Log in

Register

ஜீலை-1 உலக நகைச்சுவை தினம். உலக நகைச்சுவை நடிகர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.???
 
 நகைச்சுவை னு சொல்லும்போது மக்களை சிரிக்க வைக்கும் உள்ளங்கனே சொல்லலாம். சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே னு சொல்லுவாங்க. அந்த மாதிரி இவர்களை பார்த்து சிரித்து நாம் ஆரோக்கியமாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். சிரிக்க வைப்பதும் நம்மை சிந்திக்க வைப்பதும் ஒரு கலை. அந்த கலையைச்செய்யக்கூடிய பல நடிகர்கள் இருக்கிறார்கள். 
 
நகைச்சுவைக்குனு தனியா ஒருத்தர் இருக்கனும் என்கிற அவசியமில்ல. ஏன்னா யோசித்துப்பார்த்தால் நாமே ஒரு காமெடி சென்ஸ் இருக்கின்ற கூட்டம்தான். அவர்களுக்குள் இருக்கும் சோகத்தை மறைத்து நம்மை சிரிக்க வைக்கும் கலைஞர்கள் பலர். அவர்களுக்கு மீண்டும்யொரு மனமார்ந்த நன்றி.
 
Published in Actors
இயக்குநர் விசு படமென்றாலே நிறைய கதாபத்திரங்களை கொண்டவர்கள் இருப்பாங்க. ஒவ்வொரு கதாபாத்திரமும் தரமான உறவைகளை ஞாபகப்படுத்தும். இந்த படம் பட்டுக்கோட்டை பெரியப்பா, பாதியிலிலே நின்னுப்போன தன்னோட தம்பி மகன் கல்யாணத்த அழையா விருந்தாளி பெரியப்பா வந்து எப்படி நடத்தி வைக்கறாரு என்பதுதான் கதை. அதுல எனக்கு பிடித்தது, ஒரு சில விஷயம் என் மனதில் பதிந்த விஷயத்த பகிர்றேன்.
 
பார்த்தத்தில் பிடித்தது
 
1) 38 வயது நிரம்பிய கல்யாணமாகாத கல்யாணமாக ஆசையே இல்லாத பெண். தைரியமானவள். ஒரு நிறுவனத்துல president யாக இருக்கக்கூடியவளுக்கு தான் ஒரு தலைவிக்கு நிகரானவள் என்ற கணம் இருக்கு. தன்னோட புகழ பாடனும். தன்னைப்பற்றி எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும். தான் சொன்ன உடனே ஏன்னுக் கேக்காம செய்யுறவங்க தன்னோட இருக்கனும். இப்படி எல்லாம் இருக்கனும் என்று ஆசையுள்ள ஒரு பெண். 
 
2) இந்த கதையின் நாயகன். வாய திரிந்துப்பேச தெரியாத பையன். அம்மா சொல்லறது செய்யறது எல்லாம் சரினும் உண்மையுனும் நம்பக்கூடியவன். இவனுக்கு கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை. அதான் அம்மாவும் வேணாம். அம்மா வேண்டாம்னு சொல்லற பொன்னும் வேணும். இப்படியொரு ஹீரோவா...
 
3) இந்த படத்தின் கதாநாயகி, தன் வாழ்க்கையின் முடிவை தான் எடுக்க முடியலையே. அம்மாவும் அண்ணனும்தானே எடுக்கறாங்க. எனக்கு வேணும், எது மேல எனக்கு ஆசைனு கேக்க கூட மாட்டறாங்கனு ஏங்கிப்போயி சிவனேனு ஒரு வாழ்க்கை வாழும் பொன்னு.
 
4) கதாநாயகனோட சொந்த தாய் மாமா. 40 வயது ஆச்சு எனக்கொரு கல்யாண பண்ணி வைக்க அக்காக்கு தோன்னலையே..இப்படி எப்படா எனக்கு கல்யாணமாகும் நாக்க தொங்க போடும் திரியுற ஆள்ளு. இவனுக்கு கல்யாணம் ஆகலனு  கல்யாணமாக போறவங்கள பிரிச்சுல விடறான்.
 
5) தலைவிக்கு ஒரு தம்பி, அவன் ஒரு டி.டி.ஆர் அதனாலையோ என்னவோ தெரியல. அவன் வாயில இருந்து வர வார்த்த எல்லாமே டிரெயின் சமந்தமதான் இருக்கும். டிரெயின் பத்தி பேசாம இருக்கவே முடியாது அவனால. அதுமட்டும் கல்யாணம் அப்படினு தனக்கு ஒன்னு நடந்தா அதுல ஒரு தியாகம் இருக்கும்னு நினைப்பவன்.
 
6) அப்படி இவன் பண்ண தியாகம். என்னன்னா,  பிறந்ததுல இருந்து ஆம்பிள குறள் ல பேசற 
பொன்னுக்கு பெருந்தன்மையா வாழ்க்கைக்கொடுத்திட்டான். 
 
7) இத தாண்டி, கதாநாயகன் வேலைச்செய்யற ஆபிஸ் ல ஒரு களக். பார் டைம் மா கை ஜோசியம் பாக்கறான். அவனுக்கு கொஞ்சம் சபல புத்தி. ஜோசியம் பாக்கறேனு சொல்லி எல்லா பொன்னுகளையும் தொடுவான். அதனால ஆபிஸ் ல ஒரு குண்டு கட்டி அதுக்குள்ளே வேலைச்செய்ய சொல்லிருப்பாங்க. அது ரொம்ப காமெடியா இருக்கும். நடைமுறையில அப்படி நடந்தா வேலைய விட்டே தூக்கிடுவாங்க. 
 
இப்படி பல கதாபாத்திரங்கள் நிறைந்த இந்த படத்தில் எனக்கு பிடித்த சில  கதாபாத்திர வடிவமைப்புகள் தான் இப்படத்தைப் பற்றிய தன்னுடைய பகிர்வு. 
 
-கீதாபாண்டியன்
 
Published in Classic Movies
காக்டெய்ல் டீஸ்சர் வந்திருச்சு
 
ஒவ்வொரு நகைச்சுவை நடிகருக்கும் தமிழ் சினிமா ல ஒவ்வொரு காலகட்டம் இருந்திருக்கு. அந்த டைம்ல அவங்களோட ராஜ்ஜியம்தான் படம் முழுவதும் இருக்கும். அவங்களுக்காவே வசனம், கதை, எக்ஸ்ரா காட்சிகள், அவங்க கைக்காட்டற துணை நகைச்சுவை நடிகர்கள்னு எல்லாத்துலையும் அவங்க பங்கு கண்டிப்பா இருக்கும். 
 
அந்த வகையில புது மாப்பிள்ள யோகிபாபுக்காட்டுல இப்ப மழைதான். 
 
காக்டெய்ல் படத்து டிஸ்சர் இப்ப வைந்திருக்கு. புது திறமையான ஏற்கனவே மக்களுக்கு பரிச்சியமான பலர் யோகிபாபோடு இணைந்து நடிச்சிருக்காங்க. 
 
மெரசல் விஜய் மாதிரி டீஸ்சர் ல தனது என்டிரீய கொடுக்கற யோகி. ஒரு டான் போல பாவணையில வராரு. ஆனா டான்கறது அவரோட பெயருகறது ஒரு மொக்கையான விஷயம். அவருக்கே உரித்தான நக்கல் பேச்சும் துணை நடிகர்களோட கெமிஸ்டீரியும் நல்லாவே இருக்கு.
 
ஒரு அழகான காதல் கதையும்  யோகிக்கு இருக்கு. படத்துல ஒரு சிலை சமந்தமான விஷயத்துல ஒரு கும்பல் மாட்டி தவிச்சிருக்காங்க.  அது எதனால? எப்படி தப்பிப்பாங்க? மேலும் யோகிபாபோட என்டர்டைம்மென்ட் பேக்கேஜாக வருது காக்டெய்ல்.
 
-கீதாபாண்டியன்
Published in Cine bytes
டிரைலர் எப்படி இருக்கு? 
 
நாட்டுல எவ்வளவோ கொட்டிய நோய் இருக்கு. எவ்வளவோ குறை இருக்கற மக்களும் இருந்திருக்காங்க. 
 
அதுல குழந்தை இல்ல அப்படிங்கறது ஒரு குறையாக இருந்த காலம் போயி அதொரு வியாதியாக மாறிய காலத்திற்கு வந்திட்டோமோனு யோசிக்க வைக்குது டிரைலர்.
 
புதுசா இணைந்திருக்க கூட்டணி ஹரிஸ் விவேக் கூட்டணி. விவேக் சினிமாவின் மிடில் காலத்துல இருந்து பல கருத்துக்களைச் சொல்லி யோசிக்க வைக்கற வகையில நகைச்சுவை பண்ணிட்டு வந்திருக்காரு. இன்றைய பல முன்னால் நடிகரோட முதன்மையான பல காமெடிகளில் இவருக்கும் முக்கிய பங்கு இருக்கு. அந்த மாதிரி கடந்த சில வருடமாக இன்றைய பல புது நடிகர்களோட வெற்றி கூட்டணி அடிக்கறாரு விவேக்.
 
இந்த படத்துல காமெடிக்கு பஞ்சமே இல்ல. மருத்துவர் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்காரு. இந்த காலத்துல கல்யாணமானவங்களுக்கு குழந்தை இல்லங்கறது ஒரு பிரச்சனை என்றாலும் இப்படியொரு நிலைக்குப்போறதுக்கு Health condition சரியாகவும் இல்லை என்பதும் முக்கியமான பாய்ன்ட்.
 
இந்த நிலை நீடித்துக்கொண்டே போனால், கண், சிறுநீரகம், இதயம் மாற்றுச்சிகிச்சை பண்ணற மாதிரி நல்ல Healthy யான ஆண் உடம்புல இருந்து "ஸ்பேம்" எடுத்து பெண்கள் உடலில் செலுத்துவதுப் போன்ற சிகிச்சை பண்ணி குழந்தைப்பிறக்க வைப்பதான் ஒரே வழி.
 
நம் சுற்றுச்சூழல், உடலுக்கு கேடு தருக்கிற உணவு மற்றும் போதைப்பொருள்கள், மரபணு பிரச்சனை போன்ற எதோயொரு காரணத்தினால், நமது அடுத்த சந்ததியை நம்மால் உருவாக்க முடியாமல் போனால்  நமக்கு குழந்தைப்பிறக்க ஸ்பேம் கூட கடன் வாங்கிதான் அடுத்த சந்ததியை உருவாக்க முடியும் என்று தற்கால பிரச்சனை உடைய தீர்வை படத்துல சொல்லிருக்காங்க போல.
 
அப்படியொரு விஷயம் நடைமுறைக்க வர,  இது சரி தவறா? கலாசாரம் இடம் கொடுக்குமானு பல எதிர்ப்புகளையும்  டிரைலர்ல காட்டிருக்காங்க. அப்படி ஸ்பேம் கொடுக்கறனால டோனேட் பண்ணறவங்க வாழ்க்கையில வருகிற பிரச்சனை பற்றியும் படம் பேசிருக்குப்போல. 
 
நகைச்சவை கலந்து, ஒரு முக்கியமான பிரச்சனைக்கு தீர்வுச்சொல்லிருக்கு படம். யாருக்கெல்லாம் ஸ்பேம் வேணுமோ தாராளமா அள்ளிக்கொடுத்திருக்காரு ஹரிஸ். தாராள பிரபு டிரைலர் எப்படி இருக்கு.. 
 
உங்களுக்கு "ஸ்பேம்" வேணுமா? விரைவில் திரை அரங்கில்
 
-கீதாபாண்டியன்
Published in Cine bytes
ஒரு மனிதன் ஒரு டீ குடிச்சா, இவ்வளவு எச்சரிக்கையா.
 
ஒரு டீ கடைக்கு போனாவே சிகரெட் புகைப்பிடிச்சு முகத்துல விடறாங்க. அவனை ஒரு பார்வை பார்த்து திட்டிட்டு உள்ள போயி, ஒரு பால் குடிக்கலாம்னு முடிவு பண்ணா, நல்லா கழுவாத டம்ளர் ல போடறாங்க. 
 
"டீ குடிக்காதீர்கள் கடைசி எச்சரிக்கை"
 
சரி, பேப்பர் கப்புல குடிக்கலாம்னு நினைச்சு சொன்னா, கடைக்காரன் பொறைக்கறான். பேப்பர் கப்புல கடைக்காரர் போடறத பார்த்து வெளிய சிகரெட் பிடிக்கறவன் சொல்லறான்.
 
"சிகரெட் பிடிக்கறத விட பேப்பர் கப் தான் கேன்சருக்கு உதவி பண்ணுது தெரியுமா"னு. மனசு அப்படி படபடக்குது. பயந்துப்போயி, கிளாஸ்லேயே போட்டு கொடுங்கனு கேட்டா அதுக்கொரு பொறைப்பு. 
 
சரினு பக்கத்துல ஓடற டிவிய பார்த்தால், யாரோயொரு அமைச்சர், "ஆய்வில் பாலில் கலப்படம், அதனால நுரையீரல், சீறுநீரகம் பிரச்சனை வரும்னு சொல்லறாரு". 
 
மறுபடியும் பயந்துப்போயி, அண்ணாச்சி பால் வேணாம் ஒரு டீ மட்டும்னு சொன்னா, கடைக்காரன் சாக் அகறான். பக்கத்துல வந்து உக்காரவன், ரேடியோ வ போட்டுட்டு, கீரின் டீ கேக்கறான்.
 
ரேடியோல, "டீ பேக் கிழியாம இருக்கனும்னு வேதிப்பொருள் சேர்க்கறாங்க. முக்கியமா இந்த வேதிப்பொருள், புற்றுநோய் உண்டாக்குது சொல்லறாங்க"  அப்படி தேசிய சுகாதார நிறுவனம் சொல்லுதாம்.
 
இதப்பத்தி குடிக்கரவன் பொருள் படுத்தல்ல. நமக்குதான் படபடப்பாக இருக்கு. டீ மாஸ்டர் டேன்ஷன் ஆகி, ரேடியோ வ ஆப் பண்ணறாரு.
 
நம்ப மேல இருக்கற கடுப்புல, டீயை கொண்டு வந்து டம்முனு வைப்பான். சரி டீ குடிக்கலாம்னு நினைச்சு வாயில வைச்சா, ஒரு பார்வெட் மேசேஜ் வருது. 
 
அதுல, "நம்ப முடியுதா,  ஒவ்வொரு கோப்பை தேநீர்லையும் உலக நாடுகள் தடுத்த செய்துள்ள 13 வகை புச்சிக்கொல்லிகள் ரசாயனங்கள் கலந்துள்ளது" என்று சொல்லும்போதே உயிருக்குப் பயந்து டீ கீழ ஊற்றினா, கடைக்காரன் பொறைக்கறான். 
 
சரி, பரவாலனு குடிக்காத டீக்கு காசு கொடுத்தா 12 ரூபாய் கேக்கறான். 8 ரூபாய் க்கு டீ ஜிஎஸ்டி வேற கேக்கறாங்க. சரி ஜிஎஸ்டி புதிவு நம்பர் கேட்டா, கேவலமா திட்டிட்டு வாயிலையே குத்தறான். 
 
ஒரு மனிதன் ஒரு டீ குடிக்க, இவ்வளவு எச்சரிக்கையா .வேற என்னன்ன இருக்கப்போகுதோனு படத்துல பார்க்கலாம்.
 
கடைசி எச்சரிக்கை
GeethaPandian
 
Geetha Pandian
Published in Cine bytes

Calendar

« March 2024 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
        1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 31