Log in

Register



Friday, 07 August 2020 12:54

Kappela 2020 மலையாளம்

காதல் என்பது கண்ணுக்கு தெரியாத ஒன்று என்பதால் அதனை சிலர், அவர்கள் செய்ய நினைக்கும் கலவிக்கு போர்வையாக பயன்படுத்திக் கொள்கின்றனர். 
 
படம் முழுவதும் மலையாள வாசம் விசுகிறது. எளிமையான கதை களம். எதார்த்தமான குடும்பம், துறுதுறுவென்று சுற்றி திரியும் கதாநாயகி, கேரளத்து மலை அழகு, கொட்டற மழை, வீசும் காற்று, அடிக்கும் பனியென்று எழில் கொஞ்சம் அழகியலை பார்க்கும்போது மனதிற்கு இதமாக இருக்கிறது. 
 
Kappela  2020 வெளியாகிய இந்தப்படத்தைப்பற்றிய சின்ன அலசல் ...
 
எந்த நேரத்திலும் பலர் Online ல கெடையாக கிடக்கிறோம். நம்மில் பலருக்கும் நம் வீட்டு பக்கத்தில் குடியிருப்போரைப்பற்றி தெரியாது. நாம் செல்லும் பொது வாகனத்தில் நம் பக்கத்தில் அமைதியா அமர்ந்து வருவோர்கள் நல்லவர்களா கெட்டவர்களானே தெரியாது. ஆனால் 10 நிமிடத்துல இருந்து பல மணி நேரம் பஸ் பயணம், இரயில் பயணம் போன்று மேற்கொள்ளகிறோம். ஆனால் நம்மோட  Facebook and whatsapp நண்பர்களை பத்தி நமக்கு எதுவுமே தெரியவில்லையென்றாலும் தினமும் காலையில வர GOOD MORNING மெசேஜ் போதும் உலகத்துலையே அவங்கதான் நல்லவங்க. 
 
அத விடுங்கப் படத்த பத்தி வருவோம். அட..படத்துலையும் அதே கூத்துதான். 
 
நாம் போடற போஸ்ட்க்கு எல்லாரும் என்ன கமெண்ட் பண்ணுவாங்கனு பார்க்க ஐஞ்சு நிமிடத்துக்கு ஒரு முறை Online வரோம்.  நம்மில் பலருக்கு நம்மைப்பற்றி நலம் விசாரிக்க, ஆறுதல் கூற, நல்லதா நாலு வார்த்தை சொல்ல ஒருவர் தேவைப்படுகிறார்கள். அந்த ஒருவர் 100 ல் 80 சதவீதம் போன்ல தான் கிடைக்கறாங்க. அப்படி கிடைச்சா கண்மூடிதனமா நம்ப ஆரம்பிச்சறோம். சரி, எவ்வளவு நாள் தான் மெசேஜ் மட்டுமே பண்ணறது, ஒரு முறை போன்ல பேசலாம்னு நினைக்க தோன்னுது. 
 
சினிமா வரலாற்றுல வறுத்தெடுத்த ஒரு விஷயம் படத்துல,  "ஒரு நம்பர் மாத்திப்போட்டு வேற யாருட்டையோ பேசிட்டு, திரும்ப திரும்ப நமக்கு போன் பண்ணது யாரு? நம்ப போன் எடுத்தது யாரு?" என்று யோசித்து அவர்களிடம் பேசி ஒரு நட்பு உறவை வளர்கிறது, தான்.
 
சரி, எத்தனை நாளுக்கு தான் வேறவங்க போட்டோவ பாத்துட்டு பேசறது. ஒரு நாள் நேருல பாக்க தோன்னுது. ஒரு வேளை போட்டோ ஏற்கனவே பார்த்திருந்தால் பரவால.  பார்க்கலைனா என்ன நிலைமையாகறது. 
 
போன்ல பேசி, நேருல பாக்கப்போனால் நாபோ எதிர்பார்க்காத சூழ்நிலையெல்லாம் தான் நடக்கும். அப்பறம் நம்ப கிட்ட பேசுனது யாரு என்னனு தெரிஞ்சுட்டு நம்பி போவோம். அட, இது வரைக்கும் எல்லாருக்கும் தெரியும் அப்பறம் என்ன ஆச்சு, ....
அத எப்படி என் வாயால் சொல்லுவேன். 
 
இந்த இடத்துல, தமிழ படத்துல வெளியான "ஈட்டி" எடுத்துப்போம். ஹீரோ ஓரியட்டு படம்,  Wrong Number Connect ஆகி அப்பறம் நண்பர்களாக பேசி, Miss பண்ணி அப்பறம் நேருல பாக்கும்போது தப்பான ஒரு ஆளாக அறிமுகம் நடத்து அப்பறம் ஒருவரை ஒருவர் புரிஞ்சுப்பாங்க. திவ்யா வழியில் வரும் பிரச்சனையில் அகர்வா தலையிட்டு பிரச்சனை முடித்து வைப்பார். 
 
காதல் கோட்டை, எடுத்துக்கலாம். முன்னபின்ன பார்த்து பழக்கம் இல்லாத அஜித் மற்றும் தேவயாணி PCO பேசி  கடிதத்துல காதல் பண்ணறாங்க. ஆனால் நேருல இரண்டுப்பேரும் பாக்கற தருணம், ஆட்டோ ஓட்டும் அஜிதை ஒரு அதிகபிரசங்கிதனமான ஒருவராகதான்  தேவயாணி நினைக்கறாங்க. ஆனால் முடிவுல அவர்தான் தன்னோட காதல் கோட்டையின் அரசன் என்று தெரிந்து, இணைங்கின்றனர். ஒரு வேளை அதற்குப்பின் அஜித்  கெட்டவரா மாறி தேவயாணி வாழ்க்கையை கெடுத்திருக்கலாம். இல்லை, இருவரும் கல்யாணம் செஞ்சுட்டு நல்லாவும் இருந்திருக்கலாம். எதுவேணாலும் நடந்திருக்கும். 
 
அதே போல இந்த Kappela 2020 மலையாளம் படம் ஹீரோயின் ஓரியட்டு படம். இதுலையும் கிட்டதட்ட அதே போல தான் இருக்கும். Wrong number connect யாகி ஒரு ஆட்டோ ஓட்டும் ஒருவரை காதலிப்பாள்.  இவளோட அதிகப்படியான ஆசையே "கடலை பார்ப்பது" மட்டும்தான். போன்ல பேசியதை நம்பி, முகம் தெரியாதவரை பார்க்க வந்து, வில்லன் மாதிரி காட்சியளிக்கும் ஒருத்தனிட்ட இருந்து தப்பிச்சு, ஹீரோட்ட போயி மாடிக்கொள்கிறாள். காதல் எனும் போர்வையை கலவிக்காக பயன்படுத்தி கொள்கிறான் அந்த ஆட்டோக்காரன் . அவனிடமிருந்து எப்படி தப்பிச்சு வீட்டுக்கு வருகிறாள் என்பதே அடுத்த கட்டக்கதை அத படத்துல தான் பார்க்கனும். 
 
இப்படி, நமது பல அன்றாட வாழ்வியலை படமாக வெளி வருவதை தாண்டி, அதுல trendsetter இப்போ இருக்கறது  Social media and mobile phone மூலமாக நடக்கக்கூடிய பல்வேறு நிகழ்வுகள்தான். 
எந்த கதையும் புதுசு இல்ல. நமக்கு எதுவும் தெரியவில்லையென்றாலும் தெரிந்துக்கொண்டு கெட்டத நோக்கிப்போற மாதிரி ஏற்கனவே எடுத்த மற்றும் நடந்த விஷயம்தான் திரும்பவும் வேற பாணியில் Trend ஆகுது.
 
-கீதாபாண்டியன் #geethapandian
 
 
Published in Movies this week
Wednesday, 25 March 2020 07:14

Teacher's Love

ஆசிரியர்களை காதலிக்கும் மாணவர்களின் அனுபவமே அழியாத கோலங்கள். 
 
குழந்தையின் மழலை தன்மை முதல் இருந்தே நம்மை கவர்க்கும் ஒருவர் ஆசிரியர்கள். அந்த கவர்ச்சி என்பது அந்த ஆசிரியரின் பேச்சிலோ செயலிலோ அல்லது பாடம் நடத்தும் விதத்திலோ நட்பு பாராட்டும் வகையிலோ இப்படி எதுலையாவது இருக்கலாம். (அசிரியர்களை காதலிக்கும் மாணவர்கள்) உதாரணத்திற்கு  நிறைய திரைப்படங்களிலும் மற்றும் உண்மையான அனுபவமே அனைவருக்கும் இருக்ககூடும். அசிரியர்கள் என்று நம்மை கவர்ந்தவரை நாம் பார்ப்பது ஒரே பக்கம் மட்டும்தான். அந்த பக்கத்தில் அவர்கள் ஹீரோவாக இருப்பர். யாருக்கு அந்த ஆசிரியரை பிடிக்குதோ அவங்களுக்கு மட்டும். மற்றவர்களுக்கு வில்லன் தான். 
 
அந்த ஆசிரியரை முழுவதும் கவனித்து அவங்க அப்படி பண்ணாங்க. இப்படிச்சொன்னாங்க என்று நண்பர்களிடம் பேசி மகிழும் பலர் நம்மை சுற்றி இருக்கின்றனர். ஒரு பெண் ஆசிரியரைப் பார்த்து ஒரு பையன் காதலிப்பான் அவங்க சொல்லற வார்த்தையை வேத வாக்காகயெடுத்து செய்வான். அவங்க முன்னாடி நம்ப கௌரவம் போக கூடாதென்று நினைப்பான். ஒரு பொனோ அவங்க நமக்கிட்ட பேச மாட்டாங்களானு ஏங்குவாள்.
 
ஒரு ஆண் ஆசிரியரைப் பார்த்து ஒரு பையன் அவர மாதிரியே நாபோலும் இருக்கனும் என்றும், ஒரு பொன் ஓர கண்ணால ஆசிரியரைப் பார்ப்பதும் அவரு ஒரு வார்த்தை பேசிட்டால் போதும் எதோ வரமே கிடைச்சமாதிரி நினைக்கும்.  நாம் படிக்கும் காலத்தில் நமக்கு பிடித்த ஆசிரியரிடம் அவமானம் பட்டு நிற்பது ரொம்ப கொடுமை. இந்த மாதிரி பள்ளி பருவம் முதல் பல்கலைகழக பருவம் வரை பல காதல் கதைகள் இருக்கு. நான் நிறையவே  என் கண்ணால பார்த்திருக்கேன். 
 
திரைப்படங்களிலும் ஆசிரியர்கள் மீது மரியாதையும் அன்பும் இருக்கற பல காட்சிகளைப் பார்த்திருப்போம். மேலும் சினிமா ஆரம்பித்த காலத்துல இருந்தே பல படங்களின் ஆசிரியர்கள் மீது மாணவர்கள் காதல் வளர்ப்பதும். உதாரணமாக எடுத்துக்கொள்வதும், ஆதித அன்பு வைப்பதும் போன்ற பல காட்சிகள் அமைந்திருக்கு. நிஜத்திலும் படிக்கும்போது அந்த அனுபவம் கண்டிப்பாக எல்லாருக்கும் இருக்கும். அந்த நினைவுகளை ஞாபகப்படுத்தி திருப்பி பார்ப்பதே நம் அழியாத நினைவுகள்.
 
இப்படி உங்களுக்கும் நிறைய அழியாத நினைவுகள் கண்டிப்பாக இருக்கும். யோசித்துப்பாருங்க.
 
-கீதாபாண்டியன்
 
 

 
 
 
 
 
Published in Classic Movies
 
 
#பாட்டோபாட்டு
 
20 வயது நிரம்பிய ஒரு இளைஞனுக்கு  கண்டிப்பாக ஒரு Dream Girl இருப்பாங்க. அந்த பொன்னு ஒரு சினிமா பிரபலமாக இருக்கலாம், பக்கத்து வீட்டு அக்காவாக இருக்கலாம், எதிர் வீட்டு ஆன்டியாக கூட இருக்கலாம். ஏன், யாருனே முன்ன பின்ன தெரியாத பெண்ணாக கூட இருக்கலாம். 
 
அப்படிதான் இந்த பையனுக்கு கனவுல ஒரு பொன்னு வருது. அதோட நேருல பேச முடியலனு ஏங்கறான். ஆனால் கனவுல நேருல இருப்பதுப்போல நினைச்சு அந்த பொன்னுட்ட என்னன்ன சொல்லறானு பார்ப்போம். 
 
பார்ப்பதற்கு அந்த நிலவைப்போல அழகாக இருக்கும்  பெண்ணே, என் கனவில் வருவது நீ தானா..நீ வரும்போது உன் பெண்மைக்குரிய வாசனை வருகிறது. அப்போ நிஜமாதான் வருகிறாயா...
 
உன் கண்ணை பார்க்கையில் ஒரு நூறு நிலாக்கள் ஒன்று திரண்டால் எப்படியிருக்குமோ அவ்வளவு வெளிச்சம் வருகிறது. அப்போது என் மனம் ஒரு நூறு புறாக்கள் ஒன்னு திரண்டால் எப்படியிருக்குமோ அவ்வளவு கரைபடியாத வெண்மையாக இருக்கிறது என் மனம். நான் தூங்குவதற்கு கண்ணை மூடினாலே உனது ஞாபகங்கள் தான். நீ என் வாலிபத்தை தூண்டுகிறாய்.
 
கண்களுக்கு தெரியாத காற்று மாதிரி என் கனவில் நீ வந்திட்டுப்போகிறாய். பிறகு எனது தூக்கம்
கலைந்துப்போகிறது. 
உன்னை எங்கே வந்து பார்ப்பது என்று யோசனையாக இருக்கிறது. என் கனவில் உன் முகத்தை பார்க்க வந்தால்
அந்த பௌணர்மி நிலாவைப்போல உன்னை பார்த்தும் பார்க்காமலும் ஏங்குகிறேன். உன் பெயராவது தெரிஞ்சுக்கனும்.
 
என் கனவில் நீ வந்து தரும் ஆர்வத்தை நிஜமாகவே வந்து தருவையா..என்னோடு நீ உன்னோட நான் என்று உயிர்க்கு உயிராக உறவாட வருவாயா...
 
நீ யார் என்று தெரிந்துக்கொள்ளாமல் இருப்பது பூதங்கள் நினைந்த காட்டில் இருப்பது போல இருக்கு. நீ எங்கே இருக்கிறாய் என்று தேடிட்டுயிருக்கும் என்னோட கதி என்னாகும். ஒரு வேளை நான் மழை மேகமாக இருந்திருந்தால் உன் வீட்டில் மழைப்பொழிந்து என் ஆசை தீர உன்னையும் நினைத்திருப்பேன். 
 
கனவுல வரகிற பெண்ணே நீ நேரில் வரும் நேரம் எப்போ வரும். நான் உனக்காக இருக்கும் தவம் பாத்தாது என்று நினைத்து நீ என்னை பார்க்க நேரில் வரலையோ..என்ன ஆனாலும் உன்னைதான் தேடிக்கொண்டு இருப்பேன். கண்டிப்பாக நாம் இருவரும் ஒன்றுச்சேருவோம்.
 
-GeethaPandian
Published in Classic Movies
கல்யாணம் நின்ற வேதனையை சரிசெய்ய
 
ராணி என்ற டெல்லிப்பொன்னும் விஜய் என்கிற பையனும் காதலிக்கின்றனர். படிக்கும்போது இருவரும் ஒன்னுக்குள் ஒன்னாக இருக்காங்க. இந்த இருவரையும் பார்த்திட்டு இவங்க குடும்பத்துல இருக்கறவங்க கல்யாணம் ஏற்பாடு பண்ணறாங்க. இதற்கிடையில் பிரான்ஸ் க்கு வேலைக்குப்போகிறார் விஜய். 
 
வேலைக்குப்போற இடத்துல இருக்கற கல்சருக்கு ராணி ஒத்து வரமாட்டாள் என்று நினைத்தும் அவனுடைய வாழ்க்கையில் அவன் நிறைய அனுபவங்களை பெறனும் என்றும் கல்யாணம் வேணாம் என்று முடிவு எடுக்கிறான். 
 
இது, கல்யாணத்தைப்பற்றி பல கனவுகளை மனதில் சுமந்தவளுக்கு மிகுந்த அதிர்ச்சி ஆகியது. திரும்ப திரும்ப கெஞ்சுக்கிறாள். என்னை கல்யாணம் பண்ணுக்கோ..என்று ஆனால் விஜய் அதனை காதிலே போட்டுக்கொள்ளவில்லை. கல்யாணம் நின்ற வேதனையை சரிசெய்ய பிரான்ஸ்க்கு சுற்றுலா பயணம் செல்கிறாள் ராணி.
 
அங்கு, அந்த கல்சரை பழகுவதற்கு நீண்ட காலமாயிற்று. தனிமையில் ஊரைச்சுற்றி வருகிறாள். விதிமுறை மீறல் போன்ற பல பிரச்சனைகளிலும் மாட்டிக்கொள்கிறாள். மேலும் அங்கு அவளுக்கு விஜயலட்சுமி என்ற பெண்ணுடன் நட்புக்கொள்கிறாள். ஆட்டம், பாட்டம், குடி, கூத்து கும்மாளம் என்று அவளது வாழ்க்கையே மகிழ்ச்சியாகிறது. பின்னர், அங்கிலிருந்து வேறொரு இடத்துக்கு பயணிக்கிறாள். அங்க சில ஆண் நண்பர்களுடன் நட்புக்கொண்டு சுற்றுக்கின்றனர். ஒவ்வொருத்தர்க்குள்ளையும் ஒரு பிரச்சனை கண்டிப்பா இருக்கும் என்று புரிந்துக்கொள்கிறாள். அவளுடைய கூச்சம் போன்றவைகள் அங்கே தகர்த்து விடுகிறாள். 
 
எந்த மாதிரியான கலாசாரத்துக்கு நீ ஒற்று வரமாட்டேனு தூக்கிப்போட்டு போனானோ. அந்த கலாசாரத்தில் மின்னும் பெண்ணாக பார்த்து அவளை ரொம்ப மிஸ் பண்ணறான் விஜய். திரும்ப திரும்ப ராணியிடம் பேச முயற்சிப் பண்ணறான். 
 
வெளி நாட்டில் ஒரு கட்டத்தில் ராணி, எனக்கு நீ வேணும் என்று வந்து நிற்கும்போது எனக்கு என் நண்பர்கள் முக்கியம் என்று விஜயை விட்டுட்டு போகிறாள். பிறகு டெல்லி திரும்பியவள், விஜய் வீட்டிற்கு வருகிறாள். "ராணி நீ வந்திட்டையா, என்னால நீ இல்லாம இருக்க முடியாது. ஐ லவ் யூ ராணி" ஆனால் ராணி, அவன் அவளுக்குப்போட்ட மோதரத்தை திருப்பிக்கொடுத்திட்டு விஜயை தூக்கிப்போட்டு போயிட்டாள். இதுவே Queen படத்தின் கதை.
 
கீதா பாண்டியன்
Published in Classic Movies
கொளஞ்சி 
 
மகனை பெற்ற அப்பாவும், அப்பாவை நேசிக்காத மகனும் பார்க்க வேண்டிய படம்.....
 
ஒரு நல்ல கிராமத்து வாசம் படம் முழுவதும் வீசும். ஒரு அப்பா, அம்மா, அண்ணன் தம்பி நாலு பேர் கொண்ட வீடு. அப்பாக்கு அண்ணன் குடும்பம், அம்மாக்கு ஒரு அண்ணன் குடும்பம் என்றும் இருக்கின்றனர். 
 
அது போக, இன்றளவும் சிலர் ஊரில் சாதி பிரிவினைகள் பார்க்கின்றனர். அதனை மகன்களுக்கும் சொல்லி தருக்கின்றனர்.
 
நம் கதாநாயகனுக்கு பிடித்த ஒரு முறைப் பொன்னும், கதாநாயகனுக்கு உயிர் நண்பனும் படத்துல ஒரு முக்கிய பங்கு வகிக்கறாங்க. 
 
கொளஞ்சி உடைய அப்பா, எப்போ பார்த்தாலும் கொளஞ்சிய திட்டிட்டே இருக்காங்க. அவன் பண்ணற சேட்டைகள் எல்லாம் ஒன்னுக்கு இரண்டாக அப்பா(அப்பாசாமிக்கு) விவரம் தெரிய வருகிறது. எப்போ பார்த்தாலும் அப்பா அடிப்பாரு. 
 
இவன் என்னதான் அப்பாக்கு பயப்படற மாதிரி இருந்தாலும், எப்போடா இந்த ஆள விட்டுப்போவோம்னே பாக்கறான். 
 
கொளஞ்சி உடைய அம்மா ரொம்ப நல்லவங்க. மகன் மேல அதிகப்படியான பாசம் வைக்கறவங்க. கொளஞ்சிக்கும் அவனுடைய தம்பிக்கும் ஆகவே ஆகாது. 
 
அப்பா, தம்பி மேலதான் பாசமா இருப்பாரு. என்னை பார்த்தாவே அடிக்கறாரு. அதனால கடவுளே இல்லனு கூட நினைக்கறான். 
 
இவங்க மாமாக்கும் கொளஞ்சிக்கும் அப்படியொரு நட்பு. கொளஞ்சி உடைய பெரியப்பா மகள தான், இவங்க மாமா காதலிக்கறாரு. இவங்க இரண்டுப்பேரும் சேர்ந்ததுக்கு கதாநாயகன் தான் காரணம் பிரிஞ்சுப்போனதுக்கும் அவன்தான் காரணம். 
 
அப்பா, தன்னை கண்டிப்பாரு, பயந்தான். பரீச்சையில  fail ஆன நேரத்துல வீட்டுல ஒரு பெரிய சண்டையாகுது. அப்போ அவங்க அம்மா வீட்ட விட்டு அண்ணா வீட்டுக்கு போயிடுறாங்க. அதுதான் சாக்குனு அப்பாட அடி வாங்காம தப்பிக்கறான் மகன். 
 
அப்பாவையும் அம்மாவையும் சேர விடக்கூடாது. சேர விட்டால் எனக்கு அடிதான் விழும் என்று நினைக்கறான். கணவன பிரிஞ்சு இருக்க முடியல மனைவிக்கு, ஒரு வீட்டு அம்மா இல்லாம இளைய குழந்தையும் கணவனும் படற கஷ்டம் பயங்கரம். 
 
ஒரு கட்டத்துல அப்பாகற உறவு எவ்வளவு முக்கியம் அத கொளஞ்சி புரிஞ்சுக்கறான். தான் எவ்வளவு தன் மகன அடிச்சாலும் புடிச்சாலும் ஊருல ஒருத்தன், (இவங்க பிரிஞ்சு இருக்காங்க இதான் சாக்குனு கொளஞ்சி)அடிக்க வரான். அப்போ அப்பா, "ஆயிரம் இருந்தாலும் இவ என் மகன்" மகனுக்காக அடி வாங்கறாரு ஊர்காரன அடிக்கறாரு. அதுல அடி பட்டு மயங்கறாரு. இதல்லாம்  அம்மா புரிஞ்சுப்பாங்கனு நினைச்சு, ஓடி வந்து சொல்லும்போது, அம்மா "நீ எனக்கு புள்ளே இல்ல" இவர இப்படி பண்ணிட்டையேனு தள்ளி விடறாங்க. அப்போ தான் புரியுது சூழ்நிலை சந்தர்ப்பம் தான் ஒருத்தர வேற வேற மாதிரி நிலையில காட்டுதுனு. 
 
அப்பா குணமாகி வரும்போது, குற்ற உணர்ச்சியில துடிச்சுப்போறான். ஆனால், அப்பா பக்கத்துல வந்து நீ இன்னொருத்தன்ட அடி வாங்க கூடாதுதான் அப்பா உன்ன அடிக்கறேன் என்று சொல்லி மகன் கொளஞ்சி யை கட்டி அணைக்கறாரு. 
 
13 வயதை தொட ஒவ்வொரு  குழந்தைக்கும் அப்பா ஒரு எமன் மாதிரி தான் தெரிவாரு. ஆனால், அவருதான் பிரம்மன் அப்படினு புரியும்போது சிலநேரத்துல தான் அந்த உறவு இருக்கும். சில நேரத்துல இல்லாத போதுதான் அப்பாவுடைய அருமையே புரியும் என்று படம் முடியுது. 
 
இதுல சமுத்திரக்கனி அவர்கள் அப்பாசாமி என்கிற பெயரில் கொளஞ்சிக்கு அப்பாவாக இருக்கறாரு. அவருக்கு உள்ள குணநலன்கள் மற்றும் கோபதாபங்கள் எல்லாம் அவருக்கென்றே எழுதப்பட்டுதாக இருக்கு. 
 
அப்பாவ பிடிக்குதோ இல்லையோ, அப்பாவுடைய சாயல் மற்றும் எண்ணம் அனைத்தும் மகன் மனதில் கண்டிப்பாக பதியும் அதுதான் அவன வளர்க்கும்.
 
 எங்க அப்பா சொல்லிருக்காருனு வாழ்க்கையில ஒரு முறையாவது மகன் சொல்லுவான். கூடவே இந்த ஆளு உயிர எடுக்கறாருனும் ஒரு முறையாவது சொல்லுவான் மகன். அதுபோல அந்த ஆளு இருந்திருந்தால் எனக்கு இப்படியொரு பிரச்சனையே வந்திருக்காது அப்படினும் ஒரு முறையாவது மகன் சொல்லுவான். அது தான் ஒரு நல்ல அப்பாவின் வெற்றி. 
 
மகனை பெற்ற அப்பாவும், அப்பாவை நேசிக்காத மகனும் பார்க்க வேண்டிய படம். 
 
Geetha Pandian.
Published in Reviews

வாட்ஸ்அப் லவ் ஸ்டேட்டஸ்

உன் மடி சாய்ந்திருக்கும்போது ததும்பும் ப்ரியம்!

Calendar

« March 2024 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
        1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 31