Log in

Register



Monday, 17 February 2020 17:25

அடுத்த சூப்பர் ஸ்டார் போட்டியில் இவர்?

Written by Geetha Pandian
Rate this item
(1 Vote)
Eight years Eight years sivakarthikayan
"வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு சகஜம்" என்று சொல்லற மாதிரி, எட்டு வருடம் எட்டிய உயரம். ஆறு முதல் அறுபது வரை உள்ள அனைத்து தரப்பினர்களின் மனத்தில் பதிந்த "நம்ப வீட்டுப்பிள்ளை".
 
"மெரினா"வில் சுற்றி திரிந்த நம் "மனம் கொத்தி பறவை" சிவகார்த்திகேயன்.   "கேடி பில்லா கில்லாடி ரங்கா"வாக விஜய் டிவியில் களம் கண்டவர். எத்தனை கிண்டல் கேலிகள் வந்தாலும் வாழ்வில்  "எதிர்நீச்சல்" போட்டுக்கொண்டு,  "வருத்தப்படாத வாலிபர் சங்க"த்தில் சினிமாவில் வாய்ப்பு தேடுபவர்களுக்கு  முன் உதாரண தலைவராக திகழ்ந்தவர். 
 
ஊரில் உள்ள மக்கள்கள் இவர் மீது வைத்த அன்பை "காக்கி சட்டை"யாகப் போட்டுக் கொண்டு, கண்ணுக்கு தெரியாத பல எதிரிகளிடமிருந்து "மான் கராத்தே" அடித்து, உணர்வுப்பூர்வமா ரஜினி ரசிகனாக இருந்து "ரஜினி முருகன்" நடித்து "ரெமோ" என்ற ரெஜினா மோத்வாணி பெண் போல வாழ்ந்து 90கிட்ஸ் 2கே கிட்ஸ் கனவு கன்னியாக வலம் வந்து, நல்லா "வேலைக்காரன்" என்ற பெயரைப்பெற்றார். தமிழ்நாட்டின் "மிஸ்டர் லோக்கல"ஆக இருந்து குறைந்த காலத்தில் சினிமாவின் "சீமராஜா" வாக மாற  பல  "கனா"க்கள் கண்டு இன்று மக்களின் "ஹீரோ"வாக மாறியிருக்கிறார். 
 
மேலும் அவர் அவருக்கே "நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா" என்று பல வெற்றி தோல்விகளை கண்டும் ஒரு வீரனாக களத்தில் நிற்கிறார். இந்த முன்னேற்றமும் மக்களின் அன்பும், பல நடிகர்களுக்கு கிடைக்காத ஒன்று. 25 வருடமாவது போராடினால் தான் அந்த இடம் (மக்களின் மனம், மார்கெட் பீஸ், உயர்ந்த சம்பளம், விருதுகள் ) கிடைக்கும். 
 
ஆனால் 12 வருடத்தில் இவருக்கு கிடைத்த அன்பு(அண்ணன் தம்பி தங்கை, பக்கத்து வீட்டு பையன்), விருதுகள், பல திறமைசாலிகளின் முன் உதாரணம், அனுபவ மோட்டிவேஷன் போன்ற  அனைத்திற்கும் சேர்த்து அவருக்கு "டாக்டர்" பட்டத்தையே கொடுக்கலாம்.
 
மேலும் பல படங்களை திரையுலகிற்கு தர உள்ளார் சிவகார்த்திகேயன்.  இந்த 2020 க்கு பிறகு "இவர் அடுத்த சூப்பர் ஸ்டார்" தான். எத்தனை வெற்றி தோல்விகள் வந்தாலும் "3" ஜென்மங்கள் ஆனாலும் "நான் வீழ்வேன்று நினைத்தாயோ" என்று கண்டிப்பாக எழுந்து வருவார் நம்ப வீட்டுப்பிள்ளை.
 
இவரைப்பொறுத்தவரை
உள்ளத்து தூய்மையே முதல் முதலீடு, இல்லத்து அமைதியே இரண்டாவது முதலீடு, மக்களை பொழுதுப்போக்கு செய்யும் தருணங்கள் மூன்றாவது முதலீடு, நல்ல விஷயத்தை விதைக்கனும் என்னும் எண்ணமும், திட்டமுடுதலும் நான்காவது முதலீடு, திறமைசாலிகளை வளர்ப்பது ஐந்தாவது முதலீடு, Negativity இல்லாமல் இருப்பது ஆறாவது முதலீடு, கைதட்டலை கர்வமாக எடுக்காமை ஏழாவது முதலீடு, தன்னுடைய திறமையை நம்பி பல விஷயங்கள கற்றுக்கொண்டு செயல்படுவது எட்டாவது முதலீடு, பழைய விஷயத்தை மறகாமல் இருப்பதும், பெரியோரையும் மக்களையும் நட்பையும் மதிப்பதும் ஒன்பதாவது முதலீடு. 
இத்தனை முதலீடுகள் போட்டுதான் இன்று சிவகார்த்திகேயன்.
 
இவர் நல்ல தயாரிப்பாளர், சிறந்த நடிகர், தேர்ந்த பாடகர், துள்ளிய பாடலாசிரியர், வெண்ணிற மனம் கொண்ட நகைச்சுவை நடிகர், இதை எல்லாத்தையும் விட
 "நல்ல மனிதன்" 
 
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சிவகார்த்திகேயன்.
 
-கீதாபாண்டியன்.
Read 684 times Last modified on Tuesday, 18 February 2020 03:07
Login to post comments

Calendar

« March 2024 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
        1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 31