காட்சி ஆரம்பித்தவுடன் அப்படியே சரிந்து அமர்ந்துகொள்வேன். ஆடியன்ஸ் என்ன சொல்வார்களோ எனப் பதட்டமாக இருக்கும். இவை மணிரத்னம் சொன்ன வார்த்தைகள். அவருக்கே இப்படியென்றால், முதல்முறை இயக்கியிருக்குகும் எனக்கெல்லாம் உதறும் என்றுதான் நினைத்தேன். ஆனால் அப்படி ஏதும் நடக்கவில்லை. ஒருவேளை மணிரத்னம் பேட்டியைப் பார்த்து தைரியமாகிவிட்டேனோ! Focus Audience show - என்பது வழக்கமான ப்ரிவியூ அல்ல. படம் முடிந்ததும் ஆடியன்ஸ் ஒவ்வொருவரிடமும் அவர்கள் கருத்தைக் கேட்டு, அதை பதிவு செய்து…