Log in

Register



Items filtered by date: Tuesday, 11 January 2022
வாருங்கள் படிப்போம் என்கிற வாட்சப் (இன்னான்ற) குழுவில் என்னை கொஞ்சம் கொஞ்சமாக இலக்கிய ஆர்வலனாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
மானே, தேனே என கோடிட்ட இடங்களை நிரப்புவது எனக்கு எளிது. ஆனால் திடீரென்று மீண்டும் கவிதை, கிவிதை எழுதிவிடுவேனோ என பயமாக இருக்கிறது.
எதற்கும் ரிவர்ஸ் மெட்டஃபர் அது இது என்று ஆங்கில பிரயோகங்களை தயாராக வைத்துக்கொள்கிறேன். என்னய்யா எழுதியிருக்க என்று கேட்டால் தப்பிக்க உதவும்.
குழுவில் வளர்ந்து வரும் எழுத்தாளர்கள் பலர் உற்சாகமாக பங்கேற்கிறார்கள். சீனியர்களும், விருந்தினர்களும் அவர்களை கூர்மையாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் இரு வருடங்களுக்குள் இந்தக் குழு தனித்துவம் பெற்றதாக மாறிவிடும். நம்பிக்கை தரும் புதிய எழுத்தாளர்கள் வெளிப்படுவார்கள்.
 
ISR செல்வகுமார்
Published in ISR Selva speaking

பாமா விஜயம் படத்தில் எங்கள் அப்பாவுக்கு ஐ.எஸ்.ஆருக்கு நல்ல பெயர் கிடைக்க காரணம் திரு.எஸ்.எஸ்.வாசன் அவர்கள்தான். படம் வெளியானபோது திருடனாக நடித்த காட்சிக்கு எக்கச்சக்க வரவேற்பு. கிட்டத்தட்ட அனைத்து பத்திரிகைகளும் என் அப்பா ஐ.எஸ்.ஆரை பாராட்டி விமர்சனம் எழுதின. இத்தனைக்கும் அவர் நடித்தது ஒரே ஒரு காட்சிதான். இன்று கூட என் அப்பா நடிப்பில் சிலருக்கு உடனே ஞாபகம் வரும் காட்சி, பாமா விஜயம் காட்சிதான்.

பாமா விஜயம் படத்தின் இயக்குநர் கே.பாலச்சந்தர். அப்போதெல்லாம் எங்கள் அப்பா பாலச்சந்தரின் எல்லா படங்களிலும் இருப்பார். சௌகார், ஸ்ரீகாந்த், ஜெயந்தி, நாகேஷ் வரிசையில் என் அப்பாவும் பாலச்சந்தர் ரெகுலர்களில் ஒருவர். ராகினி கிரியேஷன்ஸ் என்ற பெயரில் மேடை நாடகம் போட்டதிலிருந்தே கே.பி க்கு என் அப்பா பழக்கம். அவருடைய அனைத்து நாடகங்களிலும் என் அப்பா நடித்திருக்கிறார். அதனால் பாமா விஜயம் படத்திலும் இருந்தார். ஆனால் ஒரே ஒரு காட்சிதான்.

பாமா விஜயம் படத்தின் விநியோக உரிமை ஜெமினி ஸ்டுடியோ திரு. எஸ்.எஸ்.வாசன். அதனால் படம் சிறப்பாக வந்திருப்பதாகக் கூறிய அவர் ஐ.எஸ்.ஆருக்கு கூடுதலாக குளோசப் காட்சிகள் வையுங்கள் என்று கூறியிருக்கிறார். அதனால் ஏற்கனவே தொகுக்கப்பட்ட காட்சியில் பல இடங்களில் என் அப்பாவுக்கு மட்டும் குளோசப் இணைக்கப்பட்டது. படம் வெளியானபின் வாசனின் கணிப்பு வென்றது. என் அப்பாவிற்கு நிறைய நல்ல பேரும், புது இரசிகர்களும் கிடைத்தார்கள். அதற்கு அந்த குளோசப் காட்சிகள் உதவியதாக என் அப்பா அடிக்கடி எஸ்.எஸ்.வாசன் பற்றி நன்றியுடன் குறிப்பிட்டிருக்கிறார். அதே படம் ஹிந்தியில் தயாரானபோது எஸ்.எஸ்.வாசனும், எஸ்.எஸ். பாலனும் இணைந்து இயக்கினார்கள். படத்தின் பெயர் ”தீன் பஹுரானியன்”.

ISR செல்வகுமார்

#ActorISR #HBDisr #BamaVijayam #ThiefScene #KBalachandar #SSVasan #Closeup #GeminiStudios

Published in ISR Selva speaking

Calendar

« January 2022 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
          1 2
3 4 5 6 7 8 9
10 11 12 13 14 15 16
17 18 19 20 21 22 23
24 25 26 27 28 29 30
31