificate படமா என்று திகைக்க வைத்தது. சும்மா ஓடும் ரயிலில் ஒரே கம்பார்ட்மென்ட்டில்  சந்தித்த இருவரும் குடிக்கின்றனர். பின்னர் செக்ஸ் ஆகி விடுகிறது. இரண்டு முறை மட்டும் சந்தித்தவர்கள் கல்யாணம் செய்யலாம் என்று முடிவெடுக்கின்றனர். பாதி படம் முழுவதும் செக்ஸ் காதல் மட்டுமே காதல் வகித்திருக்கும். இருவருக்கும் இடையில் அளவுக்கு அதிகமான அன்பு நிறைந்திருக்கும். 
 
குழந்தைகள் நம்மிடையே உள்ள சந்தோஷத்தை கெடுத்து விடும் என்று எண்ணி தள்ளிப்போட்டால் நாம் நினைக்காத அளவுக்கு அதிகமான விளைவுகள் ஆகும் என்று படம் சொல்லுகிறது. கூடவே மாடன் கல்சர் மற்றும் மிடில் கல்சர் வித்தியாசமுமீ சொல்லப்படும். 
 
குடி மனுஷன எந்த அளவுக்கு Weak person யாக வைத்திருக்கு தெரியுமா? நாலு ரவுண்டு பீயர் அடித்து அதன் உச்சக்கட்டத்தில் செக்ஸ் கேக்கும் அளவுக்கு உண்டான பழக்கங்கள் மிகவும் ஆபத்து ஆனவை என்பது படத்தின் மையக்கருத்து.
 
ஒரே வீட்டில் இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆண் இருக்கும் நிலை இன்றளவும் கௌவர குறைச்சல்தான்.  மேலும்
இந்த காலகட்டத்தில் (2019) காதலுக்குள் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் கணவன் மனைவியை காட்டிட்டு உச்சக்கட்டத்தில் சின்ன வீடு பெரியவீடு என்று இரண்டு மனைவிமார்களுடனும் குழந்தை உடனும் இருப்பதுப்போல இருக்கும் காட்சி (1980) களை அதாவது அந்த வருடங்களில் வந்த சில படங்களை ஞாபகப்படுத்தும் விதமாக இருந்தது. 
 
மேலும் இந்த மாதிரி கேப்மாரி தனம் உடையவனை பற்றிய கதைதான் இது. 
 
கீதாபாண்டியன்
Published in Movies this week
 
 
#பாட்டோபாட்டு
 
20 வயது நிரம்பிய ஒரு இளைஞனுக்கு  கண்டிப்பாக ஒரு Dream Girl இருப்பாங்க. அந்த பொன்னு ஒரு சினிமா பிரபலமாக இருக்கலாம், பக்கத்து வீட்டு அக்காவாக இருக்கலாம், எதிர் வீட்டு ஆன்டியாக கூட இருக்கலாம். ஏன், யாருனே முன்ன பின்ன தெரியாத பெண்ணாக கூட இருக்கலாம். 
 
அப்படிதான் இந்த பையனுக்கு கனவுல ஒரு பொன்னு வருது. அதோட நேருல பேச முடியலனு ஏங்கறான். ஆனால் கனவுல நேருல இருப்பதுப்போல நினைச்சு அந்த பொன்னுட்ட என்னன்ன சொல்லறானு பார்ப்போம். 
 
பார்ப்பதற்கு அந்த நிலவைப்போல அழகாக இருக்கும்  பெண்ணே, என் கனவில் வருவது நீ தானா..நீ வரும்போது உன் பெண்மைக்குரிய வாசனை வருகிறது. அப்போ நிஜமாதான் வருகிறாயா...
 
உன் கண்ணை பார்க்கையில் ஒரு நூறு நிலாக்கள் ஒன்று திரண்டால் எப்படியிருக்குமோ அவ்வளவு வெளிச்சம் வருகிறது. அப்போது என் மனம் ஒரு நூறு புறாக்கள் ஒன்னு திரண்டால் எப்படியிருக்குமோ அவ்வளவு கரைபடியாத வெண்மையாக இருக்கிறது என் மனம். நான் தூங்குவதற்கு கண்ணை மூடினாலே உனது ஞாபகங்கள் தான். நீ என் வாலிபத்தை தூண்டுகிறாய்.
 
கண்களுக்கு தெரியாத காற்று மாதிரி என் கனவில் நீ வந்திட்டுப்போகிறாய். பிறகு எனது தூக்கம்
கலைந்துப்போகிறது. 
உன்னை எங்கே வந்து பார்ப்பது என்று யோசனையாக இருக்கிறது. என் கனவில் உன் முகத்தை பார்க்க வந்தால்
அந்த பௌணர்மி நிலாவைப்போல உன்னை பார்த்தும் பார்க்காமலும் ஏங்குகிறேன். உன் பெயராவது தெரிஞ்சுக்கனும்.
 
என் கனவில் நீ வந்து தரும் ஆர்வத்தை நிஜமாகவே வந்து தருவையா..என்னோடு நீ உன்னோட நான் என்று உயிர்க்கு உயிராக உறவாட வருவாயா...
 
நீ யார் என்று தெரிந்துக்கொள்ளாமல் இருப்பது பூதங்கள் நினைந்த காட்டில் இருப்பது போல இருக்கு. நீ எங்கே இருக்கிறாய் என்று தேடிட்டுயிருக்கும் என்னோட கதி என்னாகும். ஒரு வேளை நான் மழை மேகமாக இருந்திருந்தால் உன் வீட்டில் மழைப்பொழிந்து என் ஆசை தீர உன்னையும் நினைத்திருப்பேன். 
 
கனவுல வரகிற பெண்ணே நீ நேரில் வரும் நேரம் எப்போ வரும். நான் உனக்காக இருக்கும் தவம் பாத்தாது என்று நினைத்து நீ என்னை பார்க்க நேரில் வரலையோ..என்ன ஆனாலும் உன்னைதான் தேடிக்கொண்டு இருப்பேன். கண்டிப்பாக நாம் இருவரும் ஒன்றுச்சேருவோம்.
 
-GeethaPandian
Published in Classic Movies
கல்யாணம் நின்ற வேதனையை சரிசெய்ய
 
ராணி என்ற டெல்லிப்பொன்னும் விஜய் என்கிற பையனும் காதலிக்கின்றனர். படிக்கும்போது இருவரும் ஒன்னுக்குள் ஒன்னாக இருக்காங்க. இந்த இருவரையும் பார்த்திட்டு இவங்க குடும்பத்துல இருக்கறவங்க கல்யாணம் ஏற்பாடு பண்ணறாங்க. இதற்கிடையில் பிரான்ஸ் க்கு வேலைக்குப்போகிறார் விஜய். 
 
வேலைக்குப்போற இடத்துல இருக்கற கல்சருக்கு ராணி ஒத்து வரமாட்டாள் என்று நினைத்தும் அவனுடைய வாழ்க்கையில் அவன் நிறைய அனுபவங்களை பெறனும் என்றும் கல்யாணம் வேணாம் என்று முடிவு எடுக்கிறான். 
 
இது, கல்யாணத்தைப்பற்றி பல கனவுகளை மனதில் சுமந்தவளுக்கு மிகுந்த அதிர்ச்சி ஆகியது. திரும்ப திரும்ப கெஞ்சுக்கிறாள். என்னை கல்யாணம் பண்ணுக்கோ..என்று ஆனால் விஜய் அதனை காதிலே போட்டுக்கொள்ளவில்லை. கல்யாணம் நின்ற வேதனையை சரிசெய்ய பிரான்ஸ்க்கு சுற்றுலா பயணம் செல்கிறாள் ராணி.
 
அங்கு, அந்த கல்சரை பழகுவதற்கு நீண்ட காலமாயிற்று. தனிமையில் ஊரைச்சுற்றி வருகிறாள். விதிமுறை மீறல் போன்ற பல பிரச்சனைகளிலும் மாட்டிக்கொள்கிறாள். மேலும் அங்கு அவளுக்கு விஜயலட்சுமி என்ற பெண்ணுடன் நட்புக்கொள்கிறாள். ஆட்டம், பாட்டம், குடி, கூத்து கும்மாளம் என்று அவளது வாழ்க்கையே மகிழ்ச்சியாகிறது. பின்னர், அங்கிலிருந்து வேறொரு இடத்துக்கு பயணிக்கிறாள். அங்க சில ஆண் நண்பர்களுடன் நட்புக்கொண்டு சுற்றுக்கின்றனர். ஒவ்வொருத்தர்க்குள்ளையும் ஒரு பிரச்சனை கண்டிப்பா இருக்கும் என்று புரிந்துக்கொள்கிறாள். அவளுடைய கூச்சம் போன்றவைகள் அங்கே தகர்த்து விடுகிறாள். 
 
எந்த மாதிரியான கலாசாரத்துக்கு நீ ஒற்று வரமாட்டேனு தூக்கிப்போட்டு போனானோ. அந்த கலாசாரத்தில் மின்னும் பெண்ணாக பார்த்து அவளை ரொம்ப மிஸ் பண்ணறான் விஜய். திரும்ப திரும்ப ராணியிடம் பேச முயற்சிப் பண்ணறான். 
 
வெளி நாட்டில் ஒரு கட்டத்தில் ராணி, எனக்கு நீ வேணும் என்று வந்து நிற்கும்போது எனக்கு என் நண்பர்கள் முக்கியம் என்று விஜயை விட்டுட்டு போகிறாள். பிறகு டெல்லி திரும்பியவள், விஜய் வீட்டிற்கு வருகிறாள். "ராணி நீ வந்திட்டையா, என்னால நீ இல்லாம இருக்க முடியாது. ஐ லவ் யூ ராணி" ஆனால் ராணி, அவன் அவளுக்குப்போட்ட மோதரத்தை திருப்பிக்கொடுத்திட்டு விஜயை தூக்கிப்போட்டு போயிட்டாள். இதுவே Queen படத்தின் கதை.
 
கீதா பாண்டியன்
Published in Classic Movies
Friday, 28 February 2020 04:45

மாஸ்டர்

மாஸ்டரால் களைகட்டும் தியேட்டர்கள் :
 
தளபதி விஜய் நடிப்பில், மாஸ்டர் படம் தயாராகி வருகிறது. இப்படமானது, வரும் ஏப்ரல் 9 அன்று ரிலீஸ் ஆக உள்ளது. படம் ரிலீஸ் ஆக இன்னம் அதிக நாட்கள் இருக்கும் பட்சத்தில், இப்போதே, சில தியேட்டர்களில் மாஸ்டர் பட போஸ்டர்கள் களைகட்ட ஆரம்பித்து விட்டது.
Published in Cine bytes

முப்பதைத் தொடும்போதும், நாற்பதுகளைத் தாண்டும்போதும் ஆண்கள் அழகாக இருப்பார்கள்.

அனுபவம் அவர்களுக்கு அந்த அழகைக் கொடுக்கும்.

Here is #Master #Vijay for you. He looks great in these photos. His fans are celebrating!

Published in Actors

அன்புச் செழியன்!
திரையுலகின் ஒரு பாதி அவரை ஆதரிக்கிறது. இன்னொரு பாதி அவரை கொடுரனாக சித்தரிக்கிறது.
அவர் கந்துவட்டிக்கு விடுபவர் என்பதை இருதரப்பும் மறுக்கவில்லை.
தமிழ் சினிமாவில் அவருடைய பணம் விளையாடுகிறது என்பதை எல்லோரும் ஒப்புக்கொள்கிறார்கள்.
ஜெயலலிதா முதல் எடப்பாடி வரை அவருக்கு ஆளும்கட்சி செல்வாக்கு இருக்கிறது.
ஆனாலும் திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் அன்புச்செழியன் பற்றி பேசுவதில்லை.

   
   
   
   
   

 

Published in Cine bytes

அதிரடியாக வந்தாச்சு மாஸ்டர் 3வது போஸ்டர்!

விஜய் - விஜய் சேதுபதி இருவரும் சேர்ந்து கர்ஜிக்கும் போஸ்டரை, விஜய் டிவிட்டரில் வெளியிட்ட அடுத்த வினாடியே வைரலாகிவிட்டது. 

Published in Cine bytes
Page 1 of 2

Calendar

« March 2024 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
        1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 31