Log in

Register



ஆண்களே உங்க அம்மா, மனைவி, அக்கா, தங்கைப்படும் கஷ்டத்தில் நீங்கள் பங்கெடுத்திருக்கீர்களா?
 
வீட்டில் இல்லத்தரசியாக இருக்கும் பெண்கள் தினந்தோறும் பலவித சவால்களை மேற்கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள் படும் கஷ்டத்தை பல  ஆண்கள் புரிந்துக்கொள்வதில்லை மேலும் தனக்கெனவொரு அடையாளம் வேண்டும் என்று நினைக்கும் பெண்களுக்கு இங்க எத்தனை ஆண்கள் வழி விடுகின்றனர். 
 
பாலிவுட் குறும்படம் ஒன்றில், திருமணமாகி 4 வருடம் ஆன மனைவி தினந்தோறும் செய்யும் வேலையில் பங்கெடுக்காத  கணவன் இருக்கிறார். மனைவியுடன் கூட உக்கார்ந்து சாப்பிடுவதில்லை. அந்த பெண், தினமும் வீட்டு வேலைகளையும் செய்து விட்டு MNC கம்பெனியிலும் எட்டு மணி நேரம் வேலைச் செய்கிறாள். அவளுடைய சிறு வயது கனவு பாரதநாட்டியம். ஆனால் அதனை செய்யக்கூடாது என்று தடைப்போட்டுள்ளார் கணவன். 
 
அவளுக்கு அவள் செய்யும் வேலையே பிடிக்கல. கணவனோட பேசவும் முடியல. இவ பேச வந்தாலே "எனக்கு வேலையிருக்கு உன்ன மாதிரி நான் சும்மாவா இருக்கேன்" என்று வீட்டு வேலையோட சேர்த்து ஆபிஸ் வேலைக்கும் செய்கிற தன் மனைவியைப் பார்த்து சொல்லறான். 
 
இவளுடைய சிறு வயது கனவு "நடனம்". அதுதான் இவளுடைய அடையாளம் என்று நினைக்கறாள். அவளுக்கு நடனத்தில் விருப்பம் இருப்பதால் விரும்பமில்லாத MNC  கம்பெனியில் வேலையை விட்டு நின்று ஒரு யூடூப் சேனல் ஆரம்பித்து விடியோ போடறேன். ஒரு ஐஞ்சு ஆறுப்பேருக்கு கிளாஸ் எடுக்கறேன் என்று சொல்லுகிறாள். மேலும் இத்தனை வருடம் ஆச்சு கல்யாணமாகி ஆனால் நீங்க என்னை புரிஞ்சுக்க மாட்டேங்க.
 
ஆனால் கணவனோ, அதுல்லாம் வேணாம். உனக்கு வேலைக்குப்போக விருப்பம் இல்லைனா வீட்டுல சும்மா இரு. நடனமெல்லாம் நம்ம குடும்பத்துக்கு செட் ஆகாது. போயிம் போயிம் இந்த பாட்டு, நடனத்துல உனக்கு என்ன வரப்போகுது என்று கூறி விட்டு தூங்கப்போகிறான்.
 
இல்ல, நான் இப்ப விட்டால் எப்பவும் எனக்கென ஒரு சுயம் இல்லாம போயிடும். என்று முடிவெடுத்து மறுநாள் வீட்டே அதிரும் அளவிற்கு நடனமாடி வீடியோ எடுக்கிறாள். 
 
பெண்கள் எல்லா வயதிலும் ஆண்களாக இருக்கும் எல்லா உறவுகள் சொல்லதை கேட்க கூடியவர்களாகதான் இருக்காங்க. அப்பா சொல்லறத  செய்வதிலிருந்து கணவன் வரைக்கும். ஆனால் அவள் மனசு எப்படிப்பட்டது. அவ யாரோட பேச நினைக்கிறாள். என்ன பேச நினைக்கறாள். அவளுடைய ஆசை என்ன?  அவளுடைய விருப்பம் என்ன தெரிக்கொள்வதே இல்லை. அவள் செய்யும் வேலையில் உதவியாக இருக்க கூட நினைப்பதே இல்லை என்பதே இந்த குறும்படத்தின் கதை.
 
என்னிக்கு இந்த நிலைமை முழுசா மாறுதோ, எல்லா பெண்கள் நினைப்பதும் நடக்குதோ அப்போதான் உண்மையாக பெண்கள் தினம் சந்தோஷத்திற்குரியதாக  இருக்கும். 
ஆண்களே, முதலில் வாட்சப்பில் யாரோரு பெண்ணுக்கு பெண்கள் தின வாழ்த்துச்சொல்வதை விட வீட்டிலுள்ள பெண்கள வாழ்த்துங்கள்.
 
Bollywood women's special Award winning shortfilm for "Stay Housewife" 
 
Geetha pandian
 
Published in Reviews
 
 
நாபோ பிறரைப்பார்த்து ரோல் மாடல் எடுத்துக்கலாம் ஆனால் அவருடைய ரோலாகவே இருக்க நினைக்கக் கூடாது. 
 
ரசிகர்கள் பட்டாளம் மற்ற நாட்டை விட தென்னிந்தியாவில் அதிகமாகவே இருக்கிறது. காலத்திற்கேற்ற முன்னேற்றத்துடன் அவரவர் விருப்பமான நடிகர்களை முன்னிறுத்தும் வகையில் ரசிகர் மன்றம் மற்றும் நற்பணி மன்றம் என்று உதவி செய்வது சேவை செய்வது. என் தலைவனுக்காக எத வேணாலும் பண்ணுவான் என்று சொல்வது மட்டும் அல்லாமல் அதை கண் மூடிதனமாக செய்யும் ரசிகர்கள் கூட்டம் அதிகமாகிக்கொண்டே போகுது. கட் அவுட்டுக்கு பால் ஊற்றுவது. பெரிய பேன்னர் அடிப்பது, வெடி வைப்பது, முதல் நாள் முதல்  ஷோவுக்கு போவது என்று ஒவ்வொரு ரசிகளும் பலவகையான அன்பை விருப்பமான நடிகர்களுக்காக செய்வது எப்போதுமே வாடிக்கையாகி விட்டது.
 
தம் விருப்பமான நடிகர் நம்முடன் பேசிக்கொண்டிருப்பது போலவே நினைத்துக்கொண்டு இருப்போம். அதை விட நாமே அந்த நடிகர் போன்ற தோரணையில் சில தருணங்களில் நினைத்துக்கொள்வோம். மேலும் நடிகர்கள் வேடம் போட்டு திருவிழா காலங்களில் மக்களை மகிழ்விக்கும் சில கலைஞர்கள் கண்டிப்பாக அவர் போடும் வேடத்திற்கு உரித்தான நடிகர் மீது ஆழ்மான காதல் கொண்டவர்களாக கூட இருப்பர்.
 
அவ்வாறு எம்.ஜி.ஆர் முதல் விஜய் சேதுபதி வரை ஆறு முதல் அறுபது வரை பலதரப்பட்ட ரசிகர்களும், அந்த நடிகர்கள் மீது காதல் கொண்டு அந்த நடிகருடைய கதாபார்த்திரமாக வேடம் போடும் வாழுபவர்கள் ஏராளம். ஆனால் திரையில் இருப்பவர்களின் வெற்றியில் பாதி அளவை கூட தொடாமல்தான் இருக்கின்றனர். அதற்கு என்ன காரணமென்றால் அப்டேட் அகாமல் ஒரே காணோட்டத்தில் வாழ்வதாக கூட இருக்கலாம். 
 
அப்படிதான், தான் எம்.ஜி.ஆரின் மறுபிறவி... ஒரு நாள் அவர போலவே திரையில் மின்னுவேன் என்று அவர் அந்த காலத்தில் படங்களில் செய்தாக கருதப்பட்ட அனைத்தும் செய்து நான்தான் எம்.ஜி.ஆர் என்று ஒரு வாழ்க்கையை அவன் தன் கடைசி காலம் வரை வாழ்கின்றான். ஆனாலும் எம்.ஜி.ஆர் னா எம்.ஜி.ஆர் தான் அவர் இடத்த பிடிக்கவே முடியாது நினைக்கறான். இதுவே இந்த குறும்படம்.
 
 
நாபோ பிறரைப்பார்த்து ரோல் மாடல் எடுத்துக்கலாம் ஆனால் அவருடைய ரோலாகவே இருக்க நினைக்கக் கூடாது. 
நம்பிக்கை, உழைப்பு, அப்டேட், விடாமுயற்சி இருந்தால் கண்டிப்பாக ஒரு நாள் ஜெயிக்கலாம்.
 
-கீதாபாண்டியன்
Published in Cine bytes
பொள்ளாச்சி பிரச்சனை 
 
பண்ணை வீடு என்ற குறும்படத்தில்  கடந்த சில நாளுக்கு முன்பு நேர்ந்த பொள்ளாச்சி பிரச்சனையை மையமாக வைத்து கொஞ்சம் கற்பனை நயத்துடன் எடுத்துள்ளனர். 
 
உண்மையாக நடந்த பொள்ளாச்சி பிரச்சனை மிகுந்த பரபரப்பை மக்கள் மத்தில் ஏற்படுத்தியது.  
போலீஸ் மற்றும் ஊடகம் சார்ந்து பல வித தாக்கத்தை மக்கள் மனதில் பயத்தை விதைத்தது.
 
இந்த குறும்படம் மையக்கருத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. மேலும் போரப்போக்கை பார்த்தால், ஒரு மில்டரி மேன் வந்து தான் பெண்களை நாசம் செய்ய நினைக்கும் கூட்டத்தை அழிக்க முடியும் என்று சொல்லியுள்ளனர். ஒரு பெண்ணிற்கு ஒன்னுனா ஒட்டுமொத்த பெண் போலீஸ்சும் கூடுவார்கள் என்றும் சொல்லுது கதை. 
 
மேலும் அரசியல்வாதிகளின் தகுதி என்ன? என்ற கோபத்தையும் குறும்பட வசனங்கள் யோசிக்க வைக்குது. அவர்களுடைய கெட்டபுத்தியுள்ள மகன்களின் கொடுக்கை அறுக்கும்  வழிகளையும் உச்சக்கட்டம் சொல்லுது.
 
ஆனால் அதில் வரும் ஒரு வசனத்தை கேட்கும்போது, "பெண்ணே நீ பிணமாக இருந்தாலும் பத்திரமாக இரு" அப்பக்கூட பெண்ணை பத்திரமா இருக்கச்சொல்லுது சமூகம் என்று தான் நினைக்க தோன்னுது. 
 
-கீதாபாண்டியன்
 
Published in Reviews

Calendar

« April 2024 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30