Log in


காட்சி ஆரம்பித்தவுடன் அப்படியே சரிந்து அமர்ந்துகொள்வேன். ஆடியன்ஸ் என்ன சொல்வார்களோ எனப் பதட்டமாக இருக்கும். இவை மணிரத்னம் சொன்ன வார்த்தைகள். அவருக்கே இப்படியென்றால், முதல்முறை இயக்கியிருக்குகும் எனக்கெல்லாம் உதறும் என்றுதான் நினைத்தேன். ஆனால் அப்படி ஏதும் நடக்கவில்லை. ஒருவேளை மணிரத்னம் பேட்டியைப் பார்த்து தைரியமாகிவிட்டேனோ!
 
 
Focus Audience show - என்பது வழக்கமான ப்ரிவியூ அல்ல. படம் முடிந்ததும் ஆடியன்ஸ் ஒவ்வொருவரிடமும் அவர்கள் கருத்தைக் கேட்டு, அதை பதிவு செய்து கொள்வது. பிறகு நமது குழுவுடன் அந்தக் கருத்துக்களை அலசி, அதற்கேற்ப படத்தில் மாற்றங்களை செய்யலாமா? வேண்டாமா? என்பதை தீர்மானித்துக் கொள்ளலாம். ரிலீசுக்கு முன் இதைச் செய்ய சிறப்புத் துணிச்சல் வேண்டும். ஏனென்றால் அந்தக் கருத்துகள் நம்மை குழப்பிவிடக்கூடும்.
குழம்பிப் போன அனுபவம் எனக்கு ஏற்கனவே இருந்தது. ஏனென்றால் Focus Audience show-விற்கான முன் தயாரிப்புகள் ஏதும் இல்லாமல், சிறப்புக் காட்சிகளுக்கு ஏற்பாடு செய்துவிட்டேன். இம்முறை சற்று தெளிவாக நடந்து கொண்டதால், கருத்தைக் கேட்ட எனக்கும், படம்பார்த்து கருத்தைச் சொன்னவர்களுக்கும் எந்தக் குழப்பமும் இல்லை.
 
கடந்த மாதம் சித்ரா லட்சுமணன் ”படம் எந்த ஸ்டேஜ்ல” இருக்கு என்று அக்கறையுடன் விசாரித்து, சில யோசனைகள் சொன்னார். அதற்குப்பின்னர்தான் Focus Audience show நடத்தினேன். ஓவியர் ஜீவா, ”படத்தைக் காட்டவே மாட்டீங்களா?” என்று அவ்வப்போது செல்லமாகக் கடிந்து கொள்வார். இன்று நண்பர் ஆந்தைக் குமார், சில யோசனைகள் சொன்னார். எனது சகோதரர் ரவிகுமார், படத்தில் சித்தப்பா சோலை ஆகிய இருவரும் தினசரி ”ரிலீஸ் திட்டம்” பற்றி கேட்கத் துவங்கிவிட்டார்கள்.
 
சிறப்புக் காட்சியில் ஆடியன்ஸ் தந்த தெம்பில் கூறுகிறேன், நான் இயக்கியுள்ள யாதெனக்கேட்டேன் விரைவில் ரிலீஸ்!
 
- ISR Selvakumar, YadenaKaten Director
Published in Yadena Kayten

எல்லாத்தையும் அந்த சாமி பாத்துப்பாருன்னு இருப்பவங்க அதிகம் அலட்டிக்கமாட்டாங்க.

கடன், கல்யாணம், குழந்தை, வேலை உட்பட எப்படி வேதனை வந்தாலும் கடவுள் காப்பாத்திட்டார் என்று சொல்வதற்கு அவர்களிடம் ஒரு கதை இருக்கும்.

அப்படி ஒரு கதை உங்களிடம் இருக்கா?

 

Published in ISR Selva speaking

அந்த நேரத்துல கடவுள்தான்  என்னை காப்பாத்தினாரு, என்று சொல்லாதவரே இல்லை.

எல்லோருக்கும் அப்படி ஒரு தருணம் இருக்கும். உங்களுக்கும்தான்!

உங்களை கடவுள் தான் காப்பாற்றினார் என்று நீங்கள் உணர்ந்த தருணம் எது? எதிலிருந்து கடவுள் உங்களை காப்பாற்றினார்?

 

Published in ISR Selva speaking

கடவுளைப் பற்றி படங்கள் வந்திருக்கின்றன. ஆனால் ”அனுபவம்தான் கடவுள்” என்று சொல்கின்ற படம் ஏதாவது வந்திருக்கிறதா? யாதெனக்கேட்டேன் இந்த கேள்விக்கான விடை. ஐ.எஸ்.ஆர் வென்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை ஐ.எஸ்.ஆர் செல்வகுமார் இயக்கியிருக்கிறார். திரைப்பட இயக்குநராக அவருக்கு இது முதல் திரைப்படம்.

 

Published in ISR Press Release
ஜெய் பீம் சாதனை!
 
ஆஸ்கர் (2022) விருதுக்குப் போட்டியிடும் படங்களின் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறது ஜெய் பீம். ஆங்கிலம் அல்லாத படங்களின் பட்டியலில் இடம் பிடித்திருப்பது தமிழ் சினிமா இரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கியிருக்கிறது. குறிப்பாக சூர்யா இரசிகர்கள் இப்போதே கொண்டாடடத் துவங்கிவிட்டார்கள். அதற்கு காரணமும் இருக்கிறது. கடந்த வருடம் சூரரைப் போற்று படமும் ஆஸ்கர் விருதுக்குப் போட்டியிட்ட படங்களில் ஒன்றாக இருந்தது. அதனால் இரட்டை மகிழ்ச்சியில் சூர்யா இரசிகர்கள் இப்போதே ஜெய் பீம் படத்துக்கு ஆதரவாக ஆன்லைனில் பதிவிடத் துவங்கிவிட்டார்கள்.
 
என்னைக் கேட்டால் ஜெய் பீம் படம் நிச்சயம் சர்வதேச தரத்தில் உள்ளது என்றுதான் சொல்லுவேன். நடிப்பு, இயக்கம், இசை, ஒளிப்பதிவு என எல்லாமே சர்வதேசத் தரம்தான். குறிப்பாக மணிகண்டனும், லிஜாமோலும் வேறு எவருடனும் ஒப்பிடவே முடியாத அர்ப்பணிப்புடன் நடித்திருக்கிறார்கள். அவர்களை இதற்கு முன் அறிந்திராதவர்கள் அவர்கள் நிஜமாகவே பூர்வகுடிகள்தான் என்று நினைத்துவிட வாய்ப்பு உண்டு. மற்ற நடிகர்களும் அவர்களுக்கு ஈடு கொடுத்து நடித்திருக்கிறார்கள். இசையிலும், ஒளிப்பதிவிலும் தங்களால் சர்வதேச தரத்தை எட்ட முடியும் என்று நிருபித்திருக்கிறார்கள். முத்தாய்ப்பாக இயக்குநர் ஞானவேல் ஒவ்வொரு நொடியையும் மறக்கவே முடியாத தருணங்களாகத் தந்திருக்கிறார்.
 
ஆஸ்கரோ, கோல்டன் குளோபலோ எதுவாக இருந்தாலும் அந்த ஜுரிகளை பார்க்க வைப்பதுதான் இப்போது தயாரிப்பாளருக்கு உள்ள சவால். அவர்களில் பெரும்பாலான ஜுரிகளை பார்க்க வைத்துவிட்டால், விருது கை கூட வாய்ப்பு அதிகம் உள்ள படம்தான்.
ஆஸ்கர் விருது பெற்றவரும், ஆஸ்கர் தேர்வுக் குழுவில் ஒருவருமாக இருந்த ஏ.ஆர்.இரகுமானிடம் தயாரிப்பாளர் யோசனை கேட்கலாம். அது ஜெய்பீம் படத்துக்கான வாய்ப்பை அதிகமாக்க உதவும்.
 
ஜெய் பீம் படக் குழுவினர் அனைவருக்கும் ஐ.எஸ்.ஆர் வென்சர்ஸ் மற்றும் யாதெனக்கேட்டேன் குழுவினர் சார்பில் ஆஸ்கர் வெல்ல வாழ்த்துகள்!
 
-ஐ.எஸ்.ஆர் செல்வகுமார்
Published in ISR Selva speaking