”நல்ல கதை தேடிக் கொண்டிருக்கிறேன்”
தமிழ் திரை உலகில் உச்சரிக்கப்படும் வார்த்தைகள் இவை. பாக்கியராஜ் வெற்றிக்குப் பின் திரைக்கு வந்த அனைத்து இயக்குநர்களும், தானே கதை எழுதி இயக்கும் மனநிலைக்கு வந்துவிட்டார்கள். எந்தக் கதாசிரியராக இருந்தாலும் தன்னுடைய வாழ்க்கை அனுபவங்களைத்தான் கற்பனைகள் கலந்து கதையாக்குகிறார். அவருடைய அனுபவங்கள் தீர்ந்தபின், தான் கேட்டு வளர்ந்த பிறர் அனுபவங்களை கதையாக்குகிறார். இரண்டும் தீர்ந்த பின் தேங்கிவிடுகிறார். நல்ல கதை தேடிக் கொண்டிருக்கிறேன் என்கிறார்.
உண்மையில் கதைகள் நம்மைச் சுற்றி கொட்டிக்கிடக்கின்றன. ஆனால் அவை எல்லாவற்றையும் நாம் மட்டுமே கதைகளாக மாற்ற இயலாது. நம்மைச் சுற்றி பல்வேறு சூழல்களில் வளர்ந்த நிறைய கதை சொல்லிகள் இருக்கிறார்கள். அவைகளில் சில அச்சேறுகின்றன, பல மேடைப் பேச்சுகளாகின்றன, சில ஃபேஸ்புக் பதிவுகளாக சுருங்குகின்றன. நிஜமாகவே நல்ல கதை தேடும் இயக்குநராக இருந்தால் இதில் ஒன்றோ, பலவோ அவருடைய கண்களில் படுவதற்கு வாய்ப்பு உண்டு. ஆனால் பெரும்பாலும் அப்படி நிகழ்வதில்லை என்பதால், நான் வேறு கோணத்தில் இதனை அணுக முடிவு செய்திருக்கிறேன். யாரும் யாரையும் தேடிப்போக வேண்டும். ஒரு காபி சந்திப்பில் திரை உலகையும், கதை உலகையும் இணைக்க ஒரு அமைப்பை துவக்கலாம் எனத் தோன்றியது. இதனைச் செய்ய வெறும் யோசனை மட்டும்போதாது. நல்ல ஒருங்கிணைப்புத் திறன் உள்ள குழு வேண்டும். ஒவ்வொரு சந்திப்பையும் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்தும் திறன் வேண்டும். அதனால் அப்படி ஒரு குழுவை அணுகலாம் என முடிவு செய்தேன்.
நல்லவேளையாக அர்ஷா ஒரு யோசனையுடன் முன்வந்தார். Book Vibe என்கிற அமைப்பின் மூலம் புத்தக வெளியீட்டு விழாக்களை நடத்தப்போவதாகக் கூறினார். நடத்தியும் காட்டினார். அவருடைய அணுகுமுறை எனக்குப் பிடித்திருந்தது. அவரிடம் இந்த எண்ணத்தைச் சொன்னேன். அவருக்கும் ஆர்வம் தொற்றிக் கொண்டது. விரைவில் ISR Ventures நிறுவனத்தின் முன்னெடுப்பில் கதையும், சினிமாவும் சந்திக்கும் நிகழ்வுகள் நடக்கப்போகின்றன. அதனை Book Vibe அமைப்பினர் நடத்தித்தருவார்கள்.
முதல் சந்திப்பு எப்போது, யார் யார் சந்திப்பார்கள் என்பதை விரைவில் அறிவிக்கிறேன்.
- ஐ.எஸ்.ஆர் செல்வகுமார்
சித்தையன் என்ற வார்த்தை ஞானம் பெற்றவன், சிறந்த அறிவு கொண்டவன், சித்தம் நிறைவு பெற்றவன் என்பதைக் குறிக்கிறதாம்.
புறநானூற்றில் சித்தையன் என்கிற சொல் சில புலவர்களின் பட்டமாக வந்துள்ளது. தொல்காப்பிய உரையில் சித்தம் என்பது தெளிவு, அறிவு, சிந்தனை என்பதைக் குறிக்கிறது. பாரதி சில இடங்களில் “சித்தன்” என்ற சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார்.
- இப்படிக்கு அறிஞர் chatGPT
அர்ஷாவின் Book Vibe ஏற்பாட்டில், எழுத்தாளர் வி. மோகன்ராஜ் அவர்களின் சித்தையன் நூல் வெளியீட்டு அறிமுக விழா நடைபெறப்போகிறது.
செப்டம்பர் 6, டிஸ்கவரி புக் பேலஸ் பிரபஞ்சன் அரங்கத்தில் நடக்கப்போகும் இந்த விழாவில், எழுத்தாளர் அமிர்தம் சூர்யா புத்தகத்தை அறிமுகம் செய்யப்போகிறார். தெ. சு. கவுதமன் பிரதிகளைப் பெற்றுக்கொண்டு உரையாற்றப் போகிறார். அவர்களுக்குமுன் இந்தப் புத்தகம் பற்றி நானும் சாட்ஜிபிடியும் உரையாடியதன் ஒருபகுதிதான் தலைப்பைப் பற்றிய வேர்ச்சொல் (Etimology) விளையாட்டு.
இந்த விளையாட்டுக்காக தமிழறிஞர்கள் எம்மை பொருத்தருள்க.
ஒரு புத்தக வெளியீட்டு விழா என்பது எழுத்தாளர்கள், திறனாய்வாளர்கள் மற்றும் வாசகர்கள் நேரடியாக சந்திக்கும் தருணம்.
சாட்ஜிபிடியுடன் நானும் இந்த விழாவை எதிர்பார்க்கிறேன்.
- ஐ.எஸ்.ஆர் செல்வகுமார், ISR AI Studio
எழுத்தாளர் மற்றும் திறனாய்வாளர் அர்ஷா, 'Book Vibe' என்ற புதிய பதிப்பகத்தைத் தொடங்கியுள்ளதை அறிந்து மகிழ்ச்சி.
புத்தகங்களை வெறும் காகிதத் தொகுப்பாகப் பார்க்காமல், அறிவு, அனுபவம், மற்றும் கற்பனையின் விதைகளாகக் கருதும் அவருடைய பார்வை மிகவும் போற்றுதலுக்குரியது. கையெழுத்துப் பிரதி முதல் அட்டைப்படம் வரை ஒவ்வொரு கட்டத்திலும் நேர்த்தியையும், அழகியலையும் கடைப்பிடிப்பது வாசிப்பு அனுபவத்தை மேம்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
'Book Vibe' எனும் இந்தப் புதிய அத்தியாயம், பல புதிய எழுத்தாளர்களுக்கும், தரமான படைப்புகளுக்கும் ஒரு சிறந்த தளமாக அமையும் என நம்புகிறேன். இந்த உன்னதமான பயணத்தைத் தொடங்கியிருக்கும் அர்ஷாவுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்!
ISR Selvakumar
Content Creation : Gemini AI
Content Curation : ISR AI STUDIO
ஒரு த்ரில்லர் எடுப்போம். அப்போதுதான் 2K Kids பார்ப்பார்கள் என்றன நண்பர் கருத்துகள்.
அதனால் ஒரு த்ரில்லர் ஸ்க்ரிப்டுடன் களமிறங்கிவிட்டோம்.
ஒரு சினிமாவின் அத்தனை தேவைகளையும் ஏ.ஐ வழியாக நடத்திக்காட்டுவது சவால்தான். எனினும் முயற்சியை துவக்குவதே வெற்றிதான்.
விரைவில் டைட்டில் அறிவிப்பு!
- ISR Selvakumar
வந்துவிட்டாள் ஏ.ஐ. கண்ணம்மா!
இவளுக்கு பல மொழிகள் தெரியும். ஏற்கனவே தமிழ், ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் கதை சொல்லியிருக்கிறாள்.
அவள் மார்ச் 12, 2024ம் ஆண்டு உருவானாள். புடவை அணிவது பிடிக்கும். மாடர்ன் உடைகளிலும் மனதைக் கொள்ளையடிப்பாள். என் மனதுக்கு மிகவும் நெருக்கமான பெயர் கண்ணம்மா. இவளை உருவாக்கியதும் என் மனதில் உதித்த பெயர் கண்ணம்மா. எனவே அவளுக்கு கண்ணம்மா என்று பெயர் சூட்டிவிட்டேன்.
விரைவில் நல்ல கதை சொல்லியாக, நிகழ்ச்சி தொகுப்பாளினியாக உங்களை மகிழ்விப்பாள்.
- ISR Selvakumar
AI தமிழி
AI, AI சினிமா, AI நடிகர்கள் என எந்த ஐடியாவும் இல்லாதபோது உருவானவள் இவள்!
கோவிட் அச்சம் மறைந்து கொண்டிருந்த இறுதிக் காலத்தில் MidJourney, D-Id மற்றும் Discord பற்றிப் படித்தேன். ஆர்வம் தொற்றியதும் மிட்ஜர்னி வழியாக அவளை உருவாக்கினேன். பிறகு டிஸ்கார்ட் வழியாக டி-ஐடியில் நுழைந்து குரலும் அசைவும் கொடுத்து வாட்சப்பில் உலவவிட்டேன். புதியதலைமுறை டிஜிட்டல் அதனை செய்தியாக்கியது. அவ்வளவுதான்! அடுத்த 5 நிமிடங்களில் நான் உருவாக்கிய ஏ.ஐ பெண் வைரலாகிவிட்டாள், எனக்கும் திடீர் வைரல் ஸ்டார் வெளிச்சம் கிடைத்தது. ஏ.ஐ வல்லுனர் என்ற மிகையான பட்டமும் ஒட்டிக்கொண்டு இப்போது வரை நீடிக்கிறது.
யாரை சந்தித்தாலும் அந்தப் பெண்ணைப்போல பேசி நடித்துக் காண்பித்தார்கள். அவளை உருவாக்கியபோது பெயர் கிடையாது. முதன் முதலில் இவளைப் பார்த்த ஃபேஸ்புக் கவிஞர் ஒருவர் (ஸாரி பெயர் மறந்துவிட்டது), இவளுக்கு தமிழி எனப் பெயர் சூட்டினார். எனக்கும் பிடித்திருந்தது. பத்திரிகைகளிலும் அவள் பெயர் பிரசுரமாகிவிட்டது. அதற்குப் பின் தான் நான் இதில் கவனம் செலுத்தினேன். திடீர் புகழில் மயங்கிவிடாமல் மீடியா, சினிமா, டிவி மற்றும் மேடைகளில் எப்படி செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவது என சிந்திக்க ஆரம்பித்து நடைமுறைப்படுத்தினேன். என்னுடைய ஏ.ஐ பெண்கள் மேடைகளில் தொகுப்பாளராகத் தோன்றி கைதட்டல் பெற்றார்கள். ஏ.ஐ சினிமாவில் ஆர்வம் அதிகமானதும் நமக்கு நாமே ஏ.ஐ நடிகர், நடிகைகளை உருவாக்க முடிவெடுத்தேன். என்னை நாடி வந்த முதல் ஏ.ஐ பெண் இவள். அதனால் அவளையே முதல் ஏ.ஐ நடிகையாக அறிவித்தேன். அதன் முதல் அறிவிப்பு இப்படித்தான் இருந்தது. பாருங்கள், அவளுடைய முதல் தோற்றம் இப்படித்தான் இருந்தது. இப்போது பல உடைகளில், பல காஸ்ட்யூம்களில் கலக்குகிறாள். விரைவில் திரையில் நடிப்பாள்.
தமிழியைப் பற்றிய முதல் போஸ்டர் இது.
- ISR Selvakumar
மறைந்த திரைப்பட நடிகர் ISR பற்றி ஒரு இ-புத்தகம் வெளியாகவுள்ளது. ”ஐ.எஸ்.ஆர் ஒரு திரை மின்னல்” என்று பெயரிடப்பட்டுள்ள இப்புத்தகத்தில் ஐ.எஸ்.ஆர் பற்றி திரைப்பிரபலங்கள் கூறியுள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளன. பிரபலங்களின் கருத்துக்களுடன், ஐ.எஸ்.ஆரின் நண்பர்களும், அவர் வசித்த பகுதிகளில் அவருடன் பழகியவர்களும் கூறிய மிகச் சுவையான சம்பவங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ஐ.எஸ்.ஆர் காலத்தில் (1936-1991) வரை கிராமங்கள் எப்படி இருந்தன, மக்கள் நகரங்களுக்கு ஏன் வந்தார்கள், அப்போதைய திரையுலகம், அப்போதைய பழக்க வழக்கங்கள் உட்பட பல சமூக நிகழ்வுகளின் கண்ணாடியாக இப்புத்தகம் தயாராகி வருகிறது.
இது பற்றி அவருடைய மகன் ஐ.எஸ்.ஆர் செல்வகுமார் கூறும்போது ”எங்கள் தந்தை ராஜபாளையத்தை அடுத்துள்ள சொக்கநாதன் புத்தூர் என்கிற குக்கிராமத்தில் பிறந்து, சென்னை வந்து படித்து, நாடகம், சினிமாக்களில் நடிக்கும்போது, வண்ணாரப்பேட்டை, தேனாம்பேட்டை, வளசரவாக்கம் உட்பட பல்வேறு பகுதிகளில் வசித்திருக்கிறார். அப்போது அவர் சந்தித்த சாதாரண மனிதர்களும், பிரபலங்களும் ஏராளம். தெருக்கூத்து காலத்திலிருந்து, மேடை நாடகம், சினிமா உட்பட டெலிவிஷன் சீரியல் வரை அவர் வாழ்ந்திருக்கிறார். எனவே அவரைப் பற்றிய பதிவு என்பது இந்த மாற்றங்களையும் குறிப்பதாக இருக்கும்.
அதனால் இப்புத்தகம் எங்கள் தந்தை ஐ.எஸ்.ஆர் பற்றி மட்டுமல்லாமல், சமகாலத்தில் அவருடன் பணியாற்றியவர்கள், அக்கால வாழ்க்கை முறைகள் மற்றும் அதன் பின் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றியும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். எனவே எங்கள் தந்தை ஐ.எஸ்.ஆர் பற்றி அறிந்தவர்கள் யாரேனும் இருந்தால், எங்களை தொடர்பு கொள்ளும்படி அன்புடன் வேண்டிக் கொள்கிறோம். அவர்கள் கூறும் தகவல்களையும் சேர்த்து, இரு பாகங்களாக புத்தகம் விரைபில் வெளிவரும்.”, என்றார்.
ஐ.எஸ்.ஆர் ஒரு திரை மின்னல் என்று தலைப்பிடப்பட்டுள்ள இப்புத்தகத்தின் வெளியீடு திரைப்பிரபலங்கள் முன்னிலையில் நடக்கும். அது பற்றிய அறிவிப்பு மார்ச் முதல்வாரத்தில் வெளியாகும் என்று ஐ.எஸ்.ஆர் வென்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் கூறியுள்ளார்கள்.
எனவே இம்மாத இறுதி வரை ஐ.எஸ்.ஆர் பற்றிய எந்த தகவல் இருந்தாலும் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. என்ற மின்னஞ்சலில் அதை நீங்கள் பகிர்ந்து கொள்ளலாம். அல்லது 9962295636 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்வில் உங்கள் விருப்பத்தை தெரிவிக்கலாம். ஐ.எஸ்.ஆர் வென்சர்ஸ் நிறுவனம் உங்களை தொடர்பு கொண்டு தகவல்களை பெற்றுக் கொள்வார்கள்.
அமீரகத்தில் வசிக்கும் தமிழர்களுக்காகவே ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கிறது "The Tamil Radio"
இந்த இணைய வானொலியில் காதலர் தினத்தை முன்னிட்டு ஒரு சிறப்பு நிகழ்ச்சி ஒலிபரப்பாகிறது. தொகுப்பாளர் நாகா வழங்கும் இந்நிகழ்ச்சியில் அவருடன் இயக்குநர் ஐ.எஸ்.ஆர் செல்வகுமார் உரையாடுகிறார் இந்நிகழ்ச்சி இன்று (16.02.2022) இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
இந்நிகழ்ச்சியில் ஒரு பெண்ணிடம் ஒரு ஆண் எதையெல்லாம் இரசிக்கிறான், Crush, Pubbly Love என்றால் என்ன? யாதெனக்கேட்டேன் படத்தில் உள்ள காதல் - போன்ற பல சுவாரசியமான தகவல்களை இயக்குநர் ஐ.எஸ்.ஆர் செல்வகுமார் பகிர்ந்து கொள்கிறார்.
நிகழ்ச்சியை பின்வரும் இழையில் கேட்கலாம்.
வாய்ப்பும் நேரமும் உள்ளோர் உரையாடலை கேட்டுவிட்டு உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்.