Print this page
Sunday, 31 August 2025 03:33

சித்தையன் - The Book Vibe begins with chatGPT

Written by
Rate this item
(1 Vote)

சித்தையன் என்ற வார்த்தை ஞானம் பெற்றவன், சிறந்த அறிவு கொண்டவன், சித்தம் நிறைவு பெற்றவன் என்பதைக் குறிக்கிறதாம். 
புறநானூற்றில் சித்தையன் என்கிற சொல் சில புலவர்களின் பட்டமாக வந்துள்ளது. தொல்காப்பிய உரையில் சித்தம் என்பது தெளிவு, அறிவு, சிந்தனை என்பதைக் குறிக்கிறது. பாரதி சில இடங்களில் “சித்தன்” என்ற சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார்.

- இப்படிக்கு அறிஞர் chatGPT

அர்ஷாவின் Book Vibe ஏற்பாட்டில், எழுத்தாளர் வி. மோகன்ராஜ் அவர்களின் சித்தையன் நூல் வெளியீட்டு அறிமுக விழா நடைபெறப்போகிறது.

செப்டம்பர் 6, டிஸ்கவரி புக் பேலஸ் பிரபஞ்சன் அரங்கத்தில் நடக்கப்போகும் இந்த விழாவில், எழுத்தாளர் அமிர்தம் சூர்யா புத்தகத்தை அறிமுகம் செய்யப்போகிறார்.  தெ. சு. கவுதமன் பிரதிகளைப் பெற்றுக்கொண்டு உரையாற்றப் போகிறார். அவர்களுக்குமுன் இந்தப் புத்தகம் பற்றி நானும் சாட்ஜிபிடியும் உரையாடியதன் ஒருபகுதிதான் தலைப்பைப் பற்றிய வேர்ச்சொல் (Etimology) விளையாட்டு.

இந்த விளையாட்டுக்காக தமிழறிஞர்கள் எம்மை பொருத்தருள்க.

ஒரு புத்தக வெளியீட்டு விழா என்பது எழுத்தாளர்கள், திறனாய்வாளர்கள் மற்றும் வாசகர்கள் நேரடியாக சந்திக்கும் தருணம்.
சாட்ஜிபிடியுடன் நானும் இந்த விழாவை எதிர்பார்க்கிறேன்.

- ஐ.எஸ்.ஆர் செல்வகுமார், ISR AI Studio

Read 162 times Last modified on Sunday, 31 August 2025 04:07

Latest from Admin ISR Ventures

Related items

Login to post comments