Log in

Register



மீண்டும் சிவாஜி!
கொரோனா யுகத்தில்... நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பட்டியல்களுக்கு நடுவில் சிவாஜி படங்கள் ஹிட் அடித்திருக்கின்றன.

ஃபேஸ்புக்கில் நான் உட்பட என்னைச்சுற்றி உள்ள பலரும் 35க் கடந்தவர்களே. இவர்களில் பலர் இளையராஜா இரசிகர்கள், அப்புறம் ரஜினி, கமல் இரசிகர்கள். வெகு அபூர்வமாகத்தான் மற்றவர்கள் அவர்களின் அரட்டைகளில் இடம்பெறுவார்கள். இன்றைய தலைமுறையின் இரசனைகள் பற்றி தெரிந்தாலும் அதனை பொருட்படுத்தாதவர்கள். இப்போது நான் சொல்ல வருவது என்னவென்றால், கடந்த ஒரு வாரமாக இவர்களுக்கு அல்லது நமக்கு மத்தியில் பழைய சிவாஜி படங்களும், அவரது நடிப்பை பற்றிய சிலாகிப்புகளும் அதிகமாகியிருக்கின்றன.

இதற்கு காரணம் என்னவாக இருக்கும் என்று யோசித்துப் பார்க்கிறேன். இதனை ரசனை மாற்றம் என்று சொல்லிவிட முடியாது. ஆனால் வேகமான லைஃப் ஸ்டைலில் இருந்து முடங்கி, வீட்டுக்குள் அமர்ந்திருக்கும்போது நாம் விலகி வந்த எத்தனையோ உணர்வுகளையும், உறவுகளையும், வாழ்வியல் முறைகளையும் நாம் மீட்டெடுத்துக் கொண்டிருக்கிறோம், அதில் ஒன்றுதான் நாம் அசால்டாக மறந்து போன சிவாஜி என்கிற மாபெரும் கலைஞனின் அர்ப்பணிப்பும், அவருடைய படங்களில் காண்பிக்கப்பட்ட குடும்பங்களும், உறவுகளும், பிணக்குகளும், தியாகங்களும், புன்னகைகளும்.

இப்போதும் கூட அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என்று நம்மில் சிலர் கடந்து போகலாம். ஆனால் அப்படியெல்லாம் கடந்துவிட முடியாமல், சிவாஜி நம்மில் சிலருக்குள் மீண்டும் உணர்வுப்பூர்வமாக அமர்ந்துவிட்டார் என்பதையும் மறுப்பதற்கில்லை.

Published in ISR Selva speaking

Calendar

« March 2024 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
        1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 31