Log in

Register



MovieWud OTTயில் வித்தையடி நானுக்கு ரிலீஸ்!
 
தமிழ் திரையுலகம் மிகத்துரிதமாக மாற்றங்களுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. MovieWud என்பது ஒரு மாற்றத்தின் அடையாளம். நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் போன்ற ஓடிடி. செயலிகள் தமிழ் சினிமாவிற்கான கதவைத் திறந்துவிட்டிருக்கின்றன. ஆனால் அவற்றில் பெரும்பாலும் மற்ற மொழிப்படங்கள், பெரிய நட்சத்திங்கள் இல்லாத தமிழ் படங்களுக்கு குறைவான வாய்ப்பு என்கிற குறைகள் உள்ளன.
 
இதுபோன்ற சூழல்கள்தான் மூவிவுட் போன்ற புதிய ஓடிடி செயலிகளுக்கு தூண்டுதல். தூர்தர்ஷன் கதவை இறுக்கமாக மூடியிருந்தபோது, சாமானியனும் தன் முகத்தை டிவியில் பார்க்க முடியும் என்கிற சூழலை சன்டிவி உண்டாக்கியது. அதன் மூலம் வேகமாக மக்களைச் சென்றடைந்தது. பின்னாளில் ஸ்டார் டிவி வந்தாலும் அதில் தமிழ் நிகழ்ச்சிகள் இல்லாத காரணத்தால் சன் டிவியின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியவில்லை.
 
கிட்டத்தட்ட இதே போன்ற ஒரு சூழல் ஓடிடி உலகில் உண்டாக்கியிருக்கிறது. நெட்ஃபிளிக்ஸ், அமேசான் போன்ற தளங்கள் இன்னும் எல்லோருக்குமானதாக மாறவில்லை. அவை மாறுவதற்குள் அந்த மாற்றத்தை மனதில் வைத்து எல்லோருக்குமான ஓடிடியாக MovieWud வந்துள்ளது. இதற்கும் போட்டியாக இன்னும் பல ஓடிடிகள் வரும்.
மாறிவரும் இந்தச் சூழலில் எங்கள் ஐ.எஸ்.ஆர் வென்சர்ஸ் நிறுவனமும் புதிதாக ஓடிடியை உருவாக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறது. ஆனால் அதன் வடிவமும், உத்திகளும் முடிவாக இன்னும் சில காலம் பிடிக்கலாம். ஆனால் எந்த வடிவத்தில் வந்தாலும் அதற்கு படத் தயாரிப்பு நிறுவனங்களும், ஓடிடி நிறுவனங்களும் கைகோர்த்தால் மட்டுமே வெற்றி பெற முடியும்.
எனவே புதிய ஓடிடி தளங்களுடன் கை கோர்க்க முடிவெடுத்திருக்கிறோம். அடுத்த படம் ”யாதெனக் கேட்டேன்” நிறைவடையும் நிலையில் உள்ளது. இந்தச் சூழலில் அதுவும் ஓடிடியில் வௌியாகத்தான் அதிக வாய்ப்புகள் உள்ளது. எனவே அதற்கு முன் முதல் முயற்சியாக எங்களின் முதல் திரைப்படம் ”வித்தையடி நானுனக்கு” MovieWud OTTயில் வெளியாகியிருக்கிறது.
இரண்டே இரண்டு பேர் நடித்துள்ள அந்தப் படத்தை ராமநாதன் கே.பகவதி இயக்கியுள்ளார். வெளியானபோது நல்ல தியேட்டர்கள் கிடைப்பதில் சிரமமிருந்தது. அதனால் அதிக இரசிகர்களை சென்றடையவில்லை. இப்போது மூவிவுட் ஓடிடியில் மிக எளிதாக வெளியாகியுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
படத்தை பார்த்துவிட்டு படத்தைப் பற்றியும் MovieWud OTTயும் எப்படி இருக்கின்றன என்பதை பதிவு செய்யுங்கள்.
 
This is the download link for MovieWud App.
 
நன்றி!
ஐ.எஸ்.ஆர் செல்வகுமார்
ஐ.எஸ்.ஆர் வென்சர்ஸ்
Published in ISR Selva speaking

Calendar

« March 2024 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
        1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 31