Log in

Register



மறைந்த திரைப்பட நடிகர் ISR பற்றி ஒரு இ-புத்தகம் வெளியாகவுள்ளது. ”ஐ.எஸ்.ஆர் ஒரு திரை மின்னல்” என்று பெயரிடப்பட்டுள்ள இப்புத்தகத்தில் ஐ.எஸ்.ஆர் பற்றி திரைப்பிரபலங்கள் கூறியுள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளன. பிரபலங்களின் கருத்துக்களுடன், ஐ.எஸ்.ஆரின் நண்பர்களும், அவர் வசித்த பகுதிகளில் அவருடன் பழகியவர்களும் கூறிய மிகச் சுவையான சம்பவங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ஐ.எஸ்.ஆர் காலத்தில் (1936-1991) வரை கிராமங்கள் எப்படி இருந்தன, மக்கள் நகரங்களுக்கு ஏன் வந்தார்கள், அப்போதைய திரையுலகம், அப்போதைய பழக்க வழக்கங்கள் உட்பட பல சமூக நிகழ்வுகளின் கண்ணாடியாக இப்புத்தகம் தயாராகி வருகிறது.

இது பற்றி அவருடைய மகன் ஐ.எஸ்.ஆர் செல்வகுமார் கூறும்போது ”எங்கள் தந்தை ராஜபாளையத்தை அடுத்துள்ள சொக்கநாதன் புத்தூர் என்கிற குக்கிராமத்தில் பிறந்து, சென்னை வந்து படித்து, நாடகம், சினிமாக்களில் நடிக்கும்போது, வண்ணாரப்பேட்டை, தேனாம்பேட்டை, வளசரவாக்கம் உட்பட பல்வேறு பகுதிகளில் வசித்திருக்கிறார். அப்போது அவர் சந்தித்த சாதாரண மனிதர்களும், பிரபலங்களும் ஏராளம். தெருக்கூத்து காலத்திலிருந்து, மேடை நாடகம், சினிமா உட்பட டெலிவிஷன் சீரியல் வரை அவர் வாழ்ந்திருக்கிறார். எனவே அவரைப் பற்றிய பதிவு என்பது இந்த மாற்றங்களையும் குறிப்பதாக இருக்கும்.

அதனால் இப்புத்தகம் எங்கள் தந்தை ஐ.எஸ்.ஆர் பற்றி மட்டுமல்லாமல், சமகாலத்தில் அவருடன் பணியாற்றியவர்கள், அக்கால வாழ்க்கை முறைகள் மற்றும் அதன் பின் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றியும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். எனவே எங்கள் தந்தை ஐ.எஸ்.ஆர் பற்றி அறிந்தவர்கள் யாரேனும் இருந்தால், எங்களை தொடர்பு கொள்ளும்படி அன்புடன் வேண்டிக் கொள்கிறோம். அவர்கள் கூறும் தகவல்களையும் சேர்த்து, இரு பாகங்களாக புத்தகம் விரைபில் வெளிவரும்.”, என்றார்.

ஐ.எஸ்.ஆர் ஒரு திரை மின்னல் என்று தலைப்பிடப்பட்டுள்ள இப்புத்தகத்தின் வெளியீடு திரைப்பிரபலங்கள் முன்னிலையில் நடக்கும். அது பற்றிய அறிவிப்பு மார்ச் முதல்வாரத்தில் வெளியாகும் என்று ஐ.எஸ்.ஆர் வென்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் கூறியுள்ளார்கள்.

எனவே இம்மாத இறுதி வரை ஐ.எஸ்.ஆர் பற்றிய எந்த தகவல் இருந்தாலும் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. என்ற மின்னஞ்சலில் அதை நீங்கள் பகிர்ந்து கொள்ளலாம். அல்லது 9962295636 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்வில் உங்கள் விருப்பத்தை தெரிவிக்கலாம். ஐ.எஸ்.ஆர் வென்சர்ஸ் நிறுவனம் உங்களை தொடர்பு கொண்டு தகவல்களை பெற்றுக் கொள்வார்கள்.

Published in ISR Press Release

அமீரகத்தில் வசிக்கும் தமிழர்களுக்காகவே ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கிறது "The Tamil Radio"

இந்த இணைய வானொலியில் காதலர் தினத்தை முன்னிட்டு ஒரு சிறப்பு நிகழ்ச்சி ஒலிபரப்பாகிறது. தொகுப்பாளர் நாகா வழங்கும் இந்நிகழ்ச்சியில் அவருடன் இயக்குநர் ஐ.எஸ்.ஆர் செல்வகுமார் உரையாடுகிறார் இந்நிகழ்ச்சி இன்று (16.02.2022) இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

இந்நிகழ்ச்சியில் ஒரு பெண்ணிடம் ஒரு ஆண் எதையெல்லாம் இரசிக்கிறான், Crush, Pubbly Love என்றால் என்ன? யாதெனக்கேட்டேன் படத்தில் உள்ள காதல் - போன்ற பல சுவாரசியமான தகவல்களை இயக்குநர் ஐ.எஸ்.ஆர் செல்வகுமார் பகிர்ந்து கொள்கிறார்.

நிகழ்ச்சியை பின்வரும் இழையில் கேட்கலாம்.

https://thetamilradio.com/#/

வாய்ப்பும் நேரமும் உள்ளோர் உரையாடலை கேட்டுவிட்டு உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்.

 

 

 

Published in ISR Press Release


என் அப்பா ஐ.எஸ்.ஆருக்கு டைரி எழுதுகிற பழக்கம் இருந்தது. அதில் அவர் நடிக்கும் நாடகம், சினிமா, சூட்டிங் மற்றும் அன்றன்று நடந்த சம்பவங்களை சுருக்கமாக எழுதியிருப்பார். ஏதோ ஒரு பக்கத்தில் இயக்குநர் ஸ்ரீதர் பற்றி எழுதியிருந்தார். ஓ மஞ்சு படப்பிடிப்பாக இருக்கலாம். செட்டில் கவனிக்க முடியாத தூரத்தில் இருக்கும் துணை நடிகர்களைக் கூட ஸ்ரீதர் கவனித்தார். அவர்களின் ஆக்ஷன், ரியாக்ஷன்களை சரி செய்தார் என்று வியப்பாக எழுதியிருந்தார்.

ஓ மஞ்சு படத்தில் கேட்கும் திறன் குறைபாடு உள்ள போஸ்ட் மாஸ்டராக நடித்திருந்தார். தந்தி கொடுக்க வரும் தேங்காய் ஸ்ரீனிவாசனின் டைமிங், பாடி லாங்குவேஜ் மற்றும் ஏறி இறங்கும் உச்சரிப்பு அட்டகாசம். அவருடைய அத்தனை சேட்டைகளுக்கும் சிரிக்காமல் ரியாக்ஷன் கொடுத்திருப்பார். பிறகு தன் முறை வரும்போது அப்பாவியாக முகத்துடன் அவர் பேசுகிற வசனங்களும் அதற்கு தேங்காயின் ரியாக்ஷன்களும் அமர்க்களம். குறிப்பாக தேங்காய் தந்தியை தமிழில் சொல்லச் சொல்ல, அதற்கு என் அப்பா ஐ.ஸ்.ஆரின் இங்கிலீஷ் டிரான்ஸ்லேஷன்... சூப்பர்!

இன்று இயக்குநர் ஸ்ரீதர் அவர்களின் நினைவு தினம். பல புதுமைகளை தமிழ்சினிமாவிற்கு அளித்த ஸ்ரீதரின் இயக்கத்தில் எங்கள் அப்பா ஐ.எஸ்.ஆரும் நடித்தார் என்பதில் எங்களுக்குகெல்லாம் பெருமையே.

Published in ISR Selva speaking
காணாமல் போன லாட்டரி டிக்கெட் கிடைக்குமா? 
 
லாடட்ரி டிக்கெட் மோகன் மற்றும் சுஹாசினி நடிப்பில் வெளியான நகைச்சுவை திரைப்படம். வாழ்க்கையில பொன்னுங்க சமாசாரமே தெரியாம ஒரு பொன்னுட்ட அடிய வாங்கிட்டு, யாரு என்னச்சொன்னாலும் கண் மூடி தனமா நம்பிட்டு ஒருத்தன் இருக்கானா அது இந்த படத்தோட ஹீரோதான். அப்படிப்பட்ட ஒருத்தன் வேலைச்செய்யற கம்பெனிய பத்தி சொல்லிய ஆகனும். 
 
மேனேஜ் இல்லாத நேரத்துல ஒரே கூத்தும்  கும்மாளமும் காமெடியும் தான். வேலை எதுவும் செய்யறதுல்ல. அடிக்கடி மேனேஜ் ட்ட திட்டு வேற வாங்குனாதான் அங்க இருக்கறவங்களுக்கு தூக்கமே வரும். அதுல நம்ப ஜீரோ இல்ல ஹீரோ வாங்காத திட்டே இல்ல. 
 
இவன மாதிரி ஒரு கேரக்டருக்கு கல்யாணம் நடக்கறதே ஒரு லாட்டரி டிக்கெட்தான். இவன் ஒரு ராசியே இல்லாதவன். ஏன் சொல்லறேனு தெரியுமா? ஒருத்தருக்கு கல்யாணம் ஆனா மட்டும் போதுமா ....?
 
முதல் முறை நடக்கற முதல் இரவில், முதல் இரவை பத்தி ஒரு புத்தகம் படிச்சு அதன் படி நடந்துக்கிறான். பாதி புக் படிச்சிட்டு இருக்கும்போதே "ஹீரோவோட அப்பா சரக்கு நினைச்சு பினாயில் குடிச்சு அட்மிட் ஆகிட்டாரு". சோல மக்கா போச்சா..
 
அப்பறம் ஆடி மாசம் காத்துயடிக்க, பொண்டாட்டி அவங்க அம்மா வீட்டுக்குப் போயிட்டாள். மனசு அளவுல மட்டும் இல்ல. எல்லா வகையிலும் ரொம்ப வருத்தம் ஆகிட்டான்.  
 
ஒரு முறை சில்லரை முறிப்பதற்காக லாட்டரி டிக்கெட் வாங்கறாங்க. அது தொலைஞ்சுப்போயி விடுகிறது. அந்த டிக்கெட் சில்க் ஸ்மிதா கையில கிடைக்கவே...அந்த நேரம் பார்த்து லாட்டரில அதிஸ்டம் இல்லாத புது மாப்பிள்ளைக்கு 10 லட்சம் பரிசு விழுது. 
 
இரண்டாவது முறை முதல் இரவில், அந்த லாட்டரி டிக்கெட் காணாம போனாதால், நின்னுப்போச்சு. இதுக்கு நடுவுல சில்க் ஸ்மிதா தன்னோட வேலையை காட்ட,  இரண்டு பேருக்கும் இடையில் சண்டையாகுது. என்னை ரொம்ப நல்லவனு நிர்பிக்க பொண்டாட்டிக்காக 10 லட்சம் எல்.எஸ்.சி போட்டு தன்னை கொலைச்செய்வதாக ஒரு ரவுடியிடம் போன் பேசுகிறான். 
 
10 லட்சம் வருவதை விடக்கூடாதுனு  நினைச்சு என் கணவனோட அன்பை புரிஞ்சுட்டு மனைவி அவனை ஏத்துக்கிறாள். பின்னர் மூன்றாவது முறையாக முதல் இரவுக்கு ஏற்பாடு நடக்குது. எல்லா பிரச்சனையும் சரியாகியிருச்சுனு நினைக்கும்போது அந்த ரவுடியை நேரடியாக பார்த்து தன்னை கொல்ல வேண்டாம் என்று கெஞ்சுக்கிறான். ஆனால் அவனை ரவுடி நம்பவில்லை. இந்த முறையும் முதல் இரவு போச்சா...
 
எப்படி ரவுடியிடமிருந்து ஹீரோ தப்பிப்பார்? பணத்துக்காக பேராசைப்பட்டு வெகுளியான மோகன் and சுஹாசினியை கொல்லத்துடிக்கும் சில்க்யிடமிருந்து ரவுடி பிரபு காப்பாற்றுவாரா? இவர்கள் முதல் இரவு நான்காவது முறையாவது நடக்குமா? லாட்டரி டிக்கெட் கிடைக்குமா? என்பதே இப்படத்தின் உச்சக்கட்டம். 
 
-கீதாபாண்டியன்
 
 
Published in Actor ISR

நாகேஷ் கிருஷ்ணமூர்த்தி!
நாகேசுக்கு டப்பிங் கொடுத்தவர்.

எத்தனையோ படங்களில் இவரை பார்த்திருப்பீர்கள். மீண்டும் கோகிலா படத்தில் ஸ்ரீதேவியுடன் நடித்திருப்பாரே என்றால்... ஓ அவரா என்பீர்கள்.

எங்கள் தந்தை ஐ.எஸ்.ஆரின் நெருங்கிய நண்பர். அவருடன் கனிமுத்துப்பா, காசியாத்திரை போன்ற படங்களில் நடித்துள்ளார். கஸ்டம்சில் பணிபுரிந்தபடியே திரைப்படங்களில் நடித்தார். மிகக் கெடுபிடியான ஆபிசர் என்பார்கள்.

நாகேஷ் பிஸியாக இருந்தபோது, பல படங்களில் நாகேஷிக்காக டப்பிங் குரல் கொடுத்தார். அதனால்தான் அவருக்கு அந்தப் பெயர் வந்தது.

தகவல் : https://antrukandamugam.wordpress.com/2016/05/05/krishnamoorthy-nagesh-krishnamoorthy/

Published in Actors
Monday, 30 December 2019 03:40

Thank you Kathadi Ramamurthy sir

Thank you so much Kathadi Ramamurthy Sir!

A true legendary actor, even after 5 decades, his love and passion towards acting is amazing. He continuously performs stage plays even at this age.

He gracefully accepted to talk about his experiences with our father actor ISR.

So we are happy to announce that along with Mr. Delhi Ganesh, Mr. Kathadi Ramamurthy will also feature in our documentary about our father ISR.

A big thanks from ISR Family and ISR Ventures sir!

In the photo (L-R): Mr. Solai (ISR's brother), Mr. Kathadi Ramamurthy and Mr. Ravikumar (ISR's son)

Published in ISR Press Release

பொல்லாதவன், நாயகன் போன்ற படங்களைத் தயாரித்த முக்தா ஃபிலிம்ஸ் 60ஆம் ஆண்டை எட்டியிருக்கிறது. அந்த கொண்டாட்டத்தின் துவக்கமாக முக்தா நிறுவனத்தின் தயாரிப்புகளில் பங்கு பெற்ற நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், டெக்னிஷியன்கள் உள்ளிட்ட பலரும் விழா மேடையில் கௌரவிக்கப்பட்டார்கள். எங்கள் தந்தை நடிகர் ஐ.எஸ்.ஆர் முக்தா தயாரிப்பில் 4 படங்களில் நடித்திருக்கிறார். அதனால் எங்கள் தந்தை ஐ.எஸ்.ஆர் பற்றியும் மேடையில் நினைவு கூறப்பட்டு கௌரவிக்கப்பட்டார். நடிகர் சிவகுமார் நினைவுப் பரிசை வழங்கினார். ஐ.எஸ்.ஆரின் இளைய சகோதரர் சோலையும், இளைய மகன் ரவிகுமாரும் நினைவுப் பரிசை பெற்றுக் கொண்டார்கள்.

 

நினைவில் வைத்திருந்து கௌரவம் செய்த முக்தா நிறுவனத்திற்கு ஐ.எஸ்.ஆர் வென்சர்ஸ் நிறுவனம் மற்றும் ஐ.எஸ்.ஆர் குடும்பம் சார்பாக மனமார்ந்த நன்றியையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

Published in ISR Press Release

Calendar

« November 2024 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
        1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30